Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 14 - மார்பகப் புற்றுநோய்... தாமதம் தவிர்த்தால், ஆயுளை நீட்டிக்கலாம்!

மார்பகப் புற்றுநோய்
பிரீமியம் ஸ்டோரி
மார்பகப் புற்றுநோய்

சுய பரிசோதனையில் கட்டி இருப்பது போன்றோ அல்லது மேற்கூறிய அறிகுறிகளோ இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

செக் ஃப்ரம் ஹோம் - 14 - மார்பகப் புற்றுநோய்... தாமதம் தவிர்த்தால், ஆயுளை நீட்டிக்கலாம்!

சுய பரிசோதனையில் கட்டி இருப்பது போன்றோ அல்லது மேற்கூறிய அறிகுறிகளோ இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

Published:Updated:
மார்பகப் புற்றுநோய்
பிரீமியம் ஸ்டோரி
மார்பகப் புற்றுநோய்

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்று நோய்களில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

பி.உஷா
பி.உஷா

அறிகுறிகள்

மார்பகத்தில் வலி மிகுந்த அல்லது வலி யில்லாத கட்டி, காம்பில் ரத்தம், நீர் அல்லது சீழ் வடிதல், புண், காம்பு உள்நோக்கி இழுக்கப் பட்டிருத்தல், மார்பகத்தின் தோல் ஆரஞ்சு பழம் போன்று புள்ளிகளுடன் இருப்பது, சிவப்பு நிறம், தடிப்பு, அக்குள் பகுதியில் நெறி கட்டிகள், மார்பகங்கள் சம அளவில் இல்லாதிருத்தல்.

சுய பரிசோதனை

* கண்ணாடியின் முன்நின்று தோள் பட்டையை நேராக வைத்து, கைகளை இடுப்பில் வைத்து மார்பகங்கள் இயல்பான வடிவிலும் நிறத்திலும் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.

* இரண்டு கைகளையும் உயர்த்தி மேலே சொன்னதைப் பரிசோதிக்க வேண்டும்.

* அடுத்ததாக, ஒருக்களித்து படுத்துக்கொண்டு, கை விரல்கள் நான்கையும் சேர்த்தாற்போல் வைத்துக்கொள்ள வேண்டும்.

* நுனிவிரல்களால் மென்மையாக மார்பகப் பகுதிகளில் ஏதேனும் கட்டி தென்படுகிறதா என வட்ட இயக்கத்தில் தடவிப் பார்க்க வேண்டும்.

* இடது புறத்தை வலது கை விரல்களைக் கொண்டும், வலது புறத்தை இடது கை விரல் களைக் கொண்டும் பரிசோதிக்க வேண்டும்.

* தசைப்பகுதிகளை அழுத்தாமல், தடவி மட்டுமே பார்க்க வேண்டும்.

* மார்பகத்தின் மேலே, கீழே, பக்கவாட்டுப் பகுதி என அனைத்துப் பகுதிகளையும் இதே முறையில் பரிசோதிக்க வேண்டும்.

* அக்குள் பகுதியையும் இதே முறையில் பரிசோதிக்கவும்.

* மாதத்தில் ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும்.

* சிலருக்கு மாதவிடாய் நாள்களில் மார்பகங்கள் கனமானது போன்று தோன்றும். அவர்கள் மாதவிடாய் நாள்களுக்குப் பிறகு இந்தப் பரிசோதனையைச் செய்யலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 14 - மார்பகப் புற்றுநோய்... தாமதம் தவிர்த்தால்,  ஆயுளை நீட்டிக்கலாம்!

பருமனும் புற்றுநோயும்...

பருமனாக இருப்பவர்களுக்கு தசை அதிகமாகக் காணப்படும் என்பதால் சுய பரிசோதனையில் கட்டிகள் தென்படாமல் போகலாம். பருமனாக இருப்பவர்களுக்கு புற்று நோய்க்கான வாய்ப்பும் அதிகம். எனவே,

30 வயதுக்கு மேற்பட்ட பருமனான பெண்கள் சோனோமேமோகிராம், 40 வயதுக்கு மேல் டிஜிட்டல் மேமோகிராம் பரிசோதனைகள் செய்யலாம்.

குடும்பத்தில் புற்றுநோய்

குடும்பத்தில் யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய், கணையப் புற்றுநோய் இருந்திருந்தால் அந்தக் குடும்பத்து பெண்கள் 18 வயதிலிருந்தே மார்பகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும். 35 வயதிலிருந்து டிஜிட்டல் மேமோகிராம் செய்துகொள்ள வேண்டும்.

தாமதிக்கவே கூடாது!

சுய பரிசோதனையில் கட்டி இருப்பது போன்றோ அல்லது மேற்கூறிய அறிகுறிகளோ இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். எல்லா கட்டிகளும் புற்றுநோயாக இருக்காது. சாதாரண கட்டிகள், நார்த்திசுக்கட்டிகள், கொழுப்புக் கட்டி அல்லது நோய்த் தொற்றாகக்கூட இருக்கலாம்.

வெளியே அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே டிஜிட்டல் மேமோகிராமில் புற்றுநோயைக் கண்டறிந்துவிட முடியும். எனவே, 40 வயதுக்கு மேல், 75 வயது வரை ஆண்டுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

மேமோகிராம் பரிசோதனையில் கட்டி தென்பட்டால் திசுப்பரிசோதனை செய்து புற்றுநோயா என்று உறுதிப் படுத்திய பிறகே சிகிச்சையைத் தொடங்க முடியும். நோய் உறுதியானதும், அது எந்த நிலையில் (Stage) உள்ளது என்பதை PET ஸ்கேன் மூலம் கண்டறிந்து அதற்கு அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை எது தேவை என்பதைத் தீர்மானிக்க முடியும்.

தகவல்: பி.உஷா

மகப்பேறு புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism