Published:Updated:

கேரளாவில் மருத்துவருக்குக் கொரோனா... மூடப்படும் அரசு மருத்துவமனை?!

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதால், இவர்கள் பராமரிக்கும் நோயாளிகளுக்கும் தொற்று ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸால் கேரள மாநிலத்தில் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என நிம்மதி அடைந்தாலும்கூட, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரள மாநில அரசு, இந்தியாவுக்கே முன்னோடியாகத் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும், அதற்கான முழுமையான பயன் கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. கேரளாவில் மட்டும் இதுவரை 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

`ஒருவருக்கு உறுதியான வைரஸ்; 270 பேரை இறக்கிவிட்ட அதிகாரிகள்!’ -  கேரளாவில் தொடரும் கொரோனா போராட்டம்
கொரோனா தடுப்பு முகாம்
கொரோனா தடுப்பு முகாம்

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சில முக்கியத் துறைகளின் மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதால், இவர்கள் பராமரிக்கும் நோயாளிகளுக்கும் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், இந்த மருத்துவ நிறுவனம் இப்போது தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுள் ஒருவர் ஸ்பெயின் நாட்டிலிருந்து சமீபத்தில் கேரளா திரும்பியுள்ளார். மீண்டும் மருத்துவமனையில் பணியில் சேர்ந்த அந்த மருத்துவருக்குக் கொரோனா தொற்று இருந்திருக்கிறது. ஆனால், அதற்கான எந்த அறிகுறிகளும் அவருக்குத் தென்படாததால் அவர் மருத்துவமனையிலேயே தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

`நாடு திரும்பிய கேரளா மாணவருக்கு கொரோனா பாதிப்பு!' -அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய சுகாதாரத்துறை
கொரோனா முகாம்
கொரோனா முகாம்
ம.அரவிந்த்

கடந்த 8-ம் தேதி அவருக்குக் கொரோனா தொற்றின் அறிகுறிகளுள் ஒன்றான தொண்டைவலி ஏற்படவே, தனது பயண வரலாற்றை மருத்துவ மேலதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். அடுத்த நாளே இந்தத் தகவல் மாநில சுகாதார அமைச்சகத்துக்குத் தெரியவந்தாலும், எவ்வித அறிவுறுத்தல்களும் இவருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் புற நோயாளிகள் பிரிவில் இவர் பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் மருத்துவர். பின், தானாகவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்துக்குத் தகவல் அளித்திருக்கிறார். அடுத்த நாளே இவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் இவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
`கொரோனா அறிகுறி உறுதியானதும் சிரித்தேன்!'- பாதிப்பிலிருந்து மீண்டுவந்த  பெண்ணின் வைரல் பதிவு

இந்த நிலையில், இவருடன் நெருங்கிப் பழகிய மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், இவர் கண்காணித்த நோயாளிகள் எனப் பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு நோயாளிகளை கண்காணிக்கச் செல்லவில்லை. இதனால், மருத்துவமனை மூடப்படும் அளவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, இன்னும் பிற நோயாளிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடுமோ என்ற அச்சம் எழுகிறது.

அடுத்த கட்டுரைக்கு