Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 23 - தைராய்டு... பெண்களை அதிகம் பாதிப்பது ஏன்?

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்னை இருந்தால் அடுத்த தலைமுறையினரும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது நல்லது.

செக் ஃப்ரம் ஹோம் - 23 - தைராய்டு... பெண்களை அதிகம் பாதிப்பது ஏன்?

குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்னை இருந்தால் அடுத்த தலைமுறையினரும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது நல்லது.

Published:Updated:
செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

நமது கழுத்தின் முன்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் ஒரு சுரப்பிதான் தைராய்டு. உடலின் வளர்சிதை மாற்றத்திலும், உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக வேலை செய்வதிலும் இந்தச் சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால் ‘மாஸ்டர் கிளாண்ட்’ என்று அழைக்கப்படுகிறது.

குறைபாடு இரண்டு வகை...

இந்தக் குறைபாடானது ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகையாக இருக்கிறது.

70% பேருக்கு ஹைப்போ தைராய்டு பாதிப்பும், 30% பேருக்கு ஹைப்பர் தைராய்டு பாதிப்பும் காணப்படுகிறது. நான்கு பெண் களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில் இந்தப் பிரச்னை காணப்படுகிறது. பெண்களை ஏன் அதிகம் பாதிக்கிறது என்ற கேள்விக்கு மருத்துவ அறிவியல் இதுவரை விடை கண்டு பிடிக்கவில்லை.

ஸ்ருதி சந்திரசேகர்
ஸ்ருதி சந்திரசேகர்

யாருக்கு வரலாம்?

நீரிழிவாளர்களுக்கு தைராய்டு பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்னை இருந்தால் அடுத்த தலைமுறையினரும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது நல்லது.

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் குறைபாடு ஏற்படலாம் என்பதால் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.

அறிகுறிகள்

ஹைப்போ தைராய்டு

சோர்வு

மந்தம்

முடி உதிர்தல்

வறண்ட சருமம், அரிப்பு

மலச்சிக்கல்

சீரற்ற மாதவிடாய்

அதிக ரத்தப்போக்கு

எடை கூடுதல்

ஹைப்பர் தைராய்டு

படபடப்பாக இருப்பது

எடை குறைதல்

அடிக்கடி மலம் கழித்தல்

கை, கால் நடுக்கம்

தூக்கமின்மை

`ஆங்ஸைட்டி அட்டாக்’ (Anxiety Attack)

எல்லாருக்கும் எல்லா அறிகுறிகளும் இருக் காது. சிலருக்கு வெறும் மலச்சிக்கல் மட்டுமே காணப்படும். சிலருக்கு முடி உதிர்தல் மட்டும் இருக்கும். சிலருக்கு வேறு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், ரத்தப் பரிசோதனையில் மட்டும் பிரச்னை காணப்படும்.

செக் ஃப்ரம் ஹோம் - 23 - தைராய்டு... பெண்களை அதிகம் பாதிப்பது ஏன்?

கண்டறிதல் எளிது!

எளிய ரத்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு குறைபாட்டைக் கண்டறியலாம். பிரச்னை உறுதியானால் அதற்கு மாத்திரை பரிந்துரைக்கப்படும். அந்த மாத்திரையை ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தைராய்டுக்கான மாத்திரை எடுத்துக் கொள்பவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து அதே அளவு மாத்திரையைத் தொடர வேண்டுமா அல்லது மாற்ற வேண்டுமா என்று ஆலோசனை பெற வேண்டும். மாத்திரையின் அளவு மாறும் பட்சத்தில் மூன்று அல்லது ஆறு மாத இடைவெளியில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்.

தைராய்டு குறைபாட்டினால் கழுத்தில் கட்டி, கட்டியினால் குரல் மாறுதல், தைராய்டு புற்றுநோய், கழுத்தில் வீக்கம் (Nodule) வளர்ந்துகொண்டே வருதல், தோற்றத்தில் பிரச்னை போன்றவை இருந்தால் அறுவை சிகிச்சை செய்து தைராய்டு சுரப்பி நீக்கப்படும்.

மாத்திரையைத் தவறாமல் உட்கொண்டு, ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, மன அழுத் தம் இல்லாத வாழ்க்கை என இருந்தால் தைராய்டு பிரச்னையை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

தகவல்: ஸ்ருதி சந்திரசேகர், நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை மருத்துவர், சென்னை