Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 20 - அல்சரில் வேண்டாம் அலட்சியம்!

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

வயிற்றுக்குள் இருக்கும் உணவு, குடலுக்குள் செல் லாது. இதனால் சாப்பிட உடன் வாந்தி வரும்

செக் ஃப்ரம் ஹோம் - 20 - அல்சரில் வேண்டாம் அலட்சியம்!

வயிற்றுக்குள் இருக்கும் உணவு, குடலுக்குள் செல் லாது. இதனால் சாப்பிட உடன் வாந்தி வரும்

Published:Updated:
செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

“நேரத்துக்குச் சாப்பிடாமா இருந்தா... அல்சர் வந்துடும்” என்ற அறிவுரையை அடிக்கடி கேட்டிருப்போம். வயிற்றுப்புண் (Peptic ulcer) என்று பொதுப் பெயரில் அழைக்கப்படும் இந்தப் பிரச்னை வயிற்றுப் பகுதியிலும் குடலின் ஆரம்ப பகுதியிலும் ஏற்படும். பெரியவர்கள், சிறியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் புகை, மதுப்பழக்கம் போன்ற காரணங்களால் ஆண்களிடம் சற்று அதிகமாகக் காணப்படுகிறது.

உணவுப்பழக்கம் அல்ல பாக்டீரியா!

‘ஹெலிகோபேக்டர் பைலோரை’ (Helicobacter Pylori) என்ற பாக்டீரியாதான் இந்தப் பிரச்னைக்கு 90 சதவிகிதம் காரணம். சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுவதாலும், உணவு வழியாகவும், வேறு நபரிடமிருந்தும் வாய் வழியாக இந்த பாக்டீரியா உடலுக்குள் சென்று இரைப்பையில் தங்கும். அதனால் ஏற்படும் பக்கவிளைவான அல்சர், வயிற்றிலும் குடல் பகுதியில் வரும். மருத் துவரின் பரிந்துரையில்லாமல் வலி மாத் திரைகளை அதிகம் எடுத்துக் கொள் வதாலும் வயிற்றுப்புண் வரலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 20 - அல்சரில் வேண்டாம் அலட்சியம்!

சரியான நேரத்துக்குச் சாப்பிடாத தும், அதிக காரமாகச் சாப்பிடுவதும்தான் இதற்கு காரணம் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களான பேரி ஜெ மார்ஷல் மற்றும் ராபின் வாரன் ஆகிய இருவரும் ‘பெப்டிக் அல்சர்’ பிரச்னைக்கு காரணமான ‘ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற பாக்டீரியாவைக் கண்டறிந்த பிறகு, இந்தக் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்த பாக்டீரியா விஷயத்தைக் கண்டறிந்ததற்காக, ஜெ.மார்ஷல் மற்றும் ராபின் வாரன் இருவரும் 2005-ம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றனர்.

இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவை அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவையும் அழிக்கின்றன. இதனால் முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் இன்று அல்சர் பாதிப்பு குறைந்துள்ளது.

சுய பரிசோதனை

* சாப்பிட்டால் வலி குறைவது அல்லது அதிகரிப்பது

* அதிக நேரம் சாப்பிடாமல் இருந்தால் வலி ஏற்படுவது

* தார் போன்ற அடர் கறுப்பு நிறத்தில் மலம் வெளி யேறுதல்

* மேல் வயிற்றுவலி

- இவை அல்சருக்கான பொதுவான அறிகுறிகள்.

அல்சரால் வரும் சிக்கல்கள்

* வயிற்றுக்குள் இருக்கும் உணவு, குடலுக்குள் செல் லாது. இதனால் சாப்பிட உடன் வாந்தி வரும்

* குடல் அரித்து மலத்தில் ரத்தம் கசியும்

* பசியின்மை, எடை குறைதல் அல்லது அதிகரித்தல்.

ஆர்.ரவி
ஆர்.ரவி

தீர்வுகள் என்ன?

ஆரம்பத்தில் ஆன்டிபாக்டீரியல் மருந்துகளின் மூலம் சிகிச்சை அளித்துவிடலாம். பிரச்னை தீவிரமாகி விட்டால் குடல் அரித்து ஓட்டை விழுந்துவிடும். இதனால் சாப்பிடும் உணவு, குடல் பகுதியைவிட்டு வெளியேறி உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். மலத்தில் ரத்தக்கசிவையும் நீண்ட நாள்கள் கவனிக்காமல் விட்டால் ரத்தம் அதிகமாக வெளியேறி உயிருக்கே ஆபத்தாகலாம். ரத்தக்கசிவு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு 1-10 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்து வரை அணுக வேண்டும். எண்டோஸ்கோப்பி செய்து அல்சர் எங்கே இருக்கிறது, பக்கவிளைவுகள் ஏற்பட் டுள்ளனவா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் 99 சத விகிதம் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். பிரச்னை தீவிரமடைந்தால் அறுவை சிகிச்சைதான் தீர்வு.

ஆர்.ரவி, இரைப்பை, குடல் மற்றும் இன்டர்வென்ஷனல் எண்டோஸ்கோப்பி மருத்துவர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism