Published:Updated:

கொரோனா தொற்று; 6 வார வென்டிலேட்டர் சிகிச்சை..! - அதிர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட செவிலியர்

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்ட செவிலியர்
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்ட செவிலியர்

கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

`கண்ணாடிகளைப் பார்க்கும்போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை நிறைய அழுதுவிட்டேன்' என்கிறார் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக் (Mike schultz). இவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனாவுக்கு முன்பு தான் எடுத்த புகைப்படத்தையும் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் எடுத்த புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுக் கொரோனா குறித்து தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

கொரோனா
கொரோனா

கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். கொரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு சுமார் 86 கிலோ உடல் எடையுடன் நன்றாக இருக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 20 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளார். தற்போது 62 கிலோ இருப்பதாகக் கூறப்படுகிறது.

``கொரோனா நோய்த் தொற்று எல்லோருக்கும் ஏற்படும் என்பதை தெரியப்படுத்தவே இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளேன். நீங்கள் இளைஞராக இருக்கலாம் அல்லது முதியவராக இருக்கலாம். இந்த வைரஸ் உங்களைப் பாதிக்கலாம். வென்டிலேட்டரில் 6 வாரங்களுக்கு மேல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டவே இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டேன். கொரோனா நோய்த்தொற்று என் நுரையீரலின் திறனைக் குறைத்துள்ளது. என்னையே என்னால் அடையாளம் காண முடியவில்லை. கண்ணாடிகளைப் பார்க்கும்போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை நிறைய அழுதுவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

மைக்
மைக்

மார்ச் 16-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை மோசமானதையடுத்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். 4 வாரங்களாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின்னரே அவரால் இயல்பாக சுவாசிக்க முடிந்துள்ளது. தற்போது அவர் தனது பழைய கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு