Published:Updated:

சுத்தம் செய்வது... கிருமி நீக்கம் செய்வது... எது கொரோனாவிலிருந்து காக்கும்? #FightCovid -19

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கிருமிகள் அதிகம் பரவும் இடங்கள் எவை அவற்றை எப்படிச் சுத்தம் செய்வது மற்றும் வீட்டை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விளக்கமளித்து சில பரிந்துரைகளையும் பகிர்ந்துகொண்டுள்ளன.

எவ்வளவுதான் கொரோனா வைரஸின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஏராளமான வழிமுறைகள் சொன்னாலும், அவற்றை அலட்சியப்படுத்தும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறதே தவிர, அதன் தீவிரத்தை உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. தற்போதுள்ள சூழ்நிலைகளில் கைகளை மட்டுமல்ல; தங்களின் உடைமைகள் மற்றும் இருப்பிடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால், COVID-19 வைரஸ் இருமல் மற்றும் தும்மலின்போது வெளிப்படும் நீர்த்துளிகள் வழியாக மட்டுமல்ல; அசுத்தமான மேற்பரப்புகளிலும் பல மணிநேரம் செயல்பட்டு அதன்மூலமாகவும் பரவும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் 'சுத்தம்' மட்டுமே நமக்குக் கைகொடுக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவது அவசியம்.

Difference between cleaning and disinfectant
Difference between cleaning and disinfectant

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கிருமிகள் அதிகம் பரவும் இடங்கள் எவை அவற்றை எப்படிச் சுத்தம் செய்வது மற்றும் வீட்டை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விளக்கமளித்து சில பரிந்துரைகளையும் பகிர்ந்துகொண்டுள்ளன. அவற்றைப் பார்க்கலாம்..

சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

Cleaning and Disinfectant
Cleaning and Disinfectant

ஒரு பொருளின் மேற்பரப்பில் கிருமிகள் மற்றும் பிற அசுத்தங்களை அகற்றுவது சுத்தம் செய்வது.

ரசாயனங்கள் பயன்படுத்தி கிருமிகளை வேரோடு அழிப்பது கிருமி நீக்கம். இது பெரும்பாலும் சுத்தம் செய்தபின் பின்பற்றவேண்டிய மிக முக்கியமான செயல். மேலும், இது நோய்த்தொற்று பரவும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுத்தம் செய்ய வேண்டிய மேற்பரப்புகள் யாவை?

Wash basin
Wash basin

நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஃபர்னிச்சர்ஸ், கதவுகள், அறைகள், ஸ்விட்ச்சுகள், குழாய்கள், வாஷ் பேசின் உள்ளிட்டவற்றைச் சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். சில பொருள்களை உபயோகிப்பதற்கு முன், கைகளில் கையுறை அணிந்துகொள்வது அவசியம். மேலும், சுத்தம் செய்வதற்கு முன் கையுறைகள் அணிவதும், சுத்தம் செய்தபின் கைகளை நன்கு கழுவுவதும் முக்கியம்.

வீட்டில் உடல் நலம் குன்றிய நபர் இருக்கும்போது நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள் எவை?

உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரின் அறை மற்றும் குளியலறையை அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாது. அடிக்கடி சுத்தம் செய்வதனால் மற்ற நபர்களுக்கும் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பிருக்கிறது. சுத்தம் செய்யும் வேளையில் முகக் கவசம் அணிவது அவசியம். சுத்தம் செய்தபின் கைகால்களை நன்கு கழுவவேண்டும். முடிந்தவரை அந்த நபர் அவருடைய அறையைவிட்டு வெளியே வராமல் இருப்பது சிறந்தது.

Taking care of the sick people
Taking care of the sick people

மேலும், வீட்டின் மற்ற ஆரோக்கியமான உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம். தனிப்பட்ட இடம் ஒதுக்க முடியாமல் இருக்கும் நிலையில், அவரை கவனித்துக்கொள்ளும் நபர், அவர் உபயோகித்த பொருள்களை அவ்வப்போது பாதுகாப்போடு சுத்தம் செய்து வைப்பது அவசியம்.

சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வது எப்படி?

Cleaning
Cleaning

எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வதற்குமுன் கையுறைகள் அணிய வேண்டும்.

கிருமி நீக்கம் செய்வதற்கு முன் சோப்பு அல்லது டிடெர்ஜென்ட் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி மேற்பரப்புகளைச் சுத்தம் செய்யவும். கிருமி நீக்கம் செய்யும் போது, குறைந்தது 70 சதவிகித ஆல்கஹால் கன்டென்ட் கொண்ட சொல்யூஷனைப் பயன்படுத்துங்கள்.

தரைவிரிப்புகள் போன்ற மென்மையான துணிவகைகளைச் சுத்தம் செய்யும்போது, முதலில் அவற்றின் மேற்பரப்பிலிருக்கும் துகள்களை அகற்றி, பின்னர் பொருத்தமான கிளீனர்களைப் பயன்படுத்தி கிருமிகளை அழிக்கவும்.

சலவைக்கு:

Washing
Washing

சலவை செய்வதற்கு முன், டிஸ்போஸபிள் (Disposable) கையுறைகளை அணிந்து சலவை செய்யவேண்டும். குறிப்பாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை அலசும்போது நிச்சயம் கையுறை இல்லாமல் சலவை செய்யக்கூடாது. அப்படி கையுறைகள் பயன்படுத்த முடியாத நிலையில், முகத்தைக் கைகளிலிருந்து விலக்கி வைத்துக்கொள்ளுங்கள். சலவை செய்து முடித்தபின், கைகளை நன்கு கழுவுவது முக்கியம்.

கை சுகாதாரம்:

கொரோனா மட்டுமல்ல, எந்த விதமான நோய்த்தொற்றிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். அப்படிச் சில விஷயங்களைச் செய்தபிறகும் செய்வதற்கு முன்பும் எப்போதெல்லாம் கைகளைச் சுத்தம் செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

Hand wash
Hand wash

இருமல், தும்மலுக்குப் பிறகும் மூக்கை சுத்தம் செய்தபின்பும் கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

படுக்கையறையை நன்கு சுத்தம் செய்யவேண்டும். குறிப்பாக பொது படுக்கையறை என்றால் நிச்சயமாகக் கிருமிநாசினிகள் கொண்டு இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும். சுத்தம் செய்தபிறகு கைகளை நன்கு கழுவவேண்டும்.

சமைக்கும்போதும், சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவவேண்டும்.

செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பியதும் கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

கழிவறை சென்றுவிட்டு வரும்போதெல்லாம் கைகளை நன்கு கழுவுவது அவசியம்.

கொரோனா அலர்ட்... வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! #StayInsideStaySafe

மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போல, தனிநபர் சுகாதாரம் மிகவும் முக்கியம். சோப் மற்றும் தண்ணீருடன் அல்லது ஆல்கஹால் கலந்த சானிடஸரினால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து நோய்த்தொற்றுகளிலிருந்து தற்காத்துக்கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு