Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 21 - முதுமைக்கு ‘வெல்கம்’ சொல்லும் கண்புரை... வெல்வது எளிது!

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

கண்களில் இயற்கையாக இருக்கும் லென்ஸ்தான் கண்களுக்குள் நுழைகிற ஒளிக் கதிர்களை ஃபோகஸ் செய்து மூளைக்குத் தகவல் அனுப்பும் வேலையைச் செய் யும்.

செக் ஃப்ரம் ஹோம் - 21 - முதுமைக்கு ‘வெல்கம்’ சொல்லும் கண்புரை... வெல்வது எளிது!

கண்களில் இயற்கையாக இருக்கும் லென்ஸ்தான் கண்களுக்குள் நுழைகிற ஒளிக் கதிர்களை ஃபோகஸ் செய்து மூளைக்குத் தகவல் அனுப்பும் வேலையைச் செய் யும்.

Published:Updated:
செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்
வினிதா சதீஷ்
வினிதா சதீஷ்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் தேசிய பார்வை இழப்பு தடுப்புத் திட்டத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 1.2 கோடிக்கும் அதிகமானோருக்கு பார்வை இழப்பு உள்ளது. இவற்றில் 80.1% கண்புரையால் ஏற்பட்ட பார்வை இழப்பு. ஓராண்டில் சுமார் 38 லட் சம் பேருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது.

மூன்று வகை பாதிப்பு

பிறந்த குழந்தைகள் முதல் எந்த வயதினரை வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை பாதிக்க லாம். ஆனாலும் வயது மூப்பு காரணத்தால் ஏற்படும் கண்புரை (Senile Cataract) தான் மிகவும் பொதுவானது. கர்ப்ப காலத்தில் தாய் ஏதாவது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், மரபணு காரணங்களால் பிறந்த குழந்தைக்கும் `கண் புரை' (Congenital Cataract) ஏற்படலாம். சர்க்கரைநோய், விபத்தினால் கண்ணிலுள்ள லென்ஸ் சேதமடைவது உள்ளிட்ட காரணங் களால் நடுத்தர வயதினரை பாதிப்பதை ‘இரண்டாம் நிலை கண்புரை’ (Secondary Cataract) என்பார்கள்.

கண்களில் இயற்கையாக இருக்கும் லென்ஸ்தான் கண்களுக்குள் நுழைகிற ஒளிக் கதிர்களை ஃபோகஸ் செய்து மூளைக்குத் தகவல் அனுப்பும் வேலையைச் செய் யும். சில புரதங்களால் ஆன அந்த லென்ஸ், ஒளிபுகும் வகையில் (Transparent) இருக்கும். வயதாக ஆக, லென்ஸிலிருக்கும் புரதத்தில் ஏற்படும் மாற்றங்களால் அதன் நிறம் மாறிவிடும். அதனால் ஒளிக்கதிரை மூளைக்கு கடத்தும் திறன் குறைந்து, சரியாக ஃபோகஸ் செய்யாமல், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி முதிர்ச்சியடைந்த புரையாக மாறும்.

சுய பரிசோதனை

* பார்வை மங்கிக்கொண்டே வருதல்

* பனிபடர்ந்தது போன்று தெரிவது

* இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதது

* எதிரில் வரும் வாகன வெளிச்சம் படர்ந்து அதிக ஒளிவட்டம் போல் தெரிவது

* வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுவது

* பிறந்த குழந்தையின் கண் கருவிழி வெள்ளை யாகத் தெரிவது

சராசரியாக 55 வயதுக்கு மேல் கண்புரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். வயது, மரபணு, நோய்கள், சுற்றுச்சூழல் போன்ற காரணிகளால் இது ஏற்படுகிறது. சிலருக்கு கண்புரை பாதிப்பு மெதுவாக அதிகரிக்கும். சிலருக்கு வேகமாக முற்றிய நிலைக்குச் சென்றுவிடும்.

அறிகுறிகள் தென்பட்ட உடனே அறுவை சிகிச்சை செய்து புரையை அகற்றிவிட்டு செயற்கை லென்ஸ் பொருத்தப்படும். ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்துவிட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். பிரச்னை தீவிரமடைந் தால் கண்ணில் அழுத்தம் அதிகரித்து, நரம்புகள் சேதமடையும். சேதமடைந்த நரம்புகளை சீரமைக்க முடியாது என்பதால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 21 - முதுமைக்கு ‘வெல்கம்’ சொல்லும் கண்புரை... வெல்வது எளிது!

நிரந்தர தீர்வு!

கண் புரைக்கான அறுவை சிகிச்சை மிகவும் எளிது. பேனா முனையின் அளவுக்குத் துளையிட்டு 5-10 நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிவடைந்துவிடும். வெகு சீக்கிரம் புண் ஆறிவிடும். 4-5 நாள்கள் ஓய்விலிருந்து விட்டு, பணிகளைத் தொடரலாம். ஒரு மாதம் வரை கண்களுக்கு மருந்து ஊற்ற வேண்டி வரும்.

வயது மூப்பால் ஏற்படும் கண்புரை இரண்டு கண்களிலும் வருவதற்கு வாய்ப்புள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், இதயநோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தகவல்: வினிதா சதீஷ்,கண் மருத்துவர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism