Published:Updated:

``என் பணி அறிந்துதான் முதல்வர் என்னை நியமித்திருக்கிறார்!" - மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்
மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

மகப்பேறு மருத்துவரான சாந்தி ரவீந்திரநாத் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் அனுபவம் கொண்டவர். பல ஆண்டுகளாக சமூக ஆர்வலராகவும் அறியப்படுபவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

``சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தமிழக அரசால் சமூநீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகளில் சமூக நீதி முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இந்தக் குழு கண்காணிக்கும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பு அறிவித்திருந்தார்.

MK Stalin
MK Stalin

இந்தக் குழுவின் உறுப்பினர்கள் விவரம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.தனவேல், பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தக் குழுவில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்ற குரல் எழுந்தது. இதையடுத்து இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளருமான மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தை இந்தக் குழுவின் உறுப்பினராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவில் மாணவர் சமுதாயத்துக்கான சமூக நீதி, மகளிர் உரிமை மற்றும் பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளிப்பது, குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுள்ள மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தை சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமித்து தமிழ்நாடு முதல்வர் உத்தவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.

Tamil Nadu secretriat
Tamil Nadu secretriat
’ஊழல்பேய்’களின் சவால்... 
ஷேர் செய்வோம் - 
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காதுகளில் ஏறும் வரை!

மகப்பேறு மருத்துவரான சாந்தி ரவீந்திரநாத் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் அனுபவம் கொண்டவர். பல ஆண்டுகளாக சமூக ஆர்வலராகவும் அறியப்படுபவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள சங்கத்தின் செயலாளர், அகில இந்திய முற்போக்குப் பேரவையின் தேசியக் குழு உறுப்பினர், சமாதானம் மற்றும் முன்னேற்றத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தேசியச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம்:

``நாட்டிலேயே முதன்முறையாக இதுபோன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை எடுத்துக்காட்டாகக் கொண்டு, சில மாற்றங்களைச் செய்து செயல்பட முடியும். இது புதியது என்பதால் குழுவின் செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும். இந்தக் குழு என்னென்ன பணிகளைச் செய்யும் என்பதை வாய்மொழியாகத் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும், குழுவின் பணிகள் தொடர்பான விரிவான அரசாணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்.

Doctor Shanti Ravindranath
Doctor Shanti Ravindranath
Vikatan

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதில் கவனம் செலுத்துவோம். தற்போது செயல்பாட்டில் இருக்கும் சட்டம் மற்றும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றால், அதற்கு தீர்வு காணப்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கான தீர்வு தேவைப்படுவதால் இந்தக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அரசின் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதால் சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகளுக்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்காதா என்று கேட்டதற்கு, ``சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பதை, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கண்காணிக்கும் பணிதான் இது.

Education (Representational Image)
Education (Representational Image)

அதற்கும் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கும் சம்பந்தமில்லை. எப்போதும் போல் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன். இதற்கெல்லாம் முதல்வர் கோபித்துக்கொள்ள மாட்டார். முதல்வரை நேரில் சந்தித்தபோது, ``இவங்கதான் டிவில எல்லாம் பேசுவாங்களே... பேசுறதைப் பார்க்குறேனே" என்றார். என் பணி என்ன என்பதை அறிந்துதானே இதற்கு நியமித்திருப்பார். அதனால் சமூக ஆர்வலராக என் பணி எப்போதுமே தொடரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு