Published:Updated:

கொரோனா அலர்ட்... வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! #StayInsideStaySafe

பொதுமக்களுக்கென்று ஓர் அளப்பரிய பங்கு இருக்கிறது. அது, நோய் பரவலைத் தடுத்தல்! #StayInsideStaySafe

கோவிட் 19 கொரோனா வைரஸின் பாதிப்பு குறைய மருத்துவர்கள், நிபுணர்கள் உலகெங்கிலும் உயிர்காக்கும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நோய்க்கிருமியைத் தடுக்கிற மருந்தைக் கண்டறிதலும் நோயாளியைக் குணமாக்குதலும்தான் மருத்துவர்கள் பணி. இந்த முயற்சியில் பொதுமக்களுக்கென்று ஓர் அளப்பரிய பங்கு இருக்கிறது. அது, நோய் பரவலைத் தடுத்தல். எதைச் செய்யலாம், எதையெல்லாம் கவனத்தோடு செய்யலாம், எதைச் செய்யவே கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

2
பூங்கா

`அலர்ட்' கவனத்தோடு செய்யலாம்... #StayInsideStaySafe

1. அன்றாடத் தேவைகளுக்காக அருகில் ரெஸ்டாரன்ட்டுக்கும் கடைக்கும் செல்லலாம். ஆனாலும், தகுந்த சுயபாதுகாப்பை உறுதி செய்துகொண்டுதான் செல்ல வேண்டும்.

2. அருகிலுள்ள பூங்காவுக்குச் சென்று விளையாடலாம். பூங்கா போன்ற இடங்களில் உள்ள கைப்பிடிகள், இருக்கைகள் போன்றவற்றின்மூலம் வைரஸ் தொற்றுகிற வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது சானிடைஸர் கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ளலாம்.

3
நூலகம்

`அலர்ட்' கவனத்தோடு செய்யலாம்... #StayInsideStaySafe

3. நூலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்போது கட்டாயமாகப் பாதுகாப்பு முகக்கவசம் அணிந்துகொண்டு செல்ல வேண்டும்.

4. வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். ஆனால், அந்தந்தத் தலங்கள் அறிவித்திருக்கிற கட்டுப்பாடுகளுக்கேற்ப திட்டமிட்டுக் கொண்டு வழிபடச் செல்லலாம்.

4
பயணம்

`அலர்ட்' கவனத்தோடு செய்யலாம்... #StayInsideStaySafe

5. தொற்று பாதிக்காத பகுதிகளுக்குச் சிறிய பயணம் போகலாம். சிறுவர்கள், வயதானவர்கள், எதிர்ப்புசக்தி குறைந்தவர்களையே வைரஸ் அதிகம் தாக்குகிறது. எனவே, அதற்கேற்ற சமயோசித முன்னெச்சரிக்கை வேண்டும். பயணங்களுக்கு யாரை அழைத்துச் செல்லலாம், யாரை அழைத்துச் செல்லக் கூடாது எனத் திட்டமிடல் வேண்டும்.

5
கிரிக்கெட் மைதானம்

`நோ' கூடவே கூடாதது... #StayInsideStaySafe

6. குடும்பத்தினரோ, நண்பர்களோ யாராக இருந்தாலும் அருகேயுள்ள வெளியிடங்களில் பெரிய குழுவாகக் கூடியிருப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

7. கல்யாணம், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், விளையாட்டுப்போட்டி மைதானங்கள் ஆகியவற்றுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

8. அடிக்கடி வீட்டுக்கு வருகிற உறவுக்காரர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் இப்படி எல்லோரையும் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்கச் செய்ய வேண்டும்.

6
நடைப்பயிற்சி

`ஓகே' இவற்றையெல்லாம் செய்யலாம்... #StayInsideStaySafe

9. வீட்டு முற்றத்திலோ, வீதியிலோ சுத்தமான காற்றுப் பகுதியில் கொஞ்சநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். சுவாசப்பை சீராக இயங்க உதவி செய்யும்.

10. வீட்டில் அமர்ந்து நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம். சிந்தனைகளைத் தூண்டுவது இரண்டாவது கட்டம். சூழல் தோற்றுவிக்கிற ஒருவித இறுக்கத்தை, புத்தக வாசிப்பு தளர்த்தும்.

7
இசை

`ஓகே' இவற்றையெல்லாம் செய்யலாம்... #StayInsideStaySafe

11. வீட்டு முற்றங்களில் வீட்டாரோடு அமர்ந்து பேசலாம். குடும்ப உறுப்பினர்களைப் பற்றி இன்னும் அதிக விவரங்கள் தெரிந்து கொள்ள முடிவதோடு, நோயிலிருந்தும் தப்பிக்கலாம்.

12. சாவகாசமாக உட்கார்ந்து இசை கேட்கலாம். இசை மனநோயைத் தீர்த்திட வல்லது. அத்தகைய இசையைக் கேட்டு மனநிம்மதி அடையாளம்.

8
சமையல்

`ஓகே' இவற்றையெல்லாம் செய்யலாம்... #StayInsideStaySafe

13. ஜாலியாகச் சமைக்கலாம். வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிடலாம். ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களைத் தவிர்ப்பது, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு. வீட்டில் சமைப்பதும் சமையலுக்கு உதவுவதும் குடும்ப உறவுகளை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

14. இரவுநேரம் ஹால்களிலும் முற்றங்களிலும் குடும்பத்தினரோடு சின்னச் சின்ன விளையாட்டுகளில் ஈடுபடலாம். உறவுகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிப்பதோடு, நோய் குறித்த தேவையற்ற பயத்தை அகற்ற முடியும்.

9
டிவி

`ஓகே' இவற்றையெல்லாம் செய்யலாம்... #StayInsideStaySafe

15. கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி பயணிப்பதற்குச் சிக்கல் இல்லை. வெளியே கொஞ்சம் வாகனம் ஓட்டிச்செல்லலாம். மனம் லேசாக உணரப்படும்.

16. பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழலாம். நல்ல ஆரோக்கியமான நிகழ்ச்சிகள் எதிர்மறைச் சிந்தனைகளை உடைத்தெறியும்.

17. குழு வீடியோ அரட்டையில் ஈடுபடலாம். வெளியே குழுவாகக் கூடுவது சரியல்ல என்பதால், இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட ஆப்களில் வீடியோ கால் செய்துகொண்டு நண்பர்கள் உறவினர்களோடு பேசலாம்.

அடுத்த கட்டுரைக்கு