Published:Updated:

கண் நோய் உள்ளவர்களை கோவிட் அதிகம் பாதிக்கும்... புதிய ஆய்வு சொல்வது என்ன?

கண்
News
கண்

இந்த மாகுலர் சிதைவு (AMD) நோய் உள்ளவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த பாதிப்பானது சுவாசப் பிரச்னைகள் மற்றும் உயிரிழப்பு வரை நேரிடலாம் என்று சான்றுகள் கூறுகின்றன.

கண் நோய் உள்ளவர்களை கோவிட் அதிகம் பாதிக்கும்... புதிய ஆய்வு சொல்வது என்ன?

இந்த மாகுலர் சிதைவு (AMD) நோய் உள்ளவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த பாதிப்பானது சுவாசப் பிரச்னைகள் மற்றும் உயிரிழப்பு வரை நேரிடலாம் என்று சான்றுகள் கூறுகின்றன.

Published:Updated:
கண்
News
கண்

கொரோனா வைரஸானது வெவ்வேறு வயதினரை வெவ்வேறு விதமாகத் தாக்குகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர், பல விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்கள்; சிலர் கொரோனா தொற்று ஏற்பட்ட மற்றவர்களைவிட அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

கொரோனா தொற்றின் பாதிப்பு என்பது, ஏற்கெனவே உடல்நலக்குறைவு உள்ளவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அதிகம் இருக்கும். வயது தொடர்பான மாகுலர் சிதைவு (AMD) என்னும் கண் சார்ந்த நோய் உள்ளவர்களுக்கு, கொரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Eyes (Representational Image)
Eyes (Representational Image)
Photo by Craig Adderley from Pexels

வயது தொடர்பான மாகுலர் சிதைவு (AMD) என்பது மையப் பார்வையை பாதிக்கக்கூடிய கண் நோயாகும். இந்த நோய் மாகுலா (விழித்திரையின் ஒரு பகுதி) சேதத்தால் ஏற்படுகிறது. வயதானவர்களிடையே பார்வை இழப்புக்கு AMD தான் முக்கிய காரணம். இந்த மாகுலர் சிதைவானது, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரக்கூடியது. இந்தியாவில் பலருக்கு இப்பிரச்னை உள்ளது‌. தற்போதைய சூழலில், மாகுலர் சிதைவுக்கு தீர்வு எதுவும் இல்லை.

இந்த மாகுலர் சிதைவு (AMD) நோய் உள்ளவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த பாதிப்பானது சுவாசப் பிரசனைகள் மற்றும் உயிரிழப்பு வரை நேரிடலாம் என்று மருத்துவச் சான்றுகள் கூறுகின்றன. பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், ``இந்த அதிகரித்த ஆபத்து, மரபணு அடிப்படையில் இருக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவானது, AMD மற்றும் கோவிட் 19 தொற்றுக்கு இடையே ஒரு புதிய தொடர்பை அடையாளம் கண்டுள்ளது. இது ஒரு மரபணுவில் உள்ள மாறுபாடுகளுடன் பிளேட்லெட் பெறப்பட்ட வளர்ச்சிக் காரணியை (PDGF - platelets derived growth factor) குறியாக்குகிறது. இந்த வளர்ச்சிக் காரணியானது புதிய ரத்த நாளங்களை உருவாக்க உதவுகிறது. மேலும், இது வயது தொடர்பான மாகுலர் சிதைவில் ஏற்படும் அசாதாரண ரத்த நாள மாற்றங்களுடன் தொடர்புடையது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வயது தொடர்பான மாகுலர் டீஜெனரேஷன் மற்றும் மிகவும் கடுமையான கோவிட்-19 விளைவுகளுக்கு இடையேயான தொடர்பு, நிரப்பு புரதங்கள் (complement proteins) மற்றும் ரத்த சீரத்தில் (blood serum) அதிக அளவு PDGF உள்ள செயலிழப்புக்கான மரபணு திரிபு அதிகரிப்பு (genetic predisposition) காரணமாகத் தோன்றுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள், ஆன்லைன் ஜர்னல் ஆஃப் கிளினிகல் மெடிசின் இதழில் வெளியாகியுள்ளன.