Published:Updated:

`வணக்கம் is an Emotion!' ஜெர்மனி மணமகன், சிங்கப்பூர் மணமகள்... திருப்பதியில் மாஸ்க்குடன் திருமணம்!

மணமக்கள்
மணமக்கள்

திருச்சியைச் சேர்ந்த மணமக்கள், பணி நிமித்தம் ஜெர்மன் மற்றும் சிங்கப்பூரில் இருப்பதால் கொரோனா குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தனர்.

தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அரசாங்கம் மக்களிடம் தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தனிநபர்களும் தங்களால் இயன்றவரை விழிப்புணர்வுடனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

அசோக் அர்ஸ்
அசோக் அர்ஸ்

அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த திருமணப் புகைப்படக் கலைஞர் அசோக் அர்ஸ், தான் புகைப்படம் எடுத்த ஒரு திருமணவிழாவின் மணமக்களை, மாஸ்க் அணிந்திருப்பதுபோல் கலர்ஃபுல்லாக ஒரு போட்டோ ஷூட் செய்திருக்கிறார்.

இது குறித்து அவரிடம் பேசியதில்...

``பொதுவா போட்டோகிராபர்ஸ் ஏதாச்சும் க்ரியேட்டிவா வேலைபாக்கணும்னு யோசிப்போம். இந்தக் கல்யாணம், திருப்பதியில் நடந்துச்சு. கொரோனாவால் திருப்பதி மலைமேல திருமணத்தை நடத்த அனுமதி கிடைக்கலை. அதனால கீழ்திருப்பதியிலதான் கல்யாண ஏற்பாடுகள் செஞ்சிருந்தாங்க.

மணமக்கள்
மணமக்கள்

மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் சொந்த ஊரு திருச்சி. ஆனா, மாப்பிள்ளைக்கு ஜெர்மன்லயும் பொண்ணுக்கு சிங்கப்பூர்லயும் வேலை. அந்த நாடுகள்ல கொரோனா ஃபீவர் ஆரம்பிச்சுட்டதால, கல்யாணத்துக்காக அங்க இருந்து இங்க வந்த ரெண்டு பேர்கிட்டயும் தற்காப்புக்கான விழிப்புணர்வு அதிகமா இருந்துச்சு.

மாஸ்க், சானிட்டைசர்னு ரொம்பவே அலர்ட்டா இருந்தவங்க, போட்டோ எடுக்கும்போது மட்டும் மாஸ்க்கை கழட்டுறதுலயும் அலர்ட்டாதான் இருந்தாங்க. `சரி விடுங்க மாஸ்க்கோட போட்டோஷூட் பண்ணிடலாம்'னு கேட்டதுக்கு, `அட வேணாம் பாஸ், பேஷன்ட் மாதிரி இருக்கப்போகுது'னு தயங்கினாங்க.

'LOVE ️ VIRUS'
'LOVE ️ VIRUS'

`இல்ல... இது வித்தியாசமாவும் விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரியும் இருக்கும். நல்ல விஷயம்தானே'ன்னு கொஞ்சம் பேசிப் பேசி சம்மதம் வாங்கி நடத்துனதுதான் இந்த போட்டோஷூட்.

ரெண்டு பேரையும் ஜோடியா மாஸ்க்கோடு போட்டோ எடுத்ததுக்கு அப்புறம், `நாங்கதான்னு முகம் தெரியலைல்ல'னு சிரிச்சுக்கிட்டாங்க. ஆனா, தயக்கத்துக்கு அவசியமே இல்லாம போட்டோஸ் எல்லாம் ரொம்ப ஃபிரெஷ்ஷா, கலர்ஃபுல்லா வந்ததுல அவங்களுக்கு மகிழ்ச்சி.

Hello is a WORD, Vanakkam is an EMOTION - Corono
Hello is a WORD, Vanakkam is an EMOTION - Corono

`LOVE ️ VIRUS', `Hello is a WORD, Vanakkam is an EMOTION - Corono' இப்படி ரெண்டு கேப்ஷன்களோடு இந்தப் படங்களை என்னோட சோஷியல் மீடியா பேஜ்ல அப்லோட் பண்ணினேன். நல்ல ரெஸ்பான்ஸ். க்ரியேட்டிவிட்டிக்காக மட்டுமல்லாம, சமூக விழிப்புணர்வுக்காகவும் செய்ததால இந்தப் படங்கள் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமாயிடுச்சு" என்கிறார்.

திருமண மண்டபங்களில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்வுகளைத் தவிர வேறு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும், திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளிலும் குறைந்த அளவிலேயே மக்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்மாத ஆரம்பத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டு வெளிவந்த டிக்டாக் வீடியோ ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலானது. அதில், கர்நாடகாவைச் சேர்ந்த மாப்பிள்ளையும் மணமகளும் பரிசளிக்க வரும் விருந்தினர்களிடம் பரிசுப்பொருள்களை வேண்டாம் எனவும், கைகொடுத்து வாழ்த்துச் சொல்லவரும் விருந்தினர்களைக் கண்டு அலறுவதுபோலவும் கேலியாக ஒரு வீடியோவை பதிவுசெய்து வெளியிட்டுள்ளனர்.

` நமக்குத்தான் அவை அமங்கலம்.. ஆனால்?!' - மேலைநாடுகளில் நடக்கும் விநோத திருமணங்கள்

இந்த வீடியோவின் ஹைலைட், மணமக்கள் விருந்தினர்களுடன் கைகுலுக்குவதற்கு மாறாக மணமகள் கைகூப்பி வணக்கம் கூறுவதுபோலவும், மணமகன் தன்னுடைய காலை விருந்தினரின் காலுடன் `லெக் ஷேக்' செய்வது போலவும் கேலியாக நடந்துகொண்டதுதான்.

ட்ரம்ப்பின் வணக்கம்
ட்ரம்ப்பின் வணக்கம்

இந்த வீடியோ மக்களிடம் அதிக அளவில் பகிரப்பட்டதுடன், மீடியாவில் செய்தியாகும் அளவுக்கு வைரலானது. `நோ ஹேண்டுஷேக், ஒன்லி வணக்கம்' என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகைக்குப் பின்னர் அவர் மூலம் உலக நாடுகளிலும் பரவலாகியிருப்பதை, இந்திய மக்கள் பெருமிதத்துடன் பார்க்கிறார்கள்.

`அதிபர் ட்ரம்ப் முதல் சீன மாணவர்கள் வரை..!' - பரவும் இந்தியாவின் 'நமஸ்தே' கலாசாரம்
அடுத்த கட்டுரைக்கு