Published:Updated:

கொரோனா உறுதிசெய்யப்பட்ட பெங்களூரு இளைஞரின் நண்பருக்கும் அறிகுறிகள் #CoronaIndiaUpdates

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( Pixabay )

கொரோனா பதற்றம் நிலவுவதால் டெல்லியில் மொத்தம் 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் உள்ள மொத்தம் 195 நாடுகளில் 84 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. பலி எண்ணிக்கை 3,286 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 25 பேர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Corona Virus
Corona Virus
Pixabay

பாதிக்கப்பட்டவர்களில் பெங்களூரைச் சேர்ந்த 24 வயது மென்பொருள் நிறுவன ஊழியரும் ஒருவர். இவர் அண்மையில்தான் அலுவலக வேலையாக துபாய்க்குச் சென்று திரும்பியுள்ளார். ஐக்கிய அரபு நாடுகளில் இதுவரை 27 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 20-ம் தேதி துபாயிலிருந்து பெங்களூரு திரும்பிய அந்த இளைஞர், தன்னுடைய அலுவலகத்தில் இரு நாள்கள் பணியாற்றிவிட்டு 22-ம் தேதி ஹைதராபாத்துக்குச் சென்றிருக்கிறார்.

பயணத்துக்குப் பிறகு சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அங்குதான் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Travel
Travel
Freepik

கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் பாதிக்கப்பட்ட நபர் குறித்த தகவல்களை வெளியிட கர்நாடக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

``கொரோனா பாதித்துள்ள நபருடன் நெருங்கிப் பழகிய நபர்களையெல்லாம் கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். அவருடன் பழகியவர்களை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தி, அவசியம் ஏற்படும் பட்சத்தில் தனிமைப்படுத்தியும் கண்காணிப்போம்" என்று அம்மாநிலத்தின் தொற்றுநோய்கள் கண்காணிப்பு அமைப்பின் இணை இயக்குநர் டாக்டர் பிரகாஷ் குமார் பி.ஜி தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த இளைஞர் சிகிச்சை பெற்றுவரும் தெலங்கானா மாநில அதிகாரிகள், அவருடன் தொடர்பிலிருந்த 88 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களில் 36 பேருக்கு அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Corona
Corona
Pixabay

இந்நிலையில் அந்த இளைஞருடன் தங்கியிருக்கும் நபர், அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொள்வதாக அனுப்பிய இ-மெயில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில் அந்த நபர், `தெலங்கானாவில் கொரோனா பாதித்துள்ள மென்பொருள் நிறுவன ஊழியரும் நானும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம். தற்போது அவருக்கு நோய் பாதித்துள்ளதால், எனக்கும் ஏதேனும் தொற்று பாதித்துள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இது அவசரம் என்பதால் நான் மருத்துவ விடுப்பு (Sick Leave) எடுத்துக்கொள்கிறேன்.

கொரோனா பாதிப்பு எதிரொலி - டெல்லி ஆரம்ப பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை!
#NowAtVikatan
Email
Email

என்னுடன் பணியாற்றும் பிற ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, என் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் வரும்வரை நான் வீட்டிலிருந்தே பணியாற்றுகிறேன் (Work From Home)' என்று தெரிவித்துள்ளார்.

நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இளைஞர், தெலங்கானாவில் பணியாற்றிய அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தில் செயல்படும் பிற அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அதிகாரபூர்வமாக இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கட்டடத்தில் பணியாற்றும் அனைவரும் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான வழிகளை ஆலோசிக்க அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.

Corona
Corona
Pixabay

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் நபரின் மகன் அங்கிருக்கும் தனியார் பள்ளியில் தொடக்க வகுப்பில் பயின்று வருகிறார். தந்தைக்கு நோய் உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பதற்றம் நிலவுவதால் டெல்லியில் மொத்தம் 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Corona updates
Corona updates
Freepik
பசுவின் சாணம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா? சித்த மருத்துவர் கு.சிவராமன் பதில்

ராஜஸ்தானில் இத்தாலி பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர், ராஜஸ்தானில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு