லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

கொரோனா கால பிரசவங்கள்...

கொரோனா கால பிரசவங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா கால பிரசவங்கள்...

மாண்புமிகு மருத்துவர்களின் மகப்பேறு சிகிச்சை அனுபவங்கள்

பெருந்தொற்றின் கோரதாண்டவம் யாருக்கும் கரிசனம் காட்டவில்லை. முதியோர், இளவயதினர், குழந்தைகள் என எல்லோரும் பாதிக்கப்பட்டனர். கர்ப்பிணிகளின் மரணங்கள் கலங்க வைத்தன. கர்ப்பிணிகளின் உறவினர்களைப் போலவே அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் மிகுந்த பயத்தோடு இருந்தனர். இரு உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பதற்றம் அது.

கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி களுக்குப் பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர்கள் சிலரிடம் அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டோம்.  

கொரோனா கால பிரசவங்கள்...

யாரு எப்போ சீரியஸ் ஆவாங்கன்னே தெரியலை!

மகப்பேறு துறை இயக்குநர் மற்றும் மருத்துவர் விஜயா, எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள்நல மருத்துவமனை, சென்னை

``இரண்டு அலையிலும் சேர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்த்துட்டோம்.  முதல் கொரோனா அலையை சமாளிச்சிட்டோம். ஆனா, ரெண்டாவது அலையை சமாளிக்கவே முடியலை. நிறைய கர்ப்பிணிகள் ஆக்ஸிஜன் குறைபாட்டோட வந்தாங்க. இதுல ரெண்டாவது ட்ரைமெஸ்டர்ல கொரோனா பாசிட்டிவ்வாகி வந்தவங்களும் இருந்தாங்க. அவங்களுக்கு சிசேரியன் செஞ்சும் குழந்தையை எடுக்க முடியாது. அப்படியே விட்டுத்தான் சிகிச்சை கொடுத்தோம்.

கொரோனா கால பிரசவங்கள்...

தவிர, யாரு எப்போ சீரியஸ் ஆவாங்கன்னே தெரியலை. அதனால, பிரசவத்துக்கு வந்த எல்லா பெண்களையும் அஞ்சு நாள் மருத்துவமனையிலேயே வெச்சு, பிரச்னை எதுவும் இல்லைன்னு உறுதியான பிறகுதான் அனுப்பி வெச்சேன். கொரோனா வந்த அம்மாக்கள் தாய்ப்பால் கொடுக்க பயந்தாங்க. தாய்ப்பால் வழியா கொரோனா பரவாதுங்கிறதைப் புரியவெச்சு பாலூட்ட வெச்சோம்.

ஒரு பக்கம், பிபிஈ, டபுள் மாஸ்க் எல்லாம் போட்டு கவனமா இருந்தாலும், கொரோனாவால பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் பிரசவ வலி தாங்காம அழறப்போவும் கத்துறப்போவும் அவங்க வாய்ல இருந்து சுவாசத்துகள்கள் வெளியே வருமேன்னு பயமா இருக்கும். அதை எடுத்துச் சொன்னா, புரிஞ்சுப்பாங்க. கத்துறதை குறைச்சுப்பாங்க.

இன்னொரு பக்கம் பேஷன்ட்ஸை பார்த்துக்க வர்ற உதவியாளர்கள் மாஸ்க் போடாம இருக்கிறது, மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் சுத்துறதுன்னு இருப் பாங்க. அவங்களைக் கூப்பிட்டு நிலைமையைப் புரிய வைக்கிறதுனு இந்த ரெண்டாவது அலை சவால் களோடுதான் போயிட்டிருக்கு...’’

கொரோனா கால பிரசவங்கள்...
GSHARI@19

கர்ப்பிணிகளை மீட்டு அவங்க குடும்பத்தினரைத் தேற்றி...

மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி, தனியார் மருத்துவமனை, சென்னை

‘`கடந்த ஒரு வருஷமா கொரோனா தொற்றாளர்களுக்கு பிரசவம் பார்க்கிறதை மட்டுமே செஞ்சுகிட்டு வர்றேன். டெலிவரியாகக் கொஞ்ச நாள்தான் இருக்கும். சிசேரியன் செய்யணும்னா தேதிகூட ஃபிக்ஸ் பண்ணியிருப்போம். திடீர்னு அந்தக் கர்ப்பிணிக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகிடும். அவங்களுக்கு தைரியம் கொடுத்து பிரசவம் பார்த்ததோட, மத்த மருத்துவமனைகள்ல கொரோனா வந்ததால பார்க்க முடியாதுன்னு அனுப்பிவிடப் பட்டவங்களுக்கும் பிரசவம் பார்த்தேன்.  

சில கர்ப்பிணிகள் நுரையீரல் வரை இன்ஃபெக்‌ஷன், ரத்த அழுத்தம்னு தீவிரமா பாதிக்கப் பட்டாங்க. அவங்களை மீட்டு, அவங்களோட குடும்பத்தினரையும் தேற்றியிருக்கோம். இந்த ஒரு வருஷம் டாக்டர்ஸ், நர்ஸ் மட்டுமல்லாம வார்டு பாய், செக்யூரிட்டின்னு அத்தனை பேரும் பயத்தையெல்லாம் தள்ளி வெச்சுட்டு உழைச்சிட்டிருக் கோம்.’’

கொரோனா கால பிரசவங்கள்...

திடீர்னு கொலாப்ஸ் ஆகுறப்போ தாங்க முடியல!

மகப்பேறு மருத்துவர் மீனா, அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய்நல மருத்துவமனை, திருவல்லிக்கேணி, சென்னை

‘‘மருத்துவர்களான எங்களுக்கும் பெருந்தொற்று புது விஷயம்தான். பேஷன்ட்கிட்ட இருந்து எங்களுக்கு தொற்று வர்றது சகஜம்தான். ஆனா, எங்ககிட்ட இருந்து கர்ப்பிணிகளுக்கு எந்த இன்ஃபெக்‌ஷனும் பரவிடக் கூடாதுன்னு கவனமா இருக்கோம். குடும்பத்தைவிட்டுப் பிரிஞ்சு தனியா இருந்திருக்கோம். கொரோனாவும் மரணமும் எங்களுக்கு வர்றதுக்கு அத்தனை வாய்ப்பும் இருக்குன்னு தெரிஞ்சும் வேலைக்கு வந்தோம்.

முதல் அலையில மரணங்கள் குறைவு. ஆனா, ரெண்டாவது அலையில நல்லா இருந்தவங்க, திடீர்னு கொலாப்ஸ் ஆயிருக்காங்க. அந்த நேரத்துல மருத்துவர்ங்கிறதையும் தாண்டி மனசு ரொம்ப டிஸ்டர்ப் ஆகிடும். ஆக்ஸிஜன் குறைஞ்சு மூச்சு வாங்கிட்டு மருத்துவமனைக்கு வர்றவங்க, பிறகு நல்லபடியா டெலிவரி முடிஞ்சு வீட்டுக்குப் போறதைப் பார்க்க அவ்ளோ நிம்மதியா இருக்கும்.

இந்த கொரோனா காலத்துல என் குடும்பத்தோட இருந்ததைவிட கர்ப்பிணிகளோட இருந்ததுதான் அதிகம். புதுசா கல்யாணமான வங்களுக்கு இந்த நேரத்துல ஒரு ரெக்வெஸ்ட். குழந்தைப்பிறப்பை கொஞ்சம் தள்ளிப்போடுங்க. தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்பு சக்தி வந்த பிறகு குழந்தைக்கு பிளான் பண்ணுங்க ப்ளீஸ்.’’

கொரோனா கால பிரசவங்கள்...

மருத்துவர்களுக்கும் இது பதற்றமான காலம்தான்!

மகப்பேறு துறைத் தலைவர் சுமதி, மதுரை பொது மருத்துவமனை

‘`நிறைய மருத்துவமனைகள்ல கொரோனா தொற்றாளர்களுக்கு பிரசவம் பார்க்கிறதில்ல. அதனால, மதுரை மட்டுமல்லாம பக்கத்து மாவட்டங்கள்ல இருக்கிற கர்ப்பிணிகள்கூட மதுரை ஜி.ஹெச் சுக்குத்தான் வர்றாங்க. கொரோனா முதல் அலை வந்தப்போவே நாங்க எச்சரிக்கையாகி கொரோனாவால பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்க்க தனி பிளாக்கை ஒதுக்கிட்டோம்.

சிலருக்கு ரெண்டாவது ட்ரை மெஸ்டர்ல கொரோனா வந்திருக்கு. அவங்க சரியாகி வீட்டுக்குப் போன பிறகும் வயித்துல இருக்கிற குழந்தைக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயந்துட்டே இருந்தாங்க. அவங்களோடு தொடர்புலேயே இருந்து தைரியப்படுத்திட்டே இருந்தோம்.

செக்கப்புக்கு வர்றவங்ககிட்ட ஒருநாள் காய்ச்சல் அடிச்சாலும் உடனே மருத்துவமனைக்கு வந்துடணும்னு எச்சரிக்கை செஞ்சு அனுப்பினோம். பிரசவ நேரத்துல கொரோனா வந்தவங்களுக்கு, தொற்றுல இருந்து மீண்டு வந்தவங்களைப்பத்தி சொல்லி தைரியம் தருவோம். சுருக்கமா சொல்லணும்னா கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல, எங்களை மாதிரி மகப்பேறு மருத்துவர்களுக்கும் இது பதற்றமான காலம்தான்.’’