Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 24 - வெள்ளைப்படுதல்... நோயல்ல!

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

பூஞ்சைத் தொற்று - வெள்ளைப்படுதல், தயிர் போன்று கெட்டியாக வெளியேறும்

செக் ஃப்ரம் ஹோம் - 24 - வெள்ளைப்படுதல்... நோயல்ல!

பூஞ்சைத் தொற்று - வெள்ளைப்படுதல், தயிர் போன்று கெட்டியாக வெளியேறும்

Published:Updated:
செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

உடலை சுத்தமாகவும் கிருமித்தொற்று தாக்காத வகையிலும் பாதுகாக்க இயற்கையாகவே சில வழிகள் உண்டு. அந்த வகையில் கர்ப்பப்பை வாய்ப் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் யோனிப்பாதை வழியாக கிருமிகள் உள்ளே செல்வதைத் தடுப்பதற்குமான பாதுகாப்பு அரண்தான் வெஜைனாவிலிருந்து வெளியேறும் திரவம். இந்தத் திரவத்துடன் வெஜைனா பகுதியில் காணப்படும் இறந்த செல்களும் வெளியேறும்.

இயல்பானதே!

பீரியட்ஸ் நாள்களுக்குப் பிறகு அடுத்த பத்து நாள்களுக்கு வெள்ளைப்படுதல் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கும். பீரியட்ஸ் நிறைவடைந்த நேரத்தில் வெளியாகும் திரவம் நீர்த்து காணப்படும்.

கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெடிக்கும் நாள் மற்றும் அதற்கு அடுத்த ஓரிரு நாள்களை கருத்தரிக்க உகந்த காலம் என்போம். இந்த நான்கைந்து நாள்களில் வெள்ளைப்படுதலில் நீர்த்தன்மையும், அளவும் மேலும் அதிகரிக்கும்.

அந்த நான்கைந்து நாள்களுக்குப் பிறகு அடுத்த பத்து நாள்கள் வரை திரவம் கெட்டி யாகவே காணப்படும். பீரியட்ஸ் ஏற்படும் வரை அதே நிலையில்தான் இருக்கும். இது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாக இருக்கும் உடலியல் செயல்பாடு. வெள்ளைப்படுதல் என்றாலே அது நோய் என்றோ, பிரச்னை என்றோ கருத வேண்டாம்.

ஜெயஸ்ரீ ஷர்மா
ஜெயஸ்ரீ ஷர்மா

எது பிரச்னை?

மலத்துவாரத்திலிருக்கும் பாக்டீரியா, பூஞ்சையினால் பெரும்பாலான தொற்று ஏற்படும். உடலுறவின்போது துணை யிடமிருந்தும் பரவலாம். தொற்று ஏற்பட்டிருந் தால் வெள்ளைப்படுதலின் நிறம், வாடை, அளவு என அனைத்துமே மாறுபடும்.

கட்டுப்பாடில்லாத சர்க்கரைநோய், நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், அனீமியா, கர்ப்பிணிகள் என நோய் எதிர்ப்பு சக்தி குறை வாக உள்ளவர்களுக்கு பூஞ்சைத்தொற்று ஏற்படலாம்.

பாதுகாப்பற்ற உடலுறவு, ஒன்றுக்கும் மேற் பட்டவர்களுடனான பாலியல் செயல்பாடு களால் ஏற்படும் பாக்டீரியல் வெஜைனோசிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று வரலாம்.

சிலருக்கு பூஞ்சைத் தொற்று, பாக்டீரியல் வெஜைனோசிஸ் உள்ளிட்ட தொற்றுகள் என அனைத்தும் சேர்ந்து ஒரே நேரத்தில் பாதிப்பை (Mixed Infection) ஏற்படுத்தலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 24 - வெள்ளைப்படுதல்... நோயல்ல!

சுய பரிசோதனை

* பூஞ்சைத் தொற்று - வெள்ளைப்படுதல், தயிர் போன்று கெட்டியாக வெளியேறும்

* பாக்டீரியல் வெஜைனோசிஸ் - மீன் போன்ற வாடை, மஞ்சள் நிறத்துடன் தண்ணீர் போன்று வெளியேறும்

* ஒரே நேரத்தில் பல தொற்றுகள் - மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் இருக்கலாம்

* அந்தரங்கப் பகுதி, தொடை இடுக்கில் அரிப்பு, தோல் வழண்டுபோகும் அளவுக்கு காயம், புண்கள், எரிச்சல்.

சிகிச்சை

20-45 வயதுக்குள்ளான இனப்பெருக்க காலத்தில் இந்தப் பிரச்னைகள் அதிகமாக ஏற்படலாம். அனைத்துப் பெண்களுக்கும் வாழ்நாளில் ஒருமுறையோ இருமுறையோ இப்படி ஏற்படலாம்.

வெஜைனா பகுதியில் வைக்கக்கூடிய மாத்திரையிலேயே பெரும்பாலும் பிரச்னை சரியாகிவிடும். நோய் எதிர்ப்புத் திறன் குறை வாக உள்ளவர்களுக்கு அதற்கான காரணத் தைக் கண்டறிந்து சரி செய்துவிட்டு, இந்தப் பிரச்னைக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். சிலருக்கு உட்கொள்ளும் மாத்திரையும் களிம் பும் தேவைப்படலாம். பூஞ்சைத் தொற்று இருந்தால் அது கணவருக்கும் ஏற்படலாம் என்பதால் அவருக்கும் சிகிச்சை தேவைப் படலாம்.

மெனோபாஸுக்கு பிறகு அல்லது 45 வய துக்கு மேல் வெள்ளைப்படுதல் இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். அது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

தகவல்: ஜெயஸ்ரீ ஷர்மா, மகப்பேறு மருத்துவர், சென்னை