Published:Updated:

``இனி அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யணுமா?!" - கலக்கத்தில் கல்லூரி மாணவர்கள்

COVID- 19 test
COVID- 19 test ( (AP Photo/Manish Swarup, File) )

அது நல்லதுதான் என்றாலும் அடிக்கடி கொரோனா பரிசோதனைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்பதுதான் மாணவர்களின் கவலையாக இருக்கிறது.

“ஒரு வகுப்பில் ஒரு மாணவருக்கு கொரோனா வந்துவிட்டால் அந்த வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதிகமான மாணவர்களுக்கு கொரோனா பரவும்பட்சத்தில், மீண்டும் ஆன்லைன் வழிக் கல்விக்குத் திரும்ப வேண்டியிருக்கும்” என்று சில கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களிடம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 8-ம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ‘கல்வி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றித்தான் கல்லூரிகளும் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்புகளும் இயங்க வேண்டும்’ என்று அரசு அறிவித்துள்ளது.

கொரோனா
கொரோனா

பல கல்லூரிகள் அந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாததாலும் மாணவர்கள் பேருந்துகளில் வந்து செல்வதாலும் கல்லூரிகளில் கொரோனா பரவல் அதிகமாவதாகச் சொல்லப்படுகிறது.

சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, மீண்டும் ஆன்லைன் வழி கல்விக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளதாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்.

மேலும், இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு வகுப்பில் ஒரு மாணவருக்கு கொரோனா வந்துவிட்டால் மற்ற அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அந்த மாணவரோடு பேருந்தில் பயணித்திருந்தாலும் பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ என்ற ரிசல்ட்டோடு கல்லூரிக்கு வரச் சொல்கின்றனர்.

corona virus
corona virus
Pixabay

அது நல்லதுதான் என்றாலும் அடிக்கடி கொரோனா பரிசோதனைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்பதுதான் மாணவர்களின் கவலையாக இருக்கிறது. விடுதிகளில் உள்ள மாணவர்களெல்லாம் மிரண்டு போயிருக்கின்றனர். சில கல்லூரிகளில் கொரோனா வந்த மாணவர்களை அந்தக் கல்லூரிக்கென உள்ள விருந்தினர் மாளிகையில் தனிமைப்படுத்துகின்றனர். எல்லாம் எப்போது மாறும் என்று தெரியவில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு