Published:Updated:

`உலகை அச்சுறுத்தும் கொரோனா’ - வுகானிலிருந்து உலக நாடுகளுக்குப் பரவியது எப்படி?

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

பிப்ரவரி மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாதான் காரணம் என பிரிட்டிஷ் எழுத்தாளரும், நகைச்சுவை கலைஞருமான பாட் காண்டெல் கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனாவை சீன வைரஸ் என்றே விமர்சிக்கிறார். கொரோனா தடுப்பதில் சீனா காட்டிய அலட்சியம்தான் இன்று உலகம் சந்திக்கும் இந்த நிலைக்குக் காரணம் என உலக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா இந்த உலகுக்கு எப்படிப் பரவியது

சீனாவின் வுகான் நகரத்தைச் சேர்ந்த நான்கு பேர் முதலில் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டனர். இந்த நான்கு பேரும் வுகானின் மீன் சந்தைக்கு அருகில் வசித்தவர்கள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கமான சிகிச்சை பலனளிக்காது. நிமோனியா காய்ச்சல் இருக்கிறது என்பது மட்டுமே மருத்துவர்கள் அறிந்திருந்தனர்.

`உலகின் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாதான் காரணம்!’ - பிரிட்டிஷ் எழுத்தாளர் #coronavirus

டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த வைரஸ் குறித்த எந்த எச்சரிக்கையும் சீன அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையையடுத்து ``இந்த வைரஸைக் கட்டுப்படுத்திவிடலாம். குணப்படுத்தக்கூடியது” என்று கூறியது சீன அரசு.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் ஒருவரைப் பாதித்தால் அந்த நபரிடம் இருந்து இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனவரி சீனர்களின் புத்தாண்டு மாதம். இந்த மாதத்தில் சீன வீதிகள் கோலாகலமாக இருக்கும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தயாராகும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் வுகான் நகரத்திலிருந்து தங்களது சொந்த நகரங்களுக்குப் பயணமாகத் தொடங்கினர். அப்போதும் சீன அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனவரி 21-ம் தேதி வாக்கில்தான் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வுகான் நகரம் முடக்கப்படுவதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் காலதாமதமான அறிவிப்பால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த அறிவிப்புக்கு முன்னரே ஆயிரக்கணக்கான மக்கள் வுகானை விட்டு வெளியேறியிருந்தனர்.

கொரோனா
கொரோனா
pixabay

சில நாள்கள் கழித்து மற்ற நகரங்களும் மூடுவதாக சீன அரசு அறிவித்தது. ஆனால், எந்தப் பிரயோஜனமும் இல்லை; உள்ளூரில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தது. இந்த ஜனவரி மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்தையும் சீனா அனுமதித்திருந்தது. இதன்மூலம் இந்த வைரஸானது உலக நாடுகளுக்குப் பயணமானது.

 `உள்நாட்டு போருக்கும் காலராவுக்கும் பலியாகும் உயிர்கள்...’ - கொரோனாவை  எதிர்கொள்ளுமா ஏமன்?

வுகான் நகரத்திலிருந்து மட்டும் ஒரு மாதத்துக்கு சுமார் 900 நபர்கள் நியூயார்க் நகரத்துக்குப் பயணமாகிறார்கள். 2,200 பேர் சிட்னிக்கும், 15,000 பேர் பாங்காங் பயணமாகிறார்கள் என்கிறது ஓர் அறிக்கை. வுகான் மருத்துவ நகரம் என அழைக்கப்படுவதால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு கல்வி கற்கிறார்கள். ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் சீனாவுக்குப் பயணமாகிறார்கள். இதையடுத்து, ஜனவரி இறுதியில் வுகான் நகரத்துக்கான விமான சேவையை ரத்து செய்தது சீன அரசு.

கொரோனா
கொரோனா

பிப்ரவரி மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. சீன நகரங்கள் முடக்கப்பட்டன. மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சீனா மீதுதான் உலக மக்களின் கவனம் இருந்தது. மார்ச் மாதம் இந்த நிலை அப்படியே தலைகீழானது. இத்தாலி, இரான், தென்கொரியா நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தாலியின் நிலைமை தற்போது மோசமாக இருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துவிட்டதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. மற்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கிவிட்டது. இந்தியாவிலும் கொரோனா பரவத் தொடங்கிவிட்டது. 21 நாள் ஊரடங்குக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். பயணங்களைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் இருந்தாலே கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

News Source : The Newyork times

அடுத்த கட்டுரைக்கு