Published:Updated:

குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?

குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?

இந்த முறை குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்குமே பிரதான அறிகுறிகளாக இருக்கின்றன. பெற்றோருக்கும் அவற்றை கொரோனாவுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தோன்றாமல், குழந்தைக்கு சாப்பிட்டது ஒத்துக்கொள்ளவில்லை என நினைத்துக்கொள்கிறார்கள். நிறைய குழந்தைகளை இப்படித்தான் பார்க்கிறோம்.

குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?

இந்த முறை குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்குமே பிரதான அறிகுறிகளாக இருக்கின்றன. பெற்றோருக்கும் அவற்றை கொரோனாவுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தோன்றாமல், குழந்தைக்கு சாப்பிட்டது ஒத்துக்கொள்ளவில்லை என நினைத்துக்கொள்கிறார்கள். நிறைய குழந்தைகளை இப்படித்தான் பார்க்கிறோம்.

Published:Updated:
குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?

கொரோனாவின் முதல் அலையில் வயதான பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி நின்றார்கள் இளம் மற்றும் நடுத்தர வயது வாரிசுகள். இரண்டாவது அலையில் பெற்றோரை இழந்து ஆதரவின்றி நிற்கும் பிஞ்சுக் குழந்தைகளை அதிகம் பார்க்கிறோம்.

அடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிற கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கின்றன கணிப்புகள்.

கொரோனா குழந்தைகளைத் தாக்காது... அவர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் என்று முதல் அலையில் சொல்லப்பட்ட கூற்று கொஞ்சம் மாறி, தற்போதைய இரண்டாவது அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்படுவதை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேள்விப் படுகிறோம்.

கொரோனாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி, மூன்றாவது அலையில் குழந்தைகள் இலக்காக வாய்ப்பிருக்கிறதா, பெற்றோர் செய்ய வேண்டியவை என் னென்ன... எல்லாக் கேள்விகளுக்கும் விளக்க மான பதில்களைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் ப்ரியா பிஸ்வகுமார்.

‘`கொரோனாவின் முதல் அலையில் குழந்தைகளுக்குப் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லை. முதல் அலையில் பெரும்பாலும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் பெரும்பாலும் அறிகுறிகளற்றோ, மிகக் குறைந்த பாதிப்பு களுடனோ இருந்தார்கள். அவர்களுக்கு நாம் பெரிதாகப் பரிசோதனைகளும் மேற் கொள்ளவில்லை.

இரண்டாவது அலையில் 14 - 45 வயதிலிருப் போரில் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். குழந்தைகளும் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். 0 - 18 வயதுக்குள் இருப்பவர்களை ‘பீடியாட்ரிக் ஏஜ் குரூப்’ என்கிறோம். அப்படிப் பார்த்தால் என்னிடம் கொரோனா சிகிச்சை யில் உள்ளவர்களில் 2 மாதக் குழந்தையும் அடக்கம். கோவிட் தொற்றை மைல்டு, மாட ரேட், சிவியர் என மூன்றாகப் பிரிக்கிறோம். அந்த வகையில் 90 சதவிகிதக் குழந்தைகளை மைல்டு பிரிவில்தான் பார்க்கிறோம். அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலோ, இரண்டு நாள்களுக்கு காய்ச்சல், மூக்கடைப்பு, லேசான இருமல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கிறார்கள். தீவிர பாதிப்புக்குள்ளாவ தில்லை என்பது ஆறுதலான செய்தி’’

- பாசிட்டிவ் மெசேஜுடன் தொடர்கிறார் டாக்டர் ப்ரியா...

அறிகுறிகளில் மாற்றம்...

பெரியவர்கள், குழந்தைகள் என எல்லோருக் கும் இந்த முறை காய்ச்சல் என்பது முதல் அறிகுறியாக இருப்பதில்லை. அதனால் கொரோனாவா எனச் சந்தேகப்பட்டு பரிசோதனைக்குச் செல்வதில் தாமதம் ஏற்படு கிறது. கடந்த வருடம் ‘ஃபீவர் கிளினிக்’குள் நிரம்பி வழிந்தன. காய்ச்சல், முதல் அறிகுறியாக இருந்தது. அதை வைத்துதான் அடுத்து அது கொரோனாவா என்று டெஸ்ட் செய்தோம். இரண்டாவது அலையில் மிதமான ஜல தோஷத்தை அதிகம் பார்க்கிறோம். ‘ஏசில படுத்திருந்தாங்க, ஜில்லுனு ஏதோ குடிச்சாங்க. அதனால தொண்டைக் கரகரப்பு இருக்கு’ என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதைக் கண்டுபிடிப்பதற்குள் குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கும் தொற்று பரவிவிடுகிறது.

இந்த முறை குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்குமே பிரதான அறிகுறிகளாக இருக்கின்றன. பெற்றோருக்கும் அவற்றை கொரோனாவுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தோன்றாமல், குழந்தைக்கு சாப் பிட்டது ஒப்புக்கொள்ளவில்லை என நினைத்துக்கொள்கிறார்கள். நிறைய குழந்தை களை இப்படித்தான் பார்க்கிறோம்.

சளி, இருமலா... அலர்ட்!

கொரோனாவுக்கு முன்பு வரையிலான நிலைமை வேறு. குழந்தைகளை டே கேர் சென்டர்களில் விட்டுச் சென்றார்கள். ப்ளே ஸ்கூலில் இருந்தார்கள், பள்ளிக்கூடம் போனார்கள். அந்த நிலையில் மற்ற குழந்தை களுடன் சேர்ந்திருந்த சூழலில் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் வந்திருக்கலாம். இப்போது லாக் டௌனில் எல்லாக் குழந்தைகளும் வீட்டுக் குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு அநாவசிய தொற்று ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தை ஃப்ளூ சீசன் என்போம். ஆனால், நம்மூரில் அது ஜூன் மாதமே ஆரம்ப மாகும். அதன் அறிகுறிகளாக சளி, இருமல் இருக்கும். இந்த வருடம் அதற்கும் முன் பாகவே நாம் சளி, இருமல் அறிகுறி களைப் பார்க்கிறோம் எனும் போது அதை நிச்சயம் சந்தேகப்பட வேண்டும்.

ஒரு வீட்டில் குழந்தைக்கு இதுபோன்ற அறிகுறிகள் வந்தால் அந்த வீட்டிலுள்ள பெரியவர்களை நான்கைந்து நாள்களுக்குத் தனிமைப் படுத்த வேண்டும். நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் குழந்தைக்கு டெஸ்ட் செய்யலாம். ரொம்பவே சீக்கிரம் டெஸ்ட் எடுத்தாலும் தவறான முடிவுகள் வரக்கூடும். அதில் கொரோனா இல்லை என்றால் வழக்கம்போல எல்லோரு டனும் இயல்பாக இருக்க அனுமதிக்கலாம். அதைவிடுத்து இது சாதாரண சளி, இருமல் என நினைத்துக்கொண்டு வீட்டிலுள்ள எல்லோருடனும் பழகவிட்டால் தொற்று எல்லோருக்கும் பரவக்கூடும். இந்த இரண் டாவது அலையில் குடும்பம், குடும்பமாகப் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் அளவு 94-க்கு கீழ் குறைந்தால் அலர்ட் ஆக வேண்டும். மருத்துவமனையில் அட்மிஷன் தேவைப்படும். ஆக்ஸிஜன் அளவு குறைவதை குழந்தைகளுக்குச் சொல்லத் தெரியாது. விளையாடிக்கொண்டே இருப்பார்கள், திடீரென ஆக்ஸிஜன் குறைந்து விடக்கூடும் என்பதால் தொற்று பாதித்த குழந்தைகளுக்கும் அடிக்கடி பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வைத்து ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதிக்க வேண்டும்.

வாட்ஸ்அப் பகிர்வுகளை முயல வேண்டாம்...

இதுவரை கோவிட் தொற்றைக் குணப் படுத்தவென பிரத்யேக மருந்து இல்லை. உடல், மனநலம் மட்டும்தான் நோய் எதிர்ப்புத் திறனைத் தரும். சரிவிகித உணவு, வைட்டமின் டியைப் பெறும் அளவுக்கு சூரியவெளிச்சம் பட அனுமதிப்பது, உடற்பயிற்சி போன்ற வற்றின் மூலம் குழந்தைகளுக்கு எதிர்ப்பாற்றலை மேம்படுத்த முடியும். வாட்ஸ்அப் பகிர்வுகளைப் பார்த்து ஸிங்க் மாத்திரைகளைக் கொடுப்பது, கஷாயம் அருந்தச் செய்வதெல்லாம் கூடாது. சுய மருத்துவம் கூடவே கூடாது. குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் கொடுக்கவே கூடாது.

குழந்தைகளின் உணவில் கார்போ ஹைட்ரேட் போதுமான அளவு இருக்க வேண்டும். புரதம் அதிகமிருக்க வேண்டும்.நேரத்துக்குச் சாப்பிட வைக்கவும் தூங்க வைக்கவும் வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த பல வண்ணக் காய்கறிகள், பழங்கள் இரண்டு பகுதிகளாவது உணவில் இடம்பெற வேண்டும். நல்ல பாக்டீரியாவை உடலில் தக்கவைத்து, கெட்ட பாக்டீரியாவை அண்டவிடாமல் தடுப்பதால் தயிர் மிக நல்லது. வெறும் புரதம் மட்டுமே உதவாது. காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவற்றை வைத்து சூப், ஸ்டஃப்டு சப்பாத்தி, இட்லி, தோசை எனப் புதுமையாகச் செய்து தரலாம்.

குழந்தைகளுக்கு வேண்டாம் கபசுரக் குடிநீர்!

மஞ்சள்தூள், இஞ்சி, மிளகு, சீரகம் போல சில பொருள்கள் நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவக்கூடியவை என்பது நமக்குத் தெரியும். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க ரசம் கொடுத்தாலே போதும். கபசுரக் குடிநீர்தான் அவசியம் என்றில்லை. தவிர, கபசுரக்குடிநீரில் நிறைய போலிகள் உலவுவதால் தரமற்றதைக் கொடுப்பதாலும் பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு பொட்டாசியம் அளவு அதிகரித்து வாந்தி உணர்வு தீவிரமாகிறது. எனவே, மருத்துவ ஆலோசனையின்றி எதையும் கொடுக்க வேண்டாம்.

தாத்தா - பாட்டிகள் கவனம்...

குழந்தைகள் அறிகுறிகள் அற்றவர்களாக இருக்கலாம். அவர்கள் மூலம் தாத்தா - பாட்டிகளுக்கு எளிதில் தொற்று பரவக்கூடும். எனவே, குழந்தைகளிடமிருந்து முதியோர்களை சற்று விலகியே இருக்கச் சொல்வது நலம். தடுப்பூசி போட்ட நிலையிலும் இதுதான் விதி. தடுப்பூசி என்பது கொரோனாவே வராமல் தடுக்காது. தொற்று வந்தாலும் அது தீவிர மாகாமல் தடுக்கும். எனவே, நோய்த் தொற்றுக்கு எளிதில் இலக்காகக்கூடிய பிரிவைச் சேர்ந்த நபர்களைப் பாதுகாப்பாக இருக்கச் செய்வது தான் நல்லது.

குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?

தடுப்பூசிகள் எப்போது?

எந்த ஒரு தடுப்பூசியும் முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் எனப் பல தரப்பினரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பலகட்ட டிரையல்களுக்குப் பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு வரும். அவசரகால தேவை கருதி நமக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கிடைத் திருப்பது மிகப்பெரிய வரம். 2 - 17 வயதுக் குழந்தைகளுக்கான டிரையல் தற்போதுதான் நடந்து கொண்டிருக் கிறது. அது முடிந்த பிறகுதான் குழந்தைகளுக்கான தடுப்பூசியை எதிர்பார்க்க முடியும். அதுவரை குழந்தைகளைப் பாது காப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா மட்டுமே நோயல்ல...

மற்ற நோய்களிடமிருந்தும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைதானே... அதனால குழந்தை களுக்கான பிற தடுப்பூசிகளை தாமதிக்காமல் போட்டுவிடுவதுதான் பாதுகாப்பானது. நிறைய மருத்துவ மனைகளில் ‘சேஃப் கிளினிக்’ என்று நடத்துகிறார்கள். அதாவது, காய்ச்ச லுடன் வரும் குழந்தைகளையும் பிற குழந்தைகளையும் ஒரே நேரத்தில் அனுமதிக்க மாட்டோம். அப்படிப் பட்ட வசதி உள்ள மருத்துவமனைகளில் முன்கூட்டியே அப்பாயின்ட் மென்ட் வாங்கி, குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசிகளைப் போட்டு விட வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிற உடல்நல பாதிப்புகளுக்கு டெலி கன்சல்ட்டேஷனை நாடலாம்.

மூன்றாவது அலையும் குழந்தைகளும்...

இரண்டாவது அலை இப்படி இருக்கும் என்று யாராவது நினைத் திருப்போமா... அந்த மாதிரிதான் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற கணிப்பும். அது எப்படி வேண்டு மானாலும் இருக்கக்கூடும். அதிக பாதிப்புகள் இல்லாமலும் போகலாம் அல்லது தீவிரமாகவும் இருக்கலாம். எப்படியிருப்பினும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதற்கான கட்டமைப்பு களில் இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளும் மன அழுத்தமும்...

ஆன்லைன் வகுப்புகள் தரும் அழுத்தம், வீட்டுக்குள் முடக்கம் எனக் குழந்தைகளுக்கும் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது. சரிவிகித உணவு என்பது மனநலத் துக்கும் உதவும். இரும்புச்சத்து குறைவான உணவுகள் எரிச்சலான மனநிலையைத் தரலாம். எனவே, அதில் கவனம் தேவை. வீட்டுக்குள் கூட்டம் சேர்த்து விளையாடுவதுதான் ஆபத்தானது. வெளியில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பாக விளையாட அனுமதிக்கலாம்.

குழந்தைகளிடம் தினமும் பெற்றோர் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். குழந்தைகளை தியானம், டான்ஸ், பாட்டு போன்றவற்றைச் செய்ய வைக்கலாம். தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தலாம். நெருப்பில்லாத சமையலில் ஈடுபடுத்தலாம். வீட்டு வேலைகளில் பழக்கலாம். மொத்தத் தில் அவர்களை ஆக்டிவ்வாக வைத்திருங்கள்.

பெற்றோர்தான் ரோல் மாடல்!

குழந்தைகள் எளிதில் எல்லா வற்றையும் புரிந்துகொள்வார்கள். கதை மூலமோ, குழந்தைக்குப் பிடித்த கேரக்டர் மூலமோ மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியத்தையும், தனி மனித இடைவெளி மற்றும் சானிட்டைசர் உபயோகம் பற்றியும் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள் வார்கள். குழந்தைகள் பெற்றோர் களைப் பார்த்துதான் எல்லா விஷயங் களையும் செய்வார்கள். எனவே, குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதற்கு முன் அந்த விஷயங்களைப் பெற்றோர் பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?

எம்.ஐ.எஸ்-சி... பீதி வேண்டாம்

கோவிட் பாதிப்புக்குள்ளான பிறகு அரிதாகச் சில குழந்தைகளிடம் மல்ட்டிசிஸ்டம் இன்ஃப்ள மேட்டரி சிண்ட்ரோம் (Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) பாதிப்பையும் பார்க்கிறோம். அதாவது கல்லீரல், ரத்த ஓட்ட மண்டலம் எனப் பல உறுப்புகளும் ஒரே நேரத் தில் பாதிக்கப்படுகிற நிலை இது. இந்த நிலை யில் நான்கைந்து நாள்களுக்கு அதிக காய்ச்சல், சோர்வு, வாந்தி, சாப்பிடாதது போன்ற அறிகுறிகள் இருக்கும். உடனே ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இப்படி பாதிக்கப்படுகிற குழந்தை களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதால் இதுகுறித்து அதிக பீதியடையத் தேவையில்லை.