Published:Updated:

கொரோனா: `தற்போதைய தடுப்பூசிகள் வாழ்நாள் பலன் தராது!’ -தொற்றுநோயியல் நிபுணர்

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தற்போதைய சூழலில், கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி அளிக்கும் பாதுகாப்பு காலம் என்னவாக இருக்கும் என்று கூற இயலாது. இதற்கான பதில் இந்த வருட இறுதியில் அல்லது 2021 ஆரம்பத்தில் மக்களுக்குத் தெரியவரும்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உலக அளவில் பல நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியக் கண்டுபிடிப்பான கோவாக்ஸின் மருந்தும் மனிதர்களிடம் செலுத்தி ஆராயும் நிலைக்கு முன்னேறியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டனி ஃபாசி, 'கோவிட்-19 தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது. அதன் செயல்பாட்டின் கால அளவு வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும்' என்று கூறியுள்ளார்.

vaccine research
vaccine research

அமெரிக்காவிலுள்ள தேசிய அலர்ஜி மற்றும் தொற்றுநோயியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ஆண்டனி ஃபாசி, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் ஏற்பாடு செய்திருந்த வீடியோ கான்ஃபரன்ஸ் அமர்வில், "கோவிட்-19 வைரஸுக்காகக் கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து இந்தக் கொரோனா தாக்குதல் சுழற்சி முடியும்வரை நமக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கொரோனா காலம்... எந்தெந்த உடல்நல சிக்கல்களுக்கு மருத்துவமனை செல்லலாம்? ஒரு வழிகாட்டல்!

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி, அம்மை நோய்க்கு வழங்கப்படும் தடுப்பூசிபோல வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது. குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே இதன் பாதுகாப்பு இருக்கும். பாதுகாப்பை நீட்டிக்க பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

தற்போதைய சூழலில், கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி அளிக்கும் பாதுகாப்பு காலம் என்னவாக இருக்கும் என்று கூற இயலாது. இதற்கான பதில் இந்த வருட இறுதியில் அல்லது 2021 ஆரம்பத்தில் மக்களுக்குத் தெரியவரும்.

test
test

கோவிட்-19 தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் உள்ள 140 மருந்துகளில் ஒன்று பாதுகாப்பானதாகவும் திறனுள்ளதாகவும் அமையலாம். அதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைச் சுத்தப்படுத்துவது ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார் மருத்துவர் ஆண்டனி ஃபாசி.

அடுத்த கட்டுரைக்கு