Published:Updated:

ஓ... மை... (God)க்ரான் | கோவிட் கால அபத்தங்கள் #MyVikatan

Mask
News
Mask ( AP Illustration/Peter Hamlin )

எதற்காக மாஸ்க் போட வேண்டும் என்ற புரிதல் இல்லாமல், எப்படி போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் காதில் மாட்டிக் கொண்டால் வைரஸ் காத தூரம் போய்விடும் என்ற நம்பிக்கையில் நாம் வகுத்துக் கொண்ட விதிமுறைகள்தாம் இன்று ஒமிக்ரானில் வந்து நிற்கிறது.

ஓ... மை... (God)க்ரான் | கோவிட் கால அபத்தங்கள் #MyVikatan

எதற்காக மாஸ்க் போட வேண்டும் என்ற புரிதல் இல்லாமல், எப்படி போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் காதில் மாட்டிக் கொண்டால் வைரஸ் காத தூரம் போய்விடும் என்ற நம்பிக்கையில் நாம் வகுத்துக் கொண்ட விதிமுறைகள்தாம் இன்று ஒமிக்ரானில் வந்து நிற்கிறது.

Published:Updated:
Mask
News
Mask ( AP Illustration/Peter Hamlin )

ஓய்வுக்காக குடும்ப சகிதம் ஒரு கடற்கரை ரிசார்ட்டில் ஒதுங்கினோம். நவம்பர் இறுதியின் அமீரக வெப்பநிலை ரம்மியமாக இருக்க, குளிர் காரணமாக கடலிறங்க தயங்கி கால் நனைத்தபடி கடற்கரை மாலை கழிந்தது. இரவு உணவுக்கு எழுபது பேர் (கைக்குழந்தைகள் உட்பட) அந்த ரிசார்ட்டின் உணவகத்தை நோக்கிப் படையெடுத்தனர். வாசலில் எல்லோருக்கும் மாஸ்க் கொடுத்தார்கள் (No Mask No Entry). உள்ளே பஃபே வகை உணவு பரிமாறல். அவரவர் இருக்கை பிடித்து... தட்டை பிடித்து... உணவு எடுக்க எத்தனித்த போது நானும் ‘மாஸ்க்கை' கழட்டி மேசையில் வைத்து விட்டு தட்டேந்த போனேன். பதறியபடி என்னை நெருங்கிய சிப்பந்தி ஒருவர் ‘சார் மாஸ்க் ப்ளீஸ்' என்றார். நான் சுற்றி பார்த்த போது, ரப்பரை காதில் மாட்டி மாஸ்க்கை தாடைக்கு கீழே சுருட்டி வைத்து எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். நான் அவரை ஒரு வெறும் பார்வை பார்த்தேன். (ஏண்டா... மாஸ்க் போட்டுட்டு எப்படிடா சாப்ட்றது – மைண்ட் வாய்ஸ்) அர்த்தம் புரிந்து, “இல்ல சார் சம்பிரதாயமாய் (ஃபார்மால்டிக்கு) மாஸ்க்-ஐ காதில் மாட்டிக்கோங்க” என்ற மறுபதிலில், இல்லைன்னா எங்களுக்கு (ரெஸ்ட்டாரண்ட்க்கு) அபாரதம் கட்ட வேண்டி வரும் என்ற பதற்றம் இருந்தது.

எதற்காக மாஸ்க் போட வேண்டும் என்ற புரிதல் இல்லாமல், எப்படி போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் காதில் மாட்டிக் கொண்டால் வைரஸ் காத தூரம் போய்விடும் என்ற நம்பிக்கையில் நாம் வகுத்து கொண்ட விதிமுறைகள்தாம் இன்று ஒமிக்ரானில் வந்து நிற்கிறது.

நூறு வருடங்களுக்கு முன்பு, H1 N1. வகை இன்புளுயன்ஸா வைரஸ் தான் மனித குலத்தின் முதல் பேரழிவை ஏற்படுத்திய மகாமாரி (pandemic). ஏறத்தாழ 500 மில்லியன் (அன்றைய உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு) மக்களை தொற்றி, 80மில்லியன் மக்களை காவு வாங்கி இருக்கிறது. (போகிற போக்கில் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு வித்திட்டது இந்த வைரஸ் தான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்). நூறு வருடங்களை கடந்தும் H1 N1. வகை இன்புளுயன்சா வைரஸ்கள் உருமாறி இன்னும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. சங்கர், “அதுக்கும்மேல” என்று (ஐ – படம்) பயமுறுத்தியதும் உருமாறிய இந்த வைரஸின் கற்பனைதான். நாமும் தடுப்பூசி மூலம் தடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் அன்றும் ... இன்றும்.. என்றென்றும்!

பெரியம்மை நோய் தவிர வேறு எந்த வைரஸையும் இந்த மருத்துவ விஞ்ஞானம் கட்டுப்படுத்தியதாக வரலாறு இல்லை. சாதாரணமாக மூக்கில் சளி தொல்லை தரும் அடினோ வைரஸ், சிக்கன் பாக்ஸ், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நாய்க்கடி ரேபிஸ், டெங்கு, எய்ட்ஸ் என நூற்றுக்கணக்கான வைரஸ்களுடன் நவீன மருத்துவ விஞ்ஞானம் போராடிக் கொண்டு தான் இருக்கிறது.1918 ல் தொடங்கி 1920 வரை நான்கு அலை தாக்கத்தை உண்டாக்கிய ஸ்பேனிஷ் ஃபுளு சுமார் 24 மாத காலங்களுக்கு உருமாறி கோரதாண்டவம் ஆடி, திரிந்து பின் வலுவிழந்திருக்கிறது. ஆனால் நூறு ஆண்டுகள் கழித்து இதற்கு முன்பு சற்றும் அறியப்படாத இந்த கொரானா வகை வைரஸ், டெல்ட்டா, டெல்ட்டா+, காப்பா என எல்லா வகை வாக்சின்களையும் கடந்து இப்போது ஒமிக்ரானாக மாறி சண்டித்தனம் செய்து கொண்டு இருக்கிறது. (டிசம்பர் 28ஆம் தேதி அதுக்கு இரண்டாம் பொறந்த நாள் வேற வருது) இது மருத்துவ பிழையா?? அல்லது மானுடப் பிழையா??

கோவிட் வைரஸ் நுரையீரலை தாக்கி நிமோனியா, (Hypoxia) இரத்தத்தில் ஆக்சிசன் குறைதல், உயிரிழப்பு என்பதே மருத்துவ உலகில் நம்ப முடியாத அதிர்ச்சி தான். ஏனெனில் அது வெறும் சளி காய்ச்சல் உண்டு பன்னும் சாதாரண வைரஸாகத் தான் 2010 வரை உலவி கொண்டு இருந்தது.

அது நுரையீரலை தாக்காமல் இருக்க என்ன வழி என மருத்துவர்கள் மண்டையை பிய்த்துக் கொள்ள, ஹைட்ராக்சி குளோரோகுயின் (Hydroxy Chloroquine) பயன்பாடு தெரிய வர, சமூக ஊடகத்தில் வெகுவாக பரவ இரண்டாம் நாள் உலகெங்கும் தட்டுப்பாடு. அமெரிக்க பிரதமர் ‘தரலன்னா நடக்குறதே வேற' என மிரட்டும் அளவுக்கு.. அது முழுமையான தீர்வு இல்லை என தெரிந்த போது ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என அடுத்த மூன்று மாதங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கையில் கவச உடை, வெண்டிலேட்டர் தவிர வேறோன்றும் இல்லாமல் நகர்ந்தது. கோவிட் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அக்கம் பக்கம் வீட்டார்கள் வீடு காலி செய்ய சொன்ன அபத்தங்கள் நடந்தேறியது.

வேறு மருந்துகள் இல்லாமல் வெறுமனே வெண்டிலேட்டரில் இணைக்கப்பட்ட நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இறந்த போக... வெண்டிலேட்டர் ஒரு உயிர்கொல்லி (ventilator is a Killer) என பிதற்றினார் ட்ரம்ப். பஸ்தரிக்கா, கபாலபாதி என மூச்சுபயிற்சியில் கோவிட் - ஐ விரட்டி விடலாம் என ஒருவர், ராகுவின் பெயர்ச்சி காரணம் என அடித்துச் சொன்ன சிறுவன் இப்படி எல்லா யூ-ட்யூபர்களும் மருத்துவர்கள் ஆனார்கள். அனேக மருத்துவர்கள் யூ-ட்யூப் சேனல் தொடங்கினார்கள் ... (ஆனால் எவருமே வரலாறு படிக்கவே இல்லை.)

ஃபேவிப்ரவீர் + ரெம்டெஸிவரென இரு வைரஸ் கொல்லிகள் நம்பிக்கை தர, சற்று ஆசுவாசம்.. இறப்பு எண்ணிக்கை குறைந்தது.

Protection from corona virus
Protection from corona virus
கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறோம் என்ற பெயரில் அபத்த நாடகங்களே அரங்கேறுகின்றன.

முதல் அலை ஓய்ந்த பின் எல்லா கட்டுப்பாடுகளும் காற்றில் பறக்க, கூட்டம் கூட்டமாய் பேருந்து பயணம் , மண்டபம் நிறைந்த திருமணங்கள் என இயல்பு வாழ்க்கை திரும்பியதாக மனிதன் நினைத்த போது கொரனா சிரித்தது(வரேன் மகனே....)

இரண்டாம் அலை மேற்கத்திய நாடுகளில் வலுப்பெற்று, அமீரகம் ஓமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் கோர தாண்டவம் ஆடிய போது இந்திய திருநாடு தேர்தல் அறிவித்தது. விளைவு கொத்துக்கொத்தாக மரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்க்காக நீண்ட வரிசை, கள்ள மார்க்கெட்டில் ரெம்டிசிவிர் என அபத்தங்களின் உச்ச நாடகம்.

மூன்றாம் அலை, சில நாடுகளில் பரவ, சற்று எச்சரிக்கையுடன் கட்டுப்படுத்தப்பட்டது. காரணம் அவசரகதியில் உருவாக்கப்பட்ட வாக்சின்கள்(vaccine). தடுப்பூசிகள் நோய் தாக்கத்தை குறைக்க, தனிமனித கட்டுப்பாடுகள் மீண்டும் காற்றில் பறந்தது.

ஆக்சிஜன் சிலிண்டரை தூக்கி நடந்ததும், தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவுக்கு கால்நடை பயணம் மேற்கொண்டதும் எளிதில் மறந்து ஷாருக்கான் மகனுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம்.

ஒரு மாலில் நல்ல சோஃபாவாக இருக்கிறதே என நானும் என் மகனும் அந்த விற்பனையாளரை நெருங்க முற்பட்ட போது அவர் மாஸ்க்கை விலக்கி “ஹச்ச்ச்ச்ச்ச்” என தும்மி விட்டு மீண்டும் மாஸ்க் போட்டுக் கொள்ள அப்படியே திரும்பி வந்துவிட்டோம்.

காரை விட்டு இறங்கி, எனது மாஸ்க்கை சரியாக கட்டும் முன் ‘மாஸ்க்' என என்னை எச்சரித்த போலிஸ் தனது ஹிட்லர் மீசைக்கு கீழே மாஸ்க் அணிந்து இருந்தார். இப்படி, கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறோம் என்ற பெயரில் அபத்த நாடகங்களே அரங்கேறுகின்றன.

எல்லாம் சரியாகிவிட்டது என படுத்த படுக்கையாய் கிடந்த உலக பொருளாதாரத்தை சற்று நிமிர்ந்து உட்கார வைக்கலாம் என உலமே யோசித்து கொண்டு இருந்த போது...
Corona Virus
Corona Virus

விளைவு! நான்காம் அலை, ஒமிக்ரான், டெல்மைக்ரான்.

இதில் ஒமிக்ரான் அதிவேக பரவும் தன்மையுடையதாக இருந்தாலும் அதிக நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது சற்று ஆறுதல். டெல்மைக்ரான் – கடவுள்பாதி மிருகம் பாதி ரகம். “டெல்டாவின் வீரியம் – ஒமிக்ரானின் வேகம்”.

எல்லாம் சரியாகிவிட்டது என படுத்த படுக்கையாய் கிடந்த உலக பொருளாதாரத்தை சற்று நிமிர்ந்து உட்கார வைக்கலாம் என உலமே யோசித்து கொண்டு இருந்த போது... (அலை.. லாக்டவுன்.. வேக்சின்.. ரிப்பீட்டு – முடியல தலைவரே!)

நான்காம் அலையுடன் வெல்கம் டூ 2022!