Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 15 - குறட்டை... அசதியல்ல... ஆபத்து!

குறட்டை
பிரீமியம் ஸ்டோரி
குறட்டை

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, தொண்டை வழியே சுவாசக் குழாயின் மூலம் நுரையீரலை அடைகிறது.

செக் ஃப்ரம் ஹோம் - 15 - குறட்டை... அசதியல்ல... ஆபத்து!

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, தொண்டை வழியே சுவாசக் குழாயின் மூலம் நுரையீரலை அடைகிறது.

Published:Updated:
குறட்டை
பிரீமியம் ஸ்டோரி
குறட்டை
எம்.என்.சங்கர்
எம்.என்.சங்கர்

குறட்டைவிட்டுத் தூங்குபவர்களைப் பார்த் தால், `நல்ல களைப்பு போல...' என்று நினைப் போம். குறட்டையுடன் மூச்சுத் திணறலும் இருந்தால் அது அசதியல்ல ஆபத்து. தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திறணல் ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) எனப்படும் தூக்கக் குறைபாடு, இந்திய மக்கள் தொகையில் 3% பேருக்கு இருக்கிறது. மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

ஏன்... எப்படி... யாருக்கு?

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, தொண்டை வழியே சுவாசக் குழாயின் மூலம் நுரையீரலை அடைகிறது. சுவாசக் குழாய் சுருங்கினாலோ, சுவாசக் குழாய்க்குச் செல்லும் காற்று தடைப் பட்டாலோ குறட்டை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம். உட லுழைப்பு குறைவது, உடல் பருமன் ஆகிய காரணங்களால் முகம், கழுத்து ஆகிய இடங்கள் பருத்து, சுவாசக்குழாய் சுருங்குகிறது. சுவாசம் தடைப்படும்போது ஆக்ஸிஜன் உடலுக்குச் செல்வதும் தடைப் படுவதால், உடலின் அனைத்து செல்களிலும் ஆக்ஸிஜன் குறைந்து ‘கிரானிக் ஹைப் போக்ஸியா’ (Chronic Hypoxia) எனும் நிலை ஏற்படலாம்.

இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்பு களுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும்போது ரத்த ஓட்டமும் குறைந்து மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுவாசக்குழாய், நுரையீரலில் ஏதேனும் பிரச்னை, தைராய்டு, நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்னை, நீரிழிவு, மூளையில் கட்டி, ரத்த ஓட்டம் குறைவாகக் காணப்படுதல் போன்ற காரணங்களாலும் ‘ஸ்லீப் ஆப்னியா’ ஏற்படலாம். மூக்கு, தொண்டைப் பகுதியில் சதை வளர்தல் பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

சுய பரிசோதனை

எந்த நிலையில் படுத்துத் தூங்கி னாலும் குறட்டை விடுதல்.

அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, உட் கார்ந்து டிவி பார்த்துக் கொண்டி ருக்கும்போதோ, பேசிக் கொண்டி ருக்கும்போதோ தூங்கி விடுதல்.

கண்ணாடி முன்னே நின்று வாயை நன்றாகத் திறந்து பார்க்கும்போது `அண்ணம்' எனப்படும் உள்நாக்கு தெரியாமல் இருப்பது.

பற்களுக்குள் அடங்காமல் நாக்கு வெளியே துருத்திக்கொண்டு இருப்பது.

கழுத்தின் சுற்றளவு 42 இஞ்சுக்கு மேல் இருப்பது மற்றும் தொப்பை (ஆண்களுக்கு).

பெண்களுக்கு 30-க்கு மேல் காணப் படும் BMI அளவு.

குழந்தைகள்

குறட்டை

தூக்கத்தில் வாய் திறந்து மூச்சு விடுதல்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பது.

வாய் துர்நாற்றம், தூக்கத்தில் கை கால்களை அசைத்துக்கொண்டே இருத்தல், உளறுதல்.

செக் ஃப்ரம் ஹோம் - 15 - குறட்டை... அசதியல்ல... ஆபத்து!

அசதியாகவும் இருக்கலாம்!

சிலர் அதிக களைப்பின் காரண மாக உறங்கும்போது குறட்டை விடுவார்கள். மூன்று மாதங்களுக்கும் மேல் குறட்டை, பிற அறிகுறிகளும் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். குறட்டையுடன் மூச்சுத் திணறலும் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மல்லாந்து படுக்கும்போது மட்டும் சிலர் குறட்டை விடுவார்கள். இது பெரும்பாலும் உடல்பருமனால் ஏற்படுவது. எடையைக் குறைத்து, தூங்கும் நிலையை மாற்றினாலே பிரச்னை சரியாகிவிடும். எந்த நிலையில் படுத்தாலும் குறட்டை விட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

`பாலிசிம்னோகிராபி’ (Polysomno graphy) என்ற பரிசோதனையின் மூலம் ஒருவரின் தூக்கம் கண் காணிக்கப்படும். அப்போது தூங்கும்போது மூளை அலைவரிசை, கண் அசைவு, இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, வயிற்றுப்பகுதியும், நெஞ்சுப் பகுதியும் அசையும் தன்மை, குறட்டைவிடும்போது நடுவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து என் னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக் கப்படும். அவற்றை வைத்து பாதிப்பு லேசானதா, மிதமானதா, தீவிர மானதா என்று கணக்கிடப்படும்.

தீர்வு என்ன?

லேசான பாதிப்புக்கு மருந்து மாத்திரைகள், உடற்பயிற்சி பரிந் துரைக்கப்படும்.

மிதமான பாதிப்புக்கு உறக்கத்தில் சுவாசம் தடைப்படாமல் இருக்கப் பொருத்திக் கொள்ளும் கருவிகள் பரிந்துரைக்கப்படும்.

தீவிர பாதிப்புக்கு, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

குழந்தைகளுக்கு மூக்கு, தொண்டை சதை வளர்தல் பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும்.

தகவல்: எம்.என்.சங்கர், காது - மூக்கு - தொண்டை மருத்துவர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism