Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 13 - சாப்பிட்ட உடனே டாய்லெட்டுக்கு ஓடுகிறீர்களா?

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

மன அழுத்தம், பதற்றம், ஆளுமை தொடர் பான குறைபாடுகள் என உளவியல் சார்ந்த பிரச்னைகளாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 13 - சாப்பிட்ட உடனே டாய்லெட்டுக்கு ஓடுகிறீர்களா?

மன அழுத்தம், பதற்றம், ஆளுமை தொடர் பான குறைபாடுகள் என உளவியல் சார்ந்த பிரச்னைகளாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

Published:Updated:
செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

சிலருக்கு வெளியிடங்களில் சாப்பிடவே பயமாக இருக்கும். காரணம்... சாப்பிட்ட உடனே மலம் கழிக்க வேண்டுமென்ற உணர்வு. இதை ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable bowel syndrome (IBS) பிரச்னை என்கிறது மருத்துவம். தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் தரவுகளின்படி, உலக அளவில் 11% பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் என்று தெரிகிறது. பிரச்னை ஏற்பட்டவர்களில் 30% பேர் மட்டும் மருத்துவரை அணுகு கின்றனர். பலர் இந்தப் பிரச்னையோடே வாழ்வதற்குப் பழகிக்கொள்கிறார்கள்.

கவிதா
கவிதா

உடலும் மனமும்...

‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ பெருங் குடலும் மனதும் சேர்ந்த பிரச்னை. சில உணவுப்பொருள்கள் ஒவ்வாமையால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ஏதேனும் வைரஸ் தொற்றின் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதைத் தொடர்ந்தும் இந்தப் பிரச்னை தொடங்கலாம்.

மன அழுத்தம், பதற்றம், ஆளுமை தொடர் பான குறைபாடுகள் என உளவியல் சார்ந்த பிரச்னைகளாலும் இந்தப் பிரச்னை வரலாம். உதாரணத்துக்கு, மனதுக்கு நெருங்கியவர்களின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள், தேர் வெழுதும் மாணவர்கள், அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்புபவர்கள்... நாள்கள் தொடங்கி மாதங்கள், வருடக் கணக்காகக்கூட பிரச்னை நீடிக்கலாம்.

பிரச்னை 3 வகை...

மலச்சிக்கல் - மலம் இறுகி சிறு சிறு உருண்டை யாக வெளியேறும்.

வயிற்றுப்போக்கு - திரவமாகவோ, கொழ கொழப்பாகவோ மலம் வெளியேறும்.

இரண்டும் சேர்ந்தது - சில நாள்கள் வயிற்றுப் போக்கு, சில நாள்கள் மலச்சிக்கல் போல ஏற்படலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 13 - சாப்பிட்ட உடனே டாய்லெட்டுக்கு ஓடுகிறீர்களா?

சுய பரிசோதனை...

சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்.

ஒருமுறை கழிவறைக்குச் சென்று வந்ததும் மீண்டும் செல்ல வேண்டும் என்ற உணர்வு.

குறுகிய நேரத்துக்குள் 3, 4 முறைக்கு மேல் மலம் கழித்தல்.

அடிவயிற்றில் பிடிப்பு, வலி, பிசைவது போன்ற உணர்வு.

15 நாள்களுக்கு மேல் பிரச்னை நீடிப்பது.

டயட் டைரி

பால், கோதுமை, ஹோட்டல் உணவுகள், சில காய்கறிகள் என குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடும்போது மட்டும் பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதைக் கண்டறிய ‘டயட் டைரி’ என்பதைப் பின்பற்ற வேண்டும். சாப்பிடும் உணவுகளை அதில் குறித்து வைத்துக்கொண்டு எந்த உணவு சாப்பிட்டால் பிரச்னை ஏற்படு கிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்த்து விட்டாலே பிரச்னை சரியாகிவிடும்.

தீர்வு காண்பது அவசியம்!

பொதுவாக காலை உணவு சாப்பிட்ட உடன் இந்தப் பிரச்னை ஏற்படும். பெரும்பாலும் 10-15 நாள்களில் பிரச்னை தானாகவே சரியாகி விடும். அதைத் தாண்டியும் பிரச்னை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். வைரஸ் தொற்றுக்குப் பிறகு பிரச்னை ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.

உளவியல் தொடர்பான பிரச்னை காரண மாக இருந்தால் அதற்கும் சிகிச்சை பெறுவது அவசியம். இவை எதுவும் காரணம் இல்லை என்றால் குடல் சார்ந்த வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதற்கான பரிசோதனை அவசியம். ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ உயிரை பாதிக்கும் பிரச்னை இல்லை என்றாலும், நீண்ட நாள்கள் பாதிப்பு தொடர்ந் தால் வாழ்க்கைமுறை மற்றும் தரம் பெரிதும் பாதிக்கப்படும். மலச்சிக்கல் தொடர்கதை யானால் மூல நோய், ஆசனவாய் வெடிப்பு (Anal fissure) போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

தகவல்: கவிதா, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர், சென்னை