Published:Updated:

முகக்கவசம் யெஸ்... ஹேண்ட் சானிட்டைசர் நோ... சென்னை கொரோனா அப்டேட்ஸ்!

கொரோனா சென்னை அப்டேட்ஸ்
கொரோனா சென்னை அப்டேட்ஸ் ( Pixabay )

மத்திய, மாநில அரசுகள், மருந்துக் கடை உரிமையாளர்களின் தேசிய சங்கம் ஆகியவையும் ஹேண்ட் சானிட்டைசர், என் 95 முகக்கவசம் ஆகியவற்றை இருப்பு வைக்குமாறு மருந்துக் கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

புத்தாண்டு தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும் நாள்தோறும் கொரோனா வைரஸ் நோய் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவருவது குறையவில்லை. நோயால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் வருகின்றன. நோயின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியதும்தான் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

Corona Virus
Corona Virus
Pixabay

இந்தியாவைப் பொறுத்தவரை 39 பேர் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்தவுடன் தனி மனித சுகாதாரத்துக்குத் தேவைப்படும் விஷயங்களை வாங்கத் தொடங்கினார்கள்.

குறிப்பாக, என் 95 வகை முகக்கவசம், கைகளைச் சுத்தப்படுத்த உதவும் ஹேண்ட் சானிடைசர்கள், ஹேண்ட் வாஷ் லிக்விட் சோப்புகள் ஆகியவற்றை வாங்கி வீடுகளில் வைக்கத் தொடங்கினார்கள். இவற்றில் ஹேண்ட் சானிட்டைசர்களுக்கு மட்டும் அதிகத் தட்டுப்பாட்டு நிலவுகிறது.

இப்போது பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சானிடைசர்களைப் பெற மருந்துக் கடைகளை அணுகுகிறார்கள். இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மருந்துக் கடை உரிமையாளர்
கொரோனா வைரஸ்... தொற்றாமலிருக்க இவற்றையெல்லாம் தொடாதீர்கள்! #VikatanPhotoCards

காரணம், ஹேண்ட் சானிட்டைசர்கள்தான் நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மை அதிகம் பாதுகாக்க உதவும் என்று சீன மருத்துவர்கள் அறிவித்ததுதான். சானிடைசர்களில் காணப்படும் ஆன்டிபயாடிக் (Antibiotics), கிளிசரால் (Glycerol), ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் (Isopropyl alcohol) ஆகியவவை நோய்க்கிருமிகளை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இதனால் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் என அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களில் சானிட்டைசர்கள் வைக்கப்பட்டுள்ளன. வீடுகளிலும் தனி மனிதர்களின் கைப்பைகளிலும்கூட சானிட்டைசர்கள் இடம்பிடித்திருக்கின்றன.

Hand Sanitizer
Hand Sanitizer
தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று! - காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு தீவிர சிகிச்சை

மருந்துக் கடைகளில் சானிட்டைசர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கான பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று சானிட்டைசர்களை பலர் வாங்கி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தமிழகத்தில் முதன்முறையாகக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் என் 95 முகக்கசவம், ஹேண்ட் சானிட்ட்டைசர்கள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அயனாவரம் பகுதியில் கடை வைத்திருக்கும் மருந்துக்கடை உரிமையாளர் ஆனந்தனிடம் பேசினோம்.

"இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் பரவியதும் முகக்சவம் மற்றும் ஹேண்ட் சானிட்டைசர்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்தது. இதற்கு முன்பெல்லாம் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று சானிட்டைசர்கள் மட்டுமே வாங்கி இருப்பு வைத்துக்கொள்வோம். அதுவே சில நேரங்களில் விற்பனையாகாது. ஆனால், இப்போது பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சானிடைசர்களைப் பெற மருந்துக் கடைகளை அணுகுகிறார்கள். இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Mask
Mask

மருந்து விநியோகஸ்தர்களிடம் சானிட்டைசர்களை ஆர்டர் செய்தபோது, தங்களிடமும் இருப்பு இல்லை என்று தெரிவிக்கின்றனர். சானிட்டைசர்களுக்குப் பதில் லிக்விட் ஹேண்ட் வாஷ் சோப்புகளை வாங்குவதில் பெரிதாக மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சானிட்டைசர் அளவுக்கு முகக்கவசத்துக்குத் தட்டுப்பாடு இல்லை.

அவ்வப்போது விநியோகஸ்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் மருந்துக் கடைகளுக்கு விநியோக்கின்றனர். அதனால் ஒரு நபருக்கே அதிக எண்ணிக்கையில் வழங்காமல் 5 அல்லது 10 மட்டுமே விற்பனை செய்கிறோம்" என்றார்.

mask
mask
தாஜ்மகாலை மூடச் சொன்னது முதல் பயோமெட்ரிக் சிஸ்டத்துக்கு தற்காலிகத் தடை வரை...  கொரோனா அப்டேட்ஸ்!

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள், மருந்துக் கடை உரிமையாளர்களின் தேசிய சங்கம் ஆகியவையும் ஹேண்ட் சானிட்டைசர், என் 95 முகக்கவசம் ஆகியவற்றை இருப்பு வைக்குமாறு மருந்துக் கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. சானிட்டைசர் தட்டுப்பாடு தொடர்பாக அரசின் நிலையை அறிந்துகொள்ள மாநில மருந்து கட்டுப்பாடு அலுவலரைத் தொடர்புகொண்டோம். அவர் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு