Published:Updated:

சாமியைக் கும்பிட்ட தேவி... தேவியைக் கும்பிட்ட அர்ச்சகர்! - கோபால் தேவி

கோபால் தேவி
பிரீமியம் ஸ்டோரி
கோபால் தேவி

நம்ம ஊரு நைட்டிங்கேல்

சாமியைக் கும்பிட்ட தேவி... தேவியைக் கும்பிட்ட அர்ச்சகர்! - கோபால் தேவி

நம்ம ஊரு நைட்டிங்கேல்

Published:Updated:
கோபால் தேவி
பிரீமியம் ஸ்டோரி
கோபால் தேவி
"வீட்டுல, வெளியில.. ஏன் உடம்புல ஏதாவது பிரச்னை இருந்தாக்கூட நர்ஸ் யூனிஃபார்மை எடுத்து மாட்டினா அத்தனையும் மறந்து போயிடும். காஸ்ட்லியான பட்டுப்புடவை கட்டினாக்கூட கிடைக்காத உணர்வுங்க இது’’ - தான் பார்க்கும் வேலையின் மீதான மரியாதையையும் மகிழ்ச்சியையும் மனத்தின் ஆழத்திலிருந்து பகிர்ந்துகொள்கிறார் சிஸ்டர் கோபால் தேவி.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையின் இணைப்பு மருத்துவமனையாக சென்னை, புளியந்தோப்பில் செயல்படும் கே.பி.நகர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் நர்ஸாகப் பணிபுரிகிறார்.

சாமியைக் கும்பிட்ட தேவி...
தேவியைக் கும்பிட்ட அர்ச்சகர்! - கோபால் தேவி

‘`அம்மா, அப்பா ரெண்டு பேருமே அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை பார்த்தவங்க. அம்மா ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டன்ட், அப்பா குக். நாங்க நர்ஸிங் குவார்ட்டர்ஸ்ல குடியிருந்தோம். வீட்டுல என்னோட சேர்த்து மொத்தம் மூணு பொம்பளப் புள்ளைங்க. எங்களைப் பார்த்துக்க வீட்ல ஆள் இல்லாததால, வேலைக்குப் போறப்போ எங்க மூணு பேரையும் கையோடு மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அப்படிப் போறப்போ, நான் எப்பவும் நர்ஸுங்க கூடவேதான் இருப்பேன். அதனாலேயே அவங்க வேலை எனக்குப் பிடிச்சுப் போச்சு. பாரதி மகளிர் கல்லூரியில ஃபைனல் இயர் விலங்கியல் படிச்சுக்கிட்டிருந்ததை விட்டுட்டு நர்ஸிங் காலேஜ்ல போய் சேர்ந்துட்டேன். இப்போ முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்கிறேன்’’ என்று சிரிக்கிறார் கோபால் தேவி.

‘`மனசுவிட்டு ஒரு விஷயம் சொல்றேங்க... கொரோனாவுக்கு முன்னாடி, ‘சரி, இந்த வேலையை நாளைக்குப் பார்த்துக்கலாம்’னு தள்ளிவைக்கிற மனப்பான்மை லேசா இருந்துச்சு. ஆனா, இப்போ ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைச்சாலும் சோர்வே வர்றதில்லை.

உதாரணமா, கிளம்புற நேரத்துல மொத்தமா சானிட்டைசர் பாட்டில்கள் வந்து இறங்கினா, அதையெல்லாம் பத்திரப்படுத்திட்டு அதுக்கப்புறம்தான் வீட்டுக்குக் கிளம்புவேன். என்னை நம்பியிருக்கிற நோயாளிகளுக்கு நாளைக்கு சானிட்டைசர் தரணுமேங்கிற பொறுப்பும் பரிதவிப்பும்தான் இதுக்கு காரணம்’’ என்று உணர்ச்சிவசப்படும் கோபால் தேவிக்கு, கொரோனா காலத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படும் நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகள் இருக்கின்றன.

``என் உடம்புல இருக்கிற பிரச்னைகள் பத்தியெல்லாம் எனக்கு எந்த பயமும் இல்லைங்க. அதையெல்லாம் மறந்துட்டு, எத்தனையோ நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சை அளிச்சிருக்கேன். தவிர, பிள்ளைங்கல்லாம் வளர்ந்துட்டாங்க. இனி என்னோட வாழ்க்கையோட இலக்கு நோயாளிகளுக்கு சேவை செய்யுறது மட்டும்தான். இருந்தாலும், என் பேட்ச்ல பலருக்கும் கொரோனா பாசிட்டிவ் வந்தபோதும், அதுல ஒரு சிலர் இறந்தபோதும், அவங்க குடும்பங்களோட நிலைமையை நினைச்சு மனசு பதறிடுச்சு’’ என்று வருந்தும் கோபால் தேவிக்கு, வீட்டில் தனியறை ஒதுக்கி தந்துவிட்டார்களாம். ‘`என் கணவர்கிட்டகூட மாஸ்க் போட்டுக்கிட்டுதான் பேசுறேன்’’ என்று சிரிக்கிறார்.

“இன்னிக்கு மக்களோட பார்வை மாறியிருக்கு. சுகாதாரம், மருத்துவம் போன்ற துறைகள்ல இருக்கறவங்களோட முக்கியத்துவம் அவங்களுக்குப் புரிஞ்சிருக்கு. என் கதையையே எடுத்துங்களேன்...வீட்டுக்குப் பக்கத்துல சின்னதா சிவன் கோயில் ஒண்ணு இருக்கு. ஒருநாள் என் வீட்டுக்காரரோட அந்தக் கோயில் வாசல்ல நின்னு சாமி கும்பிட்டுட்டு இருந்தேன்.

சாமியைக் கும்பிட்ட தேவி...
தேவியைக் கும்பிட்ட அர்ச்சகர்! - கோபால் தேவி

வாசல்லே உட்கார்ந்திருந்த அர்ச்சகர், என்னை பார்த்ததும் எந்திரிச்சு கையெடுத்துக் கும்பிட்டார். ‘என்ன சாமி என்னைப்போய்...’னு பதறிட்டேன்.

அதற்கு அவர், ‘இன்னிக்கு நிலைமையில உங்களை மாதிரி மருத்துவ சேவையிலிருக்கிறவங்க தானே மக்களைக் காப்பாத்திட்டு வர்றீங்க. உங்க சேவைதாம்மா மக்களுக்குத் தேவை’ என்றார். கலங்கிப்போயிட்டேன்’’ - சிஸ்டர் கோபால் தேவியின் குரல் தழுதழுக்கிறது.