Published:Updated:

5 லட்சத்தைத் தாண்டிய இந்தியாவின் கோவிட் மரணங்கள்; கணக்கில் வராதது எவ்வளவு?

கொரோனா மரணம்

இந்தியாவிலுள்ள பல மாநிலங்கள் தங்கள் மாவட்டங்களிலிருந்து தரவுகளைத் தொகுத்து அனுப்பிய பிறகே, கோவிட் நோய் இறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. உயர் நீதிமன்ற அழுத்தத்தால், கடந்த சில மாதங்களில் பல மாநிலங்கள் கோவிட் இறப்பு எண்ணிக்கையைப் புதுப்பித்துள்ளன.

5 லட்சத்தைத் தாண்டிய இந்தியாவின் கோவிட் மரணங்கள்; கணக்கில் வராதது எவ்வளவு?

இந்தியாவிலுள்ள பல மாநிலங்கள் தங்கள் மாவட்டங்களிலிருந்து தரவுகளைத் தொகுத்து அனுப்பிய பிறகே, கோவிட் நோய் இறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. உயர் நீதிமன்ற அழுத்தத்தால், கடந்த சில மாதங்களில் பல மாநிலங்கள் கோவிட் இறப்பு எண்ணிக்கையைப் புதுப்பித்துள்ளன.

Published:Updated:
கொரோனா மரணம்

கோவிட் - 19 இறப்பு எண்ணிக்கை 5,00,000-ஐ தாண்டியுள்ளது என இந்தியா அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளதாகவும், பல மில்லியன் கணக்கான மக்கள் நோய்த்தொற்றும் அபாயத்தில் உள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

டெல்டா வேரியன்ட் தொற்று பரவ தொடங்கிய பிறகு, ஜூலை 2021 வரை 4,00,000 இறப்புகளைப் பதிவு செய்து, உலக அளவில் மிக அதிகமான இறப்புகளைக் கொண்ட நான்காவது நாடாக இந்தியா உள்ளதென தரவுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவில் கிட்டத்தட்ட 3 மில்லியன் கோவிட் இறப்புகள் ஏற்பட்டதாக, அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர், சின்மய் தும்பே, சயின்ஸ் இதழில் வெளியிட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த மாதம், இந்திய அரசாங்கம் இந்த ஆய்வின் அறிவிப்பை நிராகரித்ததாகவும் கூறினார்.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவிலுள்ள பல மாநிலங்கள் தங்கள் மாவட்டங்களிலிருந்து தரவுகளைத் தொகுத்து அனுப்பிய பிறகே, கோவிட் நோய் இறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. உயர் நீதிமன்ற அழுத்தத்தால், கடந்த சில மாதங்களில் பல மாநிலங்கள் கோவிட் இறப்பு எண்ணிக்கையைப் புதுப்பித்துள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தாமதமான பதிவுகள் மற்றும் பிற நிர்வாகப் பிழைகள் காரணமாக, இறப்பு எண்ணிக்கையில் தவறுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவில் கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 41.95 மில்லியனை எட்டியுள்ளது, உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகம் பாதித்த நாடாக இந்தியா உள்ளது.

புதிய நோய் தொற்றுகளைத் தவிர்க்க, தடுப்பூசி போடத் தகுதியானவர்களுள் நான்கில் மூவருக்கு, கட்டாய இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது.

Covid -19 Vaccine
Covid -19 Vaccine
AP Photo

பின்தங்கிய இடங்களில் தடுப்பூசி போட்ட விகிதங்களை அதிகரிக்க, சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர்.

அதிகாரபூர்வமாக அரசு பதிவு செய்யும் கோவிட் மரணங்களை விட, கோவிட் இறப்பு இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகம் உள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி இழப்பீடு வழங்குவதற்கான கொள்கை மிகவும் தாராளமாக உள்ளதால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை கோவிட் இறப்புகளைவிட அதிகமாக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர்.