Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 19 - எப்போதும் தைல பாட்டிலுடன் வலம் வருகிறீர்களா?

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

எல்லோருக்குமே பொதுவாக சளித் தொந்தரவு ஏற்படும்போது ஆண்டுக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ சைனஸ் தொந்தரவு வரலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 19 - எப்போதும் தைல பாட்டிலுடன் வலம் வருகிறீர்களா?

எல்லோருக்குமே பொதுவாக சளித் தொந்தரவு ஏற்படும்போது ஆண்டுக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ சைனஸ் தொந்தரவு வரலாம்.

Published:Updated:
செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

நம்மில் சிலர் அடிக்கடி தும்மல், மூக்கில் நீ்ர் வடிதல், தலைவலி பிரச்னையுடன் அவதிப்படுவதையும் எப்போதும் தைல பாட்டிலுடன் வலம் வருவதையும் பார்த்திருப் போம். மருத்துவத்தில் இந்தப் பிரச்னையை ‘சைனசைட்டிஸ்’

(Sinusitis) என்கின்றனர். இந்தியாவில் எட்டில் ஒருவர் நாள்பட்ட சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கின்றன தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் தரவுகள்.

நம் மூக்கைச் சுற்றிலும் உள்ள இரண்டு பக்கங்களிலும் எட்டு காற்றறைகள் காணப்படும். இவற்றின் பெயர்தான் ‘சைனஸ்’. சுவாசிக்கும்போது மூக்கின் வழியே நாம் உள்ளிழுக்கும் காற்று காற்றறைகளுக்குள் செல்கிறது. காற்றில் உள்ள தூசுகளும் மாசும், அந்த அறைகளில் வடிகட்டப்பட்டு, லேசான ஈரப்பதம் சேர்க்கப்படும். அதன் பின்னர் மூச்சுக்குழல் வழியே அந்தக் காற்று நுரை யீரலுக்குள் செல்லும். சுற்றுச்சூழல், நோய்த் தொற்று, ஒவ்வாமை ஏற்படும்போது மூக்கின் ஈரப்பதத்துக்காக உற்பத்தியாகும் சளிப்படலம் காற்றறைகளை அடைத்துக்கொண்டு, அதனால் நீர்கோத்தால் ‘சைனசைட்டிஸ்’ பிரச்னையாக மாறும்.

செக் ஃப்ரம் ஹோம் - 19 - எப்போதும் தைல பாட்டிலுடன்
வலம் வருகிறீர்களா?

சுய பரிசோதனை

  • தலைபாரம்

  • கண்ணைச் சுற்றி வலி

  • தும்மல்

  • தொண்டை வலி

  • மூக்கிலிருந்து சளி வருதல்

  • மூக்கிலிருந்து தொண்டைப் பகுதிக்கு சளி இறங்கிக்கொண்டே இருப்பது

  • மூக்கிலிருந்து துர்நாற்றம் வீசுவது

யாருக்கும் வரலாம்!

எல்லோருக்குமே பொதுவாக சளித் தொந்தரவு ஏற்படும்போது ஆண்டுக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ சைனஸ் தொந்தரவு வரலாம். ஓரிருமுறை ஏற்படுபவர்களுக்கு சளிப் பிரச்னைக்கு சிகிச்சையளித்தாலே போதுமானது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேல் அறிகுறிகள் நீடித்தாலோ அல்லது இரண்டு, மூன்று நாள்களில் பிரச்னை சரியாகிவிட்டாலும் அடிக்கடி இந்தத் தொந்தரவு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும்.

பிரச்னை தீவிரமானால் சைனஸ் பகுதியில் சீழ் கோத்து கண்ணுக்கோ மூளைக்கோ பரவ வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் மருத்துவர் எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் பரிசோதனைக்குப் பரிந்துரைத்து அந்த முடிவின் அடிப்படையில் மருந்து, மாத்திரைகள் கொடுப்பார். அதில் பிரச்னை கட்டுக்குள் வரவில்லை என்றால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

 ப்ரீத்தி
ப்ரீத்தி

சைனஸ் பிரச்னைக்கு ஆவி பிடிப்பது நல்ல பயனைத் தரும். வெறும் தண்ணீரை அடுப்பில் கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலே போது மானது. அறிகுறிகள் மட்டுப்படும்வரை தினமும் ஒருமுறை ஆவி பிடிக்கலாம்.

சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் ஐஸ்க்ரீம், ஐஸ் சேர்க்கப்பட்ட ஜூஸ் போன்ற அதிக குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள் வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு சில காய்கறிகள், பழங்கள், உணவு சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட்டு தும்மல் வரும். அந்த உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

தகவல்: ப்ரீத்தி, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism