Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 4 - இதயத்தில் ஏதோ ஒன்று... இழுக்குது கொஞ்சம் இன்று! - ஹார்ட் அட்டாக் அலெர்ட்

உறங்கும்போது குடும்பத்தினர் யாரையாவது இதயத்துடிப்பை பரிசோதிக்கச் சொல்லலாம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

உலக சுகாதார நிறுவனத்தின் தரவு களின்படி உலகளவில் 1.79 கோடி பேர் ஆண்டுதோறும் இதய ரத்த நாள நோய்களால் உயிரிழக்கின் றனர். இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இதயப் பிரச்னைகளால் ஏற்படும் மரணங்கள் அதிகம் என்கிறது தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம். இதய நோய்களில் மாரடைப்புதான் முன்னணியில் உள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக நமது உடல் சில அலெர்ட் சிக்னல்களைக் கொடுக்கும்.

எச்சரிக்கை சிக்னல்கள்!

அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவு மூச்சு வாங்குவது, மாடிப்படி ஏறும்போது அல்லது சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது, தாடைப் பகுதியில் வலி, நடக்கும்போது பல் வலிப்பது போன்ற உணர்வு, தோள்பட்டை மற்றும் இடது கையில் பரவும் வலி (Exertional pain).

மதன் மோகன்
மதன் மோகன்

யாருக்கெல்லாம் ஆபத்து?

கட்டுப்பாடில்லாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பருமன், புகைப்பழக்கம், குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு இருப்பது, மெனோபாஸ் அடைந்த பெண்கள், உடல் இயக்கம் இல்லாதது, அதீத மன அழுத்தம், குறட்டைப் பிரச்னை.

சுய பரிசோதனை

உடல் ஏதேனும் எச்சரிக்கை சிக்னலைக் கொடுத் தால் அல்லது ஆபத்தானவர்கள் பட்டியலில் இருந்தால் அல்லது இரண்டுமே இருந்தால் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

வீட்டிலுள்ள பல்ஸ்ஆக்ஸிமீட்டர் கருவியில் இதயத்துடிப்பை (Pulse) பரிசோதிக்க வேண்டும். இதயத்துடிப்பு 70 -100 வரை இருந்தால் நார்மல். 100-க்கு மேல் சென்றால் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது. விளையாட்டு வீரர்கள் தவிர, பிறருக்கு இதயத்துடிப்பு 50-க்கும் குறைவாக இருந்தால் இதயம் சார்ந்த வேறு பிரச்னையாக இருக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகவும்.

உறங்கும்போது குடும்பத்தினர் யாரையாவது இதயத்துடிப்பை பரிசோதிக்கச் சொல்லலாம். உறங்கும்போது இதயத்துடிப்பு அதிகமாக இருந்தால் இதயத்தில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கலாம்.

ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவியில் பரிசோதிக்கும்போது 120/80 - 130/90 என்ற அளவு வரை இருந்தால் நார்மல். அதற்கு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம். உயர்ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் இதயத்தில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது.

நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது மாடிப்படி ஏறிய உடன் பரிசோதித்தால் இயல்பாகவே இந்த அளவுகள் அதிகரிக்கும்.

மிகவும் ரிலாக்ஸ்டான நிலையில் இருக்கும்போது மட்டுமே இந்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

இந்தப் பரிசோதனைகள் தோராயமான முடிவுக்கு வருவதற்காக மட்டுமே. அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

செக் ஃப்ரம் ஹோம் - 4 - இதயத்தில் ஏதோ ஒன்று... இழுக்குது கொஞ்சம் இன்று! - ஹார்ட் அட்டாக் அலெர்ட்

அஜீரணமா... இதயத்தில் வலியா?

சாப்பிட்டு 20-30 நிமிடங்களுக்குப் பிறகு இதயப் பகுதியிலோ தோள்பட்டையிலோ வலியை உணர்ந்தால் அது இதயத்தில் ஏற்படும் வலி. நாம் சாப்பிட்ட உடன் ஜீரண வேலைகளுக்காக இதயத்திலிருந்து ரத்த விநியோகம் குடல் பகுதிக்குச் செல்லும். ரத்த ஓட்டம் குடலுக்குச் செல்லும்போது, இதயத்துக்கு போதுமான ரத்தம் இல்லாமல் போகும்போது இதயத்தில் வலி ஏற்படும். எனவே, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சாப்பிட்ட உடன் 5-10 நிமிடங்களுக்குள் வலி வந்தால் அது உணவு குடல் பகுதியை இரிடேட் செய்வதால் ஏற்படும் வலி.

தப்பிப்பது எப்படி?

உடற்பயிற்சி

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம்

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை

ஆபத்தான பட்டியலில் இருப்பவர்கள் ஆண்டுதோறும் இசிஜி, எக்கோ மற்றும் டிரெட்மில் (ECG, ECHO, Treadmill) ஆகிய பரிசோதனைகளைச் செய்தால் ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

தகவல்: மதன் மோகன், இதய மருத்துவர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு