Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 18 - உடல் பருமன்... பல பிரச்னைகளுக்கான நுழைவாயில்!

உடல் பருமன்
பிரீமியம் ஸ்டோரி
உடல் பருமன்

ஒருவரின் உயரத்தை சென்டிமீட்டரிலிருந்து மீட்டராக மாற்ற வேண்டும். உதாரணத்துக்கு 152 செ.மீ = 1.52 மீட்டர்

செக் ஃப்ரம் ஹோம் - 18 - உடல் பருமன்... பல பிரச்னைகளுக்கான நுழைவாயில்!

ஒருவரின் உயரத்தை சென்டிமீட்டரிலிருந்து மீட்டராக மாற்ற வேண்டும். உதாரணத்துக்கு 152 செ.மீ = 1.52 மீட்டர்

Published:Updated:
உடல் பருமன்
பிரீமியம் ஸ்டோரி
உடல் பருமன்

1975-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் உடல் பருமனுக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருக் கிறது. 2016-ம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 190 கோடி பேர் அதிக உடல் எடை உடையவர்களாக இருக்கின்றனர். இவர் களி்ல் 65 கோடி பேருக்கு உடல் பருமன் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கோவிட் கட்டுப்பாடுகள், ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல் ஆகியவற்றால் பெரியவர் களிடம் மட்டுமல்லாமல் குழந்தைகளிடமும் பருமன் பிரச்னை அதிகரித்திருக்கிறது.

செக் ஃப்ரம் ஹோம் - 18 - உடல் பருமன்... பல பிரச்னைகளுக்கான நுழைவாயில்!

உடல் பருமன் என்பது ஒரு நோயா, குறைபாடா அல்லது நிலையா என்ற விவாதம் இன்றுவரை தொடர்கிறது. உடல் நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உடலில் அசாதாரண அல்லது அளவுக்கு அதிகமான கொழுப்பு திரள்வதே அதிக உடல் எடை (Over Weight), உடல் பருமன் (Obesity) என்று அழைக்கப்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்னைகள், மனச்சோர்வு, தூக்கத்தில் மூச்சு தடைப்படுதல், இதயநோய், புற்றுநோய்க்குகூட உடல் பருமன் காரணமாக அமைகிறது. தொற்றா நோய்கள் மட்டுமல்ல, கோவிட் போன்ற தொற்று நோய்களுக்குகூட உடல் பருமன் முக்கிய காரணியாக அமைகிறது.

ஏன் ஏற்படுகிறது?

மரபியல், தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னை, உடலுழைப்பு குறைந்து, ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்ளும் வாழ்க்கைமுறை மாற்றம் ஆகிய மூன்று காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. 80-90% பேருக்கு வாழ்க்கைமுறை மாற்றமே பிரதான காரணம்.

சுய பரிசோதனை

அதிக உடல் எடையைக் கணக்கிடுவதற் கான எளிய பரிசோதனை ‘பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (Body Mass Index - BMI) கணக்கீடுதான். ஒருவரின் உடல் எடை, அவரின் உயரம் இரண்டையும் ஒப்பிட்டு உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கணக்கிடுவதே BMI.

செக் ஃப்ரம் ஹோம் - 18 - உடல் பருமன்... பல பிரச்னைகளுக்கான நுழைவாயில்!

எப்படிக் கணக்கிடுவது?

* ஒருவரின் உயரத்தை சென்டிமீட்டரிலிருந்து மீட்டராக மாற்ற வேண்டும். உதாரணத்துக்கு 152 செ.மீ = 1.52 மீட்டர்

* மீட்டராக மாற்றப்பட்ட அந்த அளவை மீட்டர் ஸ்கொயராக மாற்ற வேண்டும். உதாரணத்துக்கு 1.52 x 1.52 = 2.31 m2

* உடல் எடையை (கிலோ) மீட்டர் ஸ்கொயர் மதிப்பைக் கொண்டு வகுக்க வேண்டும் (உடல் எடை - 60 கிலோ என்றால் அதனை 2.31 என்ற எண்ணால் வகுக்க வேண்டும். கிடைக்கும் விடை 25.97) இதுவே பி.எம்.ஐ

பி.எம்.ஐ அளவு

* 18.5-க்கும் குறைவாக இருந்தால் குறைவான எடை.

* 18.5 - 24.9 என்ற அளவுக்குள் இருந்தால் சரியான எடை.

* 25 - 29.9 என்ற அளவுக்குள் இருந்தால் அதிக எடை.

* 30-க்கும் அதிகமாக இருந்தால் உடல் பருமன்.

தடுப்பது எளிது!

பெற்றோர் பருமனாக இருக்கும்பட்சத்தில் குழந்தைகளுக்கும் எடை அதிகரிக்காத வகையில், சிறிய வயதிலேயே உடலுழைப்பை அதிகரிக்கும் விளையாட்டுகள், ஆரோக்கிய உணவுகளைப் பழக்க வேண்டும்.

ஹார்மோன் பிரச்னைகள் இருப்பவர்கள் அதற்கான சிகிச்சையைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். வாழ்க்கைமுறை மாற்றத்தால் உடல் எடை அதிகரித்தவர்கள் உடற்பயிற்சி, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு களைத் தவிர்த்துவிட்டு சரிவிகித உணவைப் பின்பற்ற வேண்டும். பேலியோ, கீட்டோ என வேறு எந்தவித டயட்டையும் பின்பற்றுவது நல்லதல்ல.

ஆரோக்கிய வாழ்க்கைமுறையைப் பின்பற்றி ஆறு மாதங்களுக்குப் பிறகும் எடை குறையவில்லை என்றால் மருத்துவரையோ, ஊட்டச் சத்து ஆலோசகரையோ அணுகலாம்.

தகவல்: கபாலி நீலமேகம், இரைப்பை குடல் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை மருத்துவர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism