Published:Updated:

கொரோனா: பேண்டெமிக், எபிடெமிக், எண்டெமிக், அவுட்பிரேக்... வித்தியாசங்களும், விளக்கங்களும்! #CoronaStudy

Corona Virus
Corona Virus

உலகின் பல பகுதிகளிலும் கொள்ளை நோயாக உருவெடுக்கக்கூடிய தகுதி பெற்ற நோயை Pandemic என்று அறிவிக்கும் உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனம், புதிய கொரோனா வைரஸ் தொற்றை உலகம் முழுவதும் தாக்கும் கொள்ளைநோயாக அறிவித்துள்ளது.

இதை "Pandemic" என்று அழைக்கிறோம்.

இந்த அறிவிப்பு குறித்தும் அதற்குப் பின் இருக்கும் காரணங்கள் மற்றும் நாம் எடுக்கவேண்டிய முன் எச்சரிக்கைகள் குறித்தும் இந்தக் கட்டுரையில் காண்போம்.

WHO
WHO

ஒரு தொற்று நோய், உலகின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிகமாகப் பரவினால், அதை "குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தாக்கும் கொள்ளை நோய்"என்று வழங்குவோம். இதை Epidemic என்று அழைக்கிறோம்.

இதற்கு இன்னொரு பெயர் "Outbreak situation". இதுபோன்ற கொள்ளை நோய்கள் ஒரு நாட்டில் குறிப்பிட்ட காலங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.

நமது நாட்டிற்கு மழைக்காலங்களில் டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் "Epidemic" நோய்களாக இருக்கின்றன. இந்தக் கொள்ளை நோய்கள், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. உதாரணம், ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கும் எபோலா தொற்று. ஆப்பிரிக்காவில், சியாரா லியோன், லிபிரியா, காங்கோ நாடுகளில் மட்டும் காணப்படும் இந்த நோய், அங்கு மட்டும் கொள்ளை நோயாக இருக்கிறது.

Corona Virus
Corona Virus

சில நோய்கள், காலமாற்றத்துக்கு உட்படாமல் வருடத்தின் அனைத்து நாள்களிலும் ஒரு நாட்டில் காணப்பட்டால் அதை "ENDEMIC" என்று கூறுவோம். காசநோய் என்று அழைக்கப்படும் tuberculosis தொற்றுநோய் இந்தியாவில் காலமாற்றத்துக்கு அப்பாற்பட்டு எப்போதும் இருப்பதால், Endemic கணக்கில் வரும்.

`நல்லவேளை இந்தியாவிலிருந்து உருவாகவில்லை’ - சர்ச்சையை ஏற்படுத்திய பொருளாதார நிபுணரின் பேச்சு #Corona

உலகின் பல பகுதிகளிலும் கொள்ளை நோயாக உருவெடுக்கும் ஒரு நோயை, "உலகம் முழுவதும் தாக்கும் கொள்ளை நோயாக" அறிவிப்பார்கள்.இதைத்தான் Pandemic என்று பொருள்கொள்கிறோம்.

புதிய கொரோனா வைரஸ் தொற்று, வுஹானில் இருக்கும்போது "Outbreak situation" ஆக இருந்தது.

பிறகு அது, ஹூபய் மாகாணத்துக்குப் பரவி, சீனா முழுவதும் பரவும் "Epidemic" ஆக மாறியது.

Corona Virus
Corona Virus
Pixabay

அங்கிருந்து உலகெங்கும் பரவி தென் கொரியா, இரான், இத்தாலி, ஸ்பெயின், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பரவி, கொள்ளை நோயாக உருவெடுத்தது.

உலகின் பல நாடுகளுக்கும் பரவி, இப்போது உலகைத் தாக்கும் கொள்ளை நோயாக உருவெடுத்துள்ளது.

Pandemic என்றால் என்ன?

உலகின் பல பகுதிகளிலும் கொள்ளை நோயாக உருவெடுக்கக் கூடிய தகுதிபெற்ற நோயை Pandemic என்று அறிவிக்கும் உலக சுகாதார நிறுவனம்.

இதற்கு முன் 2009 ஆம் ஆண்டு, பன்றிக்காய்ச்சல் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட "H1N1 Flu Pandemic" உலகம் முழுவதும் 2,00,000 மக்களை 2009 -ம் வருடம் தாக்கியது.

இப்போது வரை அதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நோய்க்கு இறப்பு விகிதம் 0.02% தான் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Corona
Corona

உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்றை பேண்டெமிக் என்று அறிவித்ததன் காரணம் என்ன?

உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதற்காகவும், இதன் வழி கொள்ளைநோய் பரவி, அதனால் ஏற்படும் மரணங்களையும் பொருளாதார இழப்பையும் முடிந்த அளவு தடுக்கும் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே உலக சுகாதார நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாறாக, இந்த அறிவிப்பினால் மக்கள் அளவு கடந்த பீதியடையத் தேவையில்லை. எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் போதுமானது.

1. தன் சுத்தம் பேணுதல் வேண்டும்.

2. அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். குறைந்தபட்சம் 20 விநாடி முதல் 30 விநாடி கை கழுவ வேண்டும்.

தன் சுத்தம்
தன் சுத்தம்

3. இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டை வைத்து இரும வேண்டும். கைக்குட்டை இல்லாத சூழ்நிலைகளில் கட்டாயம் முழங்கைக்குள் இரும வேண்டும்.

4. கொரோனா தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல் , வறட்டு இருமல் , உடல் அசதி போன்றவை இருந்தால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறருக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

`கல்லூரி மாணவருக்கு கொரோனா அறிகுறி?!’ -அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அதிர்ச்சி கொடுத்த நோயாளிகள்

5. கொரோனா நோய்த்தொற்றின் அபாய அறிகுறிகளான மூச்சு விட சிரமம், மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால், மருத்துவரைத் தொடர்புகொள்ள வேண்டும். கொரோனா தொற்றுக்கு என இருக்கும் பிரத்யேக மருத்துவமனை குறித்து தகவல் அறிந்து, அனுமதி பெற வேண்டும்.

6. பொது சுகாதாரத்துறை வழங்கும் அறிவுரைகளை மதிக்க வேண்டும்.

7. பொது இடங்களில் கூட்டம் கூடுவது தவறு. கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

மருந்து
மருந்து

8. அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

9. மருந்தகங்களில் சுய மருத்துவம் செய்வது தவறு.

10. குழந்தைகள் , முதியோர்கள் , நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரகநோய் , புற்றுநோய் இருப்பவர்கள் பொதுஇடங்களைத் தவிர்ப்பது நல்லது.

கொரோனா குறித்த அச்சமின்றி, எச்சரிக்கை உணர்வுடன் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை எடுப்பது நன்மை பயக்கும்.

அடுத்த கட்டுரைக்கு