Published:Updated:

முதியோரை கவனித்துக் கொள்பவர்களின் கவனத்துக்கு..! மருத்துவரின் பரிந்துரைகள்

காலை, மாலை வேளைகளில் சூரிய ஒளி படும்படி ஈஸி சேரில் சில நிமிடங்கள் அமர்ந்திருக்கலாம். காம்பவுண்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

V.S.NATARAJAN

முதியவர்களும் குழந்தைகளும் எளிதில் கொரோனா பாதிப்புக்கு இலக்காகிறார்கள். இருவருமே மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள். முதுமையின் காரணமாக ஏற்கெனவே வீட்டுக்குள் முடங்கிப் போன வாழ்க்கையில், தனிமைப்படுத்துதல் என்பது அவர்களை இன்னும் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். லாக் டவுன் நாள்களில் முதியவர்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆலோசனைகளை வழங்குகிறார் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.

2
Elderly People

நோய் எதிர்ப்பு சக்தி

''முதியோர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் 60 வயதைத் தாண்டியவர்கள். இவர்கள் ஏற்கெனவே அவர்களின் வீட்டில் ஓரளவு தனிமைப்பட்டுத்தான் இருப்பார்கள். அவர்களை மேலும் தனிமைப்படுத்துவது கசப்பான விஷயம்தான் என்றாலும், இந்தச் சூழலில் வேறுவழி இல்லை. அவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நோய்த்தொற்று அவர்களை எளிதில் தாக்கலாம்.

3
Elderly People

சற்றே விலகி இருப்பது நல்லது!

பொதுவாக முதியவர்கள் பேரக்குழந்தைகளை மடியில் வைத்துக்கொஞ்சுவது, உணவு ஊட்டுவது, கட்டி அணைப்பது என்று இருப்பார்கள். இவையெல்லாம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருபவை என்றாலும் இது அதற்கெல்லாம் உகந்த நேரமல்ல. கொரோனா வைரஸ் பரவி வரும், இந்த நேரத்தில் அவர்களுக்குப் புரியும்விதமாக இந்த நோய்ப் பரவல் பற்றி எடுத்துக்கூறி மற்றவர்களிடமிருந்து சற்று விலகி இருக்கச்செய்வதுதான் எல்லோருக்கும் பாதுகாப்பானது.

4
Elderly People

வீட்டுப் பணியாளர்களுக்கு அறிவுறுத்துங்கள்!

முதியோர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இல்லங்களில், அவர்கள் கூடுதல் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். முதியோர் உள்ள வீடுகளில் வீட்டுப்பணி செய்வதற்காக வரும் பணியாளர்களைக் கைகளைச் சுத்தமாகக் கழுவவோ அல்லது சானிடைஸர் பயன்படுத்தவோ அறிவுறுத்தவேண்டும். அவர்களை முகக்கவசம் அணிந்து கொள்ளச் செய்து, அவர்களுக்கு மருந்து எடுத்துக் கொடுப்பது உணவு அளிப்பது, கழிப்பறைக்கு அழைத்துச் செல்வது போன்ற காரியங்களில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும்.

5
Elderly People

சூழ்நிலை இப்போது அப்படி இல்லை!

தொற்றுநோயின் அச்சுறுத்தல் இல்லாவிட்டால், அவர்கள் தனிமைப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கம்போல் அவர்களுக்கு உண்டான வேலைகளைச் செய்யலாம். காய்கறி வாங்க மார்க்கெட் செல்வது, ரேஷன் கடைக்குச் செல்வது, வாக்கிங் போவது, என அவர்களுக்குரிய வேலைகளை, அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்து கொள்ளலாம். ஆனால் இப்போது சூழ்நிலை அப்படி இல்லை. இதை அவர்களுக்குப் பக்குவமாகப் புரியவைக்க வேண்டும்.

6
Elderly People

இருமும்போது கவனம்தேவை

இருமும்போதும் தும்மும்போதும் மிகவும் கவனமாக வாயில் துணி வைத்து மூடிக்கொள்ளச் சொல்ல வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவ வலியுறுத்த வேண்டும்.

7
Elderly People

உப்பு நீரால் வாய் கொப்பளியுங்கள்!

ஒவ்வொரு முறை உணவுக்கு முன்பாகவும் உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கச் சொல்லலாம்.

8
Sun light

காலை, மாலை சூரிய ஒளி தேவை!

வயதானவர்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்குமென்பதால் காலை, மாலை வேளைகளில் சூரிய ஒளி படும்படி ஈஸி சேரில் சில நிமிடங்கள் அமர்ந்திருக்கலாம். காம்பவுண்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யலாம்.

9
Food

சூடான உணவே சுகமானது!

சூடான ஆகாரங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சூப், ரசம் போன்றவற்றை அதிகமாக அருந்தலாம்.

10
Video call

வீடியோ கால் இருக்க கவலை ஏன்?வீடியோ கால் இருக்க கவலை ஏன்?

பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் என்று பழைய நண்பர்களைத் தேடிப்போய்ச் சந்திப்பது அல்லது அவர்களை வீட்டுக்கு வரச்சொல்வதையெல்லாம் தவிர்த்திடுங்கள். போனில் வீடியோ கால் போட்டுப் பேசி மகிழ்வது மட்டுமே இப்போது சிறந்தது.

11
Music

இசை நயம் மிக்கப் பாடல் கேளுங்கள்!

மனதுக்குப் பிடித்த இசை கேட்பது, பிளாக் அண்டு வொயிட் திரைப்படங்கள் பார்ப்பது, நூல்கள் வாசிப்பது, போன்றவற்றில் மனதைச் செலுத்தி தனிமைச் சூழலை எளிதாக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு