Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 22 - ஹலோ... கேட்கல... கேட்கல... உடனே கவனியுங்கள்!

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

வைரஸ் தொற்று, ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், அளவுக்கு அதிகமான ஒலியை உள்வாங்குதல், ஹெட்போன் பயன்பாடு ஆகிய காரணங்களால் பெரியவர்களுக்கு இது ஏற்படலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 22 - ஹலோ... கேட்கல... கேட்கல... உடனே கவனியுங்கள்!

வைரஸ் தொற்று, ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், அளவுக்கு அதிகமான ஒலியை உள்வாங்குதல், ஹெட்போன் பயன்பாடு ஆகிய காரணங்களால் பெரியவர்களுக்கு இது ஏற்படலாம்.

Published:Updated:
செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்
 ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

மனிதர்களிடையே காணப்படும் உணர்திறன் குறைபாடுகளில் பொதுவானது செவித்திறன் இழப்பு. பிறந்த குழந்தைகள் முதல் வயதான வர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

காரணங்கள் பலவிதம்!

மரபணு காரணங்கள், பிரசவ நேரத்தில் குழந்தையின் காதுக்கு ரத்த ஓட்டம் குறைதல், டௌன் சிண்ட்ரோம் போன்ற பிறவிக் குறைபாடுகளால் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை வரலாம். சளித் தொந்தரவு, அடினாய்டு அழற்சி போன்ற காரணங்களால் செவிப்பறையின் பின்னால் ஒரு திரவம் சேரும். வெளியிலிருந்து காதுக்குள் நுழையும் ஒலி, அந்தத் திரவம் வழியாக ஊருடுவ இயலாமல், மூளைக்குச் செல்ல வேண்டிய தகவல் போய்ச் சேராமல் செவித்திறன் குறைவு அல்லது இழப்பு ஏற்படும். பள்ளிக் குழந்தைகளின் செவித்திறன் இழப்புக்கு இதுவே காரணம்.

வைரஸ் தொற்று, ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், அளவுக்கு அதிகமான ஒலியை உள்வாங்குதல், ஹெட்போன் பயன்பாடு ஆகிய காரணங்களால் பெரியவர்களுக்கு இது ஏற்படலாம். ஹெட்போன், செல்போன் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன் படுத்துவதால் உலக அளவில் 110 கோடி இளைஞர்கள் தங்கள் செவித்திறனை இழக்கும் வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதிக ஒலியை உள் வாங்குதலால் 45 வயதிலேயே செவித்திறன் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

விபத்துகளின் காரணமாக காதிலிருந்து மூளைக்குச் செல்லக்கூடிய நரம்புகள் அறுந் தாலோ, காதினுள் இருக்கும் மூன்று சிறிய எலும்புகள் வேறு இடத்துக்கு நகர்ந்தாலோ, காது ஜவ்வு கிழிந்தாலோ செவித்திறன் பாதிக்கப்படும். வயது முதிர்வினாலும் செவித் திறன் பாதிக்கப்படலாம்.

சுய பரிசோதனை

டிவி பார்க்கும்போது, பாடல் கேட்கும் போது இயல்பைவிட அதிக சத்தத்தில் வைத்துக் கேட்பது

யாராவது பேசும்போது ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்வது

ஒரு காது கேட்காதபோது, நம்மை அறியாமலேயே ஒரு பக்கமாக தலையைத் திருப்பிக் கேட்பது

அருகிலிருப்பவர்களைவிட அதிக சத்தமாகப் பேசுவது

வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடது புறம் அல்லது இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் வலது பக்கம் என செல் போனை மாற்றி வைத்துப் பேசுவது

யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருப்பது

செக் ஃப்ரம் ஹோம் - 22 - ஹலோ... கேட்கல... கேட்கல... உடனே கவனியுங்கள்!

தீர்வு என்ன?

குழந்தை பிறந்த மூன்றாவது நாளிலேயே செவித்திறன் பரிசோதனை செய்யப்பட வேண்டும். தவறினால் முதல் அல்லது இரண்டாம் முறை தடுப்பூசி போடச் செல்லும்போது அந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். செவித்திறனில் பிரச்னை இருந்தால் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். பள்ளிப்பருவக் குழந்தை களுக்கு காதில் திரவம் சேரும் பிரச்னைக்கு சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் செவிப் பறையில் துளையிட்டு அங்கு சேர்ந்திருக்கும் திரவம் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில் சிறிய குழாய் பொருத்தப்படும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால் நாளடைவில் செவிப் பறை மிகவும் மெல்லியதாகி காதின் உள்சுவரில் சென்று செவிப்பறை ஒட்டிக்கொள்ளும். இதனால் கேட்கும் திறன் குறைந்துகொண்டே போகும். ஏதாவது நோய்த்தொற்றின் காரண மாக ஏற்படும் செவித்திறன் இழப்புக்கு அதற்கு சிகிச்சை எடுத்தாலே பிரச்னை சரியாகிவிடும்.

விபத்தினால் ஏற்படும் செவித்திறன் இழப்புக்கும் சிகிச்சை எடுத்தாலே போது மானது. ஆனால், விபத்தில் காது நரம்புகள் அறுந்துவிட்டால் திறனை மீட்டெடுக்க முடியாது. காதில் வெளிப்புற அமைப்பை ‘பின்னா’ (Pinna) என்கிறோம். ஒலியைத் திசைத் திருப்பி நமது காதுக்கு அனுப்பி, அளவுக்கு அதிகமான ஒலியைக் குறைத்து காதுகளைப் பாதுகாக்கும் வேலையை அது செய்யும்.

ஹெட்போன் பயன்பாட்டின்போது ஒலி யானது நேரடியாக காதுகளுக்குச் சென்று விடும். அதிக ஒலியை உள்வாங்குவதால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு செவித்திறன் இழப்பு ஏற்படத் தொடங்கும். நரம்புகள் சேத மடைந்துவிட்டால் செவித்திறனை மீட்டெடுக்க முடியாது. எனவே, ஹெட்போன் பயன்பாட்டைக் குறைப்பதே நல்லது. வயது முதிர்வினால் ஏற்படும் செவித்திறன் இழப்புக்கு காது கேட்கும் கருவி பொருத்திக் கொள்ளலாம்.

செவித்திறன் பிரச்னை இருந்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். தாமதிப்பது கேட்கும் திறனைக் குறைத்துக் கொண்டே போய், நிரந்தர செவித்திறன் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.

தகவல்: ராமகிருஷ்ணன், காது-மூக்கு-தொண்டை மருத்துவர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism