Published:Updated:

`மீண்டு வரும் சீனா... பிடியில் சிக்கிய இத்தாலி' - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் #Corona

கொரோனா
கொரோனா

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 463 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகளவில் 1,13,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தினால் உலகளவில் 4,000 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். சீனா மற்றும் இத்தாலியில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே சீனாவில் கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. அந்நாட்டு மருத்துவர் ஒருவர் நோய்த் தாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். சீன அரசின் அலட்சியம் காரணமாக கொரோனாவின் பிடியில் தற்போது உலக நாடுகள் சிக்கித்தவிக்கின்றன. சீனாவில் மட்டும் 3,136 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் 463 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வைரஸ் பரவுவதைத் தடுக்க இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ``பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல்நலப்பிரச்னைகள் மற்றும் அவசர வேலைகளைத் தவிர வேறு எக்காரணம் கொண்டும் மக்கள் வெளியேற வேண்டாம் என அந்நாட்டுப் பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே அறிவுறுத்தியுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இத்தாலியின் பல நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியே வரவும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திருமணம், இறுதிச்சடங்குகள் போன்ற அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இத்தாலியில் 9,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 724 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 463 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டின் புள்ளிவிவரங்கள் சற்று அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்ன.

`மீண்டு வரும் சீனா... பிடியில் சிக்கிய இத்தாலி' - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் #Corona
worldometers.info
`மீண்டு வரும் சீனா... பிடியில் சிக்கிய இத்தாலி' - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் #Corona
worldometers.info

கொரோனா பாதிப்புகள் முதலில் ஏற்பட்ட சீனாவில் இதுவரை 80,754 பேர் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர். அங்கு 59,905 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவைப் பொறுத்தவரையில் பலி எண்ணிக்கை 3,136-ஆக உள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இத்தாலியைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 15-ம் தேதி இத்தாலியில் 3 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி இத்தாலியில் கொரோனா அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை 9,172-ஆக உள்ளது. இதில் 7,985 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் பிப்ரவரி 21-ம் தேதி கொரோனாவில் முதல் மரணம் ஏற்பட்டது. மார்ச் 9-ம் தேதி இந்த எண்ணிக்கை 463-ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 8-ம் தேதி மட்டும் இத்தாலியில் 133 பேர் பலியாகியுள்ளனர். இதன்காரணமாகவே இத்தாலியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு