Published:Updated:

`கொரோனா பரவல்; ஆடைகளில் வேண்டும் அதிக கவனம்!' -மருத்துவர் பகிரும் 10 டிப்ஸ் #DoctorAdvise

Cloths
Cloths

வெளியே சென்றபோது அணிந்திருந்த ஆடைகளில், நோயாளிகளின் எச்சில் திவலைகள் பட்டிருக்கும்பட்சத்தில், அதன் வழியே உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிவரும் கோவிட்-19 கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள நம்மிடம் உள்ள வழிகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், தன் சுத்தம்(Personal Hygiene) மற்றும் சுகாதார முறைகளைக் கடைப்பிடிப்பதும்தான்.

Testing Corona
Testing Corona

தன் சுத்தம் என்பது கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது, மாஸ்க் அணிந்து வெளியில் செல்வது. நோய்க் கிருமிகளிடமிருந்து தப்பிக்க, உண்ணும் உணவு முதல் உடுத்தும் ஆடைவரை அனைத்துப் பொருள்களின் சுத்தத்திலும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

ஏப்ரல் 20 -க்குப் பிறகு.. விவசாயம் முதல் ஐ.டி வரை! - கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் துறைகள் எவை?

கொரோனா வைரஸ், நாம் அணிந்துசெல்லும் ஆடைகளின் வழியேவும் ஒருவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும்போது அணியும் ஆடைகளையும், ஏற்கெனவே வைரஸ் தொற்று உள்ளவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையும் துவைப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

மருத்துவர் சிவராம கண்ணன்
மருத்துவர் சிவராம கண்ணன்

நாம் அணியும் ஆடைகள், மாஸ்க், கையுறைகள் முதலியவற்றை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும் என்று விளக்குகிறார் பொது மருத்துவர் சிவராம கண்ணன்.

`ட்ரம்ப் ஒன்றும் அரசர் இல்லை; அவர் சொன்னால் செய்யமாட்டேன்!’-அதிபருக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஆளுநர்

1) நீங்கள் வெளியில் செல்லும்போது அணிந்து செல்லக்கூடிய மாஸ்க் மற்றும் கையுறைகள் அப்புறப்படுத்தக்கூடியவையாக (டிஸ்போஸபிள்) இருக்கும் பட்சத்தில், அவற்றை ஒருமுறை மட்டுமே அணிய வேண்டும். அவற்றைத் துவைத்து மீண்டும் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

2) ஒருவேளை நீங்கள் அணியும் மாஸ்க், கையுறைகள் ரீ-யூஸபிளாக இருந்தால், ஒருமுறை அவற்றை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு வெந்நீரில் ஊறவைத்து, கிருமிநாசினி கொண்டு சுத்திகரித்து, நன்றாகக் காயவைத்த, பின்பு மீண்டும் உபயோகிக்கலாம்.

Sanitize face masks
Sanitize face masks

3) மருத்துவத்துறையில் பணிபுரிபவர்கள், மாஸ்க், கையுறைகளில் புற ஊதா கதிர்களைச்(UV rays) செலுத்தி, பின்பு அவற்றைப் பயன்படுத்தலாம். புற ஊதா கதிர்களுக்கு நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடிய திறன் உள்ளது.

4) வெளியே சென்றபோது அணிந்திருந்த ஆடைகளில் நோயாளிகளின் எச்சில் திவலைகள் பட்டிருக்கும் பட்சத்தில், அதன் வழியே உங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வீட்டுக்குள் நுழைந்ததும் அதே ஆடையோடு கிச்சன், ஹால் என்று நடமாடாமல், நேராக பாத்ரூம் சென்று துணிகளைக் களைந்து, டிடர்ஜென்ட் தண்ணீரில் ஊறவைத்துத் துவைத்து, காயவைத்துவிட்டு குளித்துவிட வேண்டும்.

cloths
cloths

5) துணிகளைப் பகல் வெயிலில் நன்றாக உலர்த்த வேண்டும். ஒருபோதும் ஈரமான ஆடைகளை அணியக்கூடாது

6) வெளியில் செல்லும்போது அணிந்து செல்லும் ஆடைகளை, வீட்டுக்கு வந்த பிறகு துவைக்காமல் மற்ற ஆடைகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது.

`பறிமுதல் செய்த வாகனங்களில் பெட்ரோல் திருட்டு!' -ஊர்க்காவல் படை கைவரிசையால் மிரண்ட பரமக்குடி போலீஸ்

7) கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆடைகளைக் கொடுத்திருப்பார்கள் என்பதால், அவற்றைத் துவைத்து அணியவேண்டிய அவசியம் இல்லை.

8) லேசான கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை அவர்களே துவைக்க வேண்டும்.

cloths
cloths

9) முதலில் அவர்களின் ஆடைகளை வெந்நீரில் ஊறவைத்து, பிறகு துவைத்து, தனியே காயவைக்க வேண்டும்.

10) கொரோனா தொற்று உள்ளவர்களின் ஆடைகளை வாஷிங் மெஷின் பயன்படுத்தித் துவைப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளது.

அடுத்த கட்டுரைக்கு