Published:Updated:

மன உளைச்சல் குறையும்... வீட்டிலேயே சிகிச்சை பெற விரும்பும் கொரோனா நோயாளிகள்!

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்வதால் மன உளைச்சலைத் தடுக்க வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதை அவர்கள் விரும்புகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிகரிக்கும் நோயாளிகளுக்குச் சிகிச்சை மேற்கொள்ளத் தேவையான இடங்களைத் தயார்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வீட்டிலேயே, தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவதையே விரும்புகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்வதால் வரும் மன உளைச்சலைத் தடுக்க வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்வதை அவர்கள் விரும்பகின்றனர். வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்வதே, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட சிறந்த சூழலாக உள்ளது. கொரோனா தொற்று உள்ள 80 சதவிகிதம் பேர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்வதையே விரும்புகின்றனர்.

``குழந்தைகளுக்கு கொரோனா பற்றி தெரியணும்…” - விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் தேனி இளைஞர்

40 முதல் 45 வயதில், மிதமான அறிகுறிகளுடன் நாள்பட்ட நோய் பாதிப்புகள் இல்லாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, தேவையற்ற பயத்துக்கு உள்ளாகிறார்கள். ஆனால், வீட்டில் இருக்கும்போது கொரோனா வைரஸ் தொற்றும் சாதாரணமானதுதான் என்ற மனநிலைக்கு வருகிறார்கள்' என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்த நோயாளிகளுக்கென்று தனியாக கழிவறையுடன்கூடிய அறையை ஒதுக்குவது அவசியம். குடும்ப உறுப்பினர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டு அவர்களின் தொலைதூரக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

அறிகுறி இல்லாதோருக்கு வீட்டிலே சிகிச்சை.. நிலவேம்பு முதல் Zinc வரை.. அரசு சொல்லும் வழிமுறைகள் என்ன?
அடுத்த கட்டுரைக்கு