Published:Updated:

`ஒரு டோஸ் ₹59,570; ட்ரம்ப் எடுத்துக்கொண்ட ஆன்டிபாடி காக்டெயில் இந்தியாவிலும்!' -யாருக்கு பலன் தரும்?

ட்ரம்ப்
ட்ரம்ப்

கடந்த 10-ம் தேதி முதல், இந்த மருந்தை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்பை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய `ஆன்டிபாடி காக்டெயில்’ மருந்து தற்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது. கடந்த 10-ம் தேதி முதல், இந்த மருந்தை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது. சில தினங்களுக்கு முன்னால், ஹரியானாவைச் சேர்ந்த 84 வயது மொஹபத் சிங் என்பவருக்கு, இந்த `ஆன்டிபாடி காக்டெயில்’ மருந்தைக் கொடுத்து கொரோனா வைரஸிடமிருந்து அவரை மீட்டு எடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், ட்ரம்பை குணப்படுத்திய மருந்தால் இந்தியாவில் குணமான முதல் நபர் மொஹபத் சிங் தான்.

Corona
Corona
AP Illustration/Peter Hamlin

`கேஸிர்விமாப்’, `இம்டெவிமாப்’ (Casirivimab and Imdevimab) என்ற இரண்டு மருந்துகளைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த `ஆன்டிபாடி காக்டெயில்’ மருந்தை, `ரோச் இந்தியா’ மருந்து நிறுவனம் நம் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதை விற்பனை செய்வது, சிப்லா மருந்து நிறுவனம். இந்த மருந்தின் விலை அதிகபட்சமாக ரூ.1,19,500 எனவும், ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.59,570 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட் வாங்கினால், இரண்டு நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது `ரோச் இந்தியா நிறுவனம்.’

இந்த மருந்தைப்பற்றித் தொற்றுநோய் மருத்துவர் ராமசுப்பிரமணியத்திடம் பேசினோம்.

``ஆன்டிபாடி காக்டெயில் பாதுகாப்பான மருந்துதான். கொரோனா வந்த 5 நாள்களுக்குள் அளித்துவிட வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், அதிக உடல்பருமன் கொண்டவர்கள், சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள், இதயத்தில் அல்லது நுரையீரலில் பிரச்னை, ரத்த அழுத்தம், கட்டுப்படாத நீரிழிவு என்று யாருக்கெல்லாம் கொரோனாவால் தீவிரமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதோ, அவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்துக் காப்பாற்றிவிடலாம்’’ என்கிறார்.

தொற்று நோய் நிபுணர் ராமசுப்பிரமணியன்
தொற்று நோய் நிபுணர் ராமசுப்பிரமணியன்
இந்தியாவில் உடனடி அனுமதி கேட்கும் ஃபைசர் : ''12 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி போடலாம்!''

விலை கூடுதலாக இருந்தாலும், கொரோனா வந்தால் தப்பிப்பிழைக்க இன்னொரு வழி கிடைத்திருக்கிறது. பொதுவாக மருந்துகளின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதனுடைய விலை குறையும். ஆன்டிபாடி காக்டெயில் மருந்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறதா, சாமான்யர்களின் உயிரையும் இந்த மருந்து காப்பாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு