Published:Updated:

`பிபிஇ கிட் வேதனை; எரிச்சலடையும் கோவிட் 19 நோயாளிகள்!’ - களநிலவரம் பகிரும் நாக்பூர் செவிலியர்

நாக்பூர் செவிலியர்
நாக்பூர் செவிலியர் ( ANI )

மகாராஷ்டிராவில் 15,000க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவர்களும் செவிலியர்களும் சுகாதாரப் பணியாளர்களும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் முன்னின்று போராடி வருகின்றனர். இந்தியாவிலும் சில மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். சில விரும்பத்தகாத சம்பவங்களும் இங்கு நடந்துள்ளன. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,000-த்தைக் கடந்துவிட்டது. இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகமாக கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 15,000-க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நாக்பூரைச் சேர்ந்த ராதிகா என்ற செவிலியர் அங்குள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒருமாதமாகப் பணியில் இருந்த ராதிகா நேற்று வீடு திரும்பியுள்ளார். இவர் கொரோனா வார்டில் பணியாற்றி வந்துள்ளார்.

`மகாராஷ்டிராவில் இறந்த தந்தை; சென்னையில் தவித்த பெண்!- 2,400 கி.மீ பயணம்; உதவிக்கரம் நீட்டிய கனிமொழி

ராதிகா வீடு திரும்புவதை அறிந்த அப்பகுதி மக்கள், சாலையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையாக நின்று அவரைக் கைத்தட்டி வரவேற்றனர். மலர்களைத் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். மக்களின் இந்தச் செயலில் மனம் மகிழ்ந்த ராதிகா அனைவருக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.

கொரோனா வார்டில் பணியாற்றியது மிகவும் கடினமானதாக இருந்தது என ராதிகா கூறியுள்ளார்.``பணி நேரம் முழுவதும் பிபிஇ எனும் பாதுகாப்பு உபகரணங்களைத் தொடர்ந்து அணிந்துகொண்டுதான் இருக்க வேண்டும். நாள் முழுவதும் அதைப் பயன்படுத்துவது என்பது மிகவும் வேதனையான ஒன்று.

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. பாதுகாப்பு உபகரணங்கள் மிகுந்த வலியைக் கொடுத்தன. கொரோனா நோயாளிகளோ, தங்களை தேவையில்லாமல் மருத்துவமனையில் தங்கவைத்துள்ளனர் என நினைக்கிறார்கள், எரிச்சலடைகிறார்கள். எங்களிடம் தேவையில்லாத விஷயங்களைக் கேட்கிறார்கள்” என வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு