மனநலப் பிரச்னைகளில் மிகவும் பொதுவானவை மன அழுத்தம் (Stress) மற்றும் மனச்சோர்வு (Depression). மன அழுத்தம் என்பதை பல்வேறு சூழல்களில் அனைவரும் கடந்து வந்திருப்போம். மன அழுத்தமே தீவிரமாகி அது மனச்சோர்வு என்ற நோயாக மாறினால் அதற்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.

யாருக்கெல்லாம் ஏற்படும்?
உலக மக்கள்தொகையில் 4-5% பேர் மனச்சோர்வினால் பாதிக்கப் படலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மனச்சோர்வால் பாதிக்கப்படலாம். ஆண்களைவிட பெண்கள்தான் மனச்சோர்வினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் அதற்கு காரணம். பூப்பெய்தும் வயது, மகப்பேறு காலம், மெனோ பாஸ் போன்ற காலங்களில் அவர்கள் மனச்சோர்வினால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஹார்மோன் காரணங்கள்
புறச்சூழலால் மட்டும் மனச் சோர்வு ஏற்படுவதில்லை. நீரிழிவு, தைராய்டு பிரச்னைகளுக்கு எப்படி ஹார்மோன்கள் காரணமோ, அதே போன்று மனநிலையில் ஏற்படும் மாற்றங்களிலும் ஹார்மோனின் பங்களிப்பு இருக்கிறது.
முக்கியமாக `செரடோனின்' என்ற ரசாயனத்தின் அளவு மூளையில் குறைந்தால் யாருக்கு வேண்டுமானாலும் திடீரென்று மனச் சோர்வு ஏற்படலாம்.
சுய பரிசோதனை
நாள் முழுவதும் சோகமான மனநிலை யில் இருப்பது
குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட பணிகளைச் செய்வதற்குக்கூட ஆற்றல் இல்லாமல் இருப்பது
விரும்பிச்செய்யும் பொழுதுபோக்குகளில் கூட ஈடுபாடு இல்லாதது
ஞாபக மறதி
கவனச்சிதறல்
அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை
குறைவாகச் சாப்பிட்டு எடை மெலிவது அல்லது அதிகம் சாப்பிட்டு எடை அதிகரிப்பது
தாழ்வு மனப்பான்மை
குற்ற உணர்ச்சி
தற்கொலை எண்ணம்
இவற்றில் இரண்டுக்கு மேலான அறி குறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அது மனச்சோர்வாக இருக்கலாம்.

சிகிச்சை அவசியமா?
மாறுபட்ட புதிய சூழல், குடும்பத் தினர், நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசுவது போன்றவை லேசான மன அழுத்தம் உடையவர்களுக்கு ஓரளவு உதவலாம். ஆனால், மனச்சோர்வு உடையவர்கள், சிகிச்சை பெற்றால்தான் அதிலிருந்து விடுபட முடியும். மனச் சோர்வுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டும், தூக்க மாத்திரை கொடுத்து நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள், உடல் எடை அதிகரித்துவிடும் என்றெல்லாம் தவறான கருத்துகள் உள்ளன. ஆனால், குறைந்தது ஆறு மாதங்கள், அதிகபட்சம் ஓராண்டு வரை சிகிச்சை பெற்றாலே போதுமானது.
அலட்சியம் செய்தால்...
தீவிர மனக்குழப்பம் ஏற்பட்டு காதில் யாரோ பேசுவது போல குரல் கேட்பது, மாயத்தோற்றம் ஏற்படுவது சுற்றியிருப்பவர் களால் உயிருக்கு ஆபத்து உள்ள உணர்வு போன்ற எண்ணங்கள் தோன்றி ஆவேச மாக நடந்துகொள்வார்கள். உச்சமாக, தற்கொலை எண்ணம் தோன்றி அதற்கு முயற்சி செய்வார்கள். ஒருவரின் நடத்தை, பழக்கவழக்கத்தின் மூலம் உடனிருப்பவர் களுக்கு ஒருவர் மனச்சோர்வில் இருப்பது வெளிப்படும். விழிப்புணர்வு இருந்தால் சுயமாக கண்டறிய முடியும். கண்டறிந்ததும் தாமதிக்கா மல் மருத்துவரை அணுக வேண்டும்.
தகவல்: பிரார்த்தனா சரஸ்வதி, மனநல மருத்துவர், சென்னை.