Published:Updated:

முகத்தைப் பார்த்துப் பேசுகிறதா உங்கள் குழந்தை? ஆட்டிசம் அலெர்ட்-1

ஆட்டிசம்

இயல்பாகக் குழந்தைகள் நாம் பேசும்போது முகத்தைக் கூர்ந்து கவனிக்கும். குறிப்பாக நம் கண்களை உற்று நோக்கும் (eye contact). நம் பேச்சில் உள்ளக் கருத்துடன் நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும். இந்த பண்பு நமக்கு மிகவும் அவசியம்.

முகத்தைப் பார்த்துப் பேசுகிறதா உங்கள் குழந்தை? ஆட்டிசம் அலெர்ட்-1

இயல்பாகக் குழந்தைகள் நாம் பேசும்போது முகத்தைக் கூர்ந்து கவனிக்கும். குறிப்பாக நம் கண்களை உற்று நோக்கும் (eye contact). நம் பேச்சில் உள்ளக் கருத்துடன் நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும். இந்த பண்பு நமக்கு மிகவும் அவசியம்.

Published:Updated:
ஆட்டிசம்

உயிரி தொழில்நுட்பத்துறையில் பேராசிரியரான சுதாகர் சிவசுப்பிரமணியம், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அத்துடன் பல்கலைக்கழக தொல்லியல் மையத்தின் இயக்குநராகவும் செயல்படுகிறார். மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு மருத்துவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். ஆட்டிசம் (autism) குறித்து 2003 -ல் ஆராயத் தொடங்கினார். குழந்தைகள்மீது கொண்ட அன்பால் இந்தக் கட்டுரையை எழுதுகிறார்...

பிறந்த குழந்தை பொதுவாக சுமார் 8 மாதங்களிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாகப் பேசும். பிறகு ஒரு வயதில் அடம்பிடித்து நினைத்ததைச் சாதிக்கும்.

ஆனால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மூன்று வயதானாலும் அம்மா என்றுகூடச் சொல்ல மாட்டார்கள். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் தனியாகத்தான் விளையாடுவார்கள். யாருடனும் சேர்ந்து விளையாட மாட்டார்கள்!

ஆட்டிசம் என்பது குழந்தைகளை பாதிக்கும் மூளை வளர்ச்சிக் குறைபாடாகும். இந்தக் குழந்தைகள், எல்லோரையும் போலவே பிறக்கின்றனர், வளர்கின்றனர். ஆனால் இவர்கள் பேச மாட்டார்கள்.

ஆட்டிசம் தவிர்க்க
ஆட்டிசம் தவிர்க்க

இயல்பாக, நாம் பேசும் போது குழந்தைகள் நமது முகத்தைக் கூர்ந்து கவனிப்பார்கள். குறிப்பாக நம் கண்களை உற்றுநோக்குவார்கள் (eye contact). நம் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள். இந்தப் பண்பு நமக்கு மிகவும் அவசியம். கண்களைப் பார்த்துப் பேசாவிட்டால் வார்த்தைகளுக்கும் அவற்றில் புதைந்துள்ள உணர்வுகளையும் கற்றுத் தேறமுடியாது !

இதுதான் ஆட்டிச குழந்தைகளின் குறைபாடு. இதனால் இந்தக் குழந்தைகளால் தன் தாய்மொழியைக்கூட பேச மற்றும் புரிந்து கொள்ள முடியாது ! அதனால் இந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதுமில்லை. தனக்கெ ஓர் உலகை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யாருக்கும் தொல்லை கொடுக்காமல் தனியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆட்டிசம் என்ற குறைபாடுள்ளதா எனக் கண்டறிய இந்தத் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களால் மட்டுமே முடியும் ! காரணம் குழந்தைகள் பயத்தின் காரணமாக, பழக்கமில்லாதவர்களை முகம் பார்த்துப் பேச மாட்டார்கள். நன்கு பழகியவர்களாக இருந்தால் வெட்கத்தினால்கூட முகத்தைப் பார்க்க மாட்டார்கள்.

Autism child
Autism child
pixabay

இதனால்தான் இந்தத் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களை அணுகிக் கலந்தாலோசிப்பது அவசியமாகிறது. பெற்றோர்களாகிய நீங்கள் பேசும்போது குழந்தைகள் முகத்தைப் பார்க்கவில்லை என்றால் விழிப்போடு இருங்கள்.

குழந்தை தனியாக யாருக்கும் தொல்லையில்லாமல் விளையாடுகிறது என விட்டுவிடாதீர்கள்... பேச்சு, உடையணிதல், சாப்பிடும் முறை, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மற்றும் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து திறமைகளையும் பெற்றோர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். முகத்தைப் பார்த்துப் பேசத் தெரியாத குழந்தைகளால் மேற்குறிப்பிட்டவற்றை எல்லாம் கற்றுக் கொள்ள முடியாது.

இதனால் அந்தக் குழந்தைகள் மூன்று வயதானாலும் பேச மாட்டார்கள். நீங்கள் பேசுவது இந்தக் குழந்தைகளுக்குப் புரியாது; , அதனால் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். எதைச் செய்யக்கூடாது எனத் தெரியாது உடையணியத் தெரியாது. உடையணிய வேண்டும் எனவும் தெரியாது.. ஓரிடத்தில் உட்காராது. தன்விருப்பம் போல் நடந்து கொள்வார்கள். வயது ஐந்தானாலும் ஓடும் வண்டியில் இருந்து விழுந்தால் அடிபடும் எனத் தெரியாது. பெரும்பாலும் செய்வதையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். காரணமில்லாமல் அழுவார்கள் மற்றும் காரணமில்லாமல் சிரிப்பார்கள்.

குழந்தைகள் கார் பொம்மையை ஓட்டி விளையாடுவார்கள், துப்பாக்கி பொம்மை என்றால் சுட்டு விளையாடுவார்கள். ஆனால் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் அப்படி விளையாட மாட்டார்கள். தனக்குத் தோன்றியபடி புதுமையாக இந்த பொம்மைகளை வைத்து விளையாடுவார்கள். ஓர் உணவு பிடிக்கும் என்றால் அதையே திரும்பத் திரும்பச் சாப்பிட விரும்புவார்கள். இந்தக் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருக்கும்.

ஆட்டிசம்
ஆட்டிசம்

ஆட்டிசம் பாதித்த எல்லா குழந்தைகளும்ம் ஒரே மாதிரியான குறைபாடுகளுடன் இருக்க மாட்டார்கள் (autism spectrum). சில குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்டவற்றில் சில திறமைகள் இருக்கும்; சில இருக்காது. ஆனால் ஆட்டிச குழந்தைகள் அனைவருமே முகத்தைப் பார்த்துப் பேச மாட்டார்கள். அபூர்வமாக சில குழந்தைகள் முகத்தைத் தேவைக்கு அதிகமாக பார்ப்பார்கள் ! இதுவும் குறைபாடுதான்.

இதனால் பள்ளியில் சேர்க்க முடியாத சூழல் உருவாகும். அப்படியே சேர்த்தால் வகுப்பிற்கு இந்தக் குழந்தைகளால் இடையூறு ஏற்படும். அதனால் மொத்த வகுப்பும் பாதிக்கப்படும். அதனால் பெரும்பாலான பள்ளிகளில் இந்தக் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

அப்படியே அடம்பிடித்து இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தாலும், எதிர்பார்க்கும் பலன் ஏதும் கிடைத்துவிடாது. இந்தக் குழந்தைகள் பள்ளியில் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். பெற்றோர்களின் நிலை மிகவும் பரிதாபமாகிவிடும்.

படிப்பைவிட இந்தக் குழந்தைகளுக்கு வாழத் தேவையான அடிப்படை திறமைகள்தான் அவசியம் என உணரவேண்டும். உடையணிவது, காலைக் கடனை தானாகவே செய்து முடிப்பது, தானாக நன்றாக சோப்பு போட்டுக் குளிப்பது, எல்லோரையும் மாதிரி சாப்பிடுவது, சாப்பிட்ட தட்டை கழுவிவைப்பது, நாள் மற்றும் நேரம் பற்றிய அறிவைப் பெறுவது, பணம் பற்றிய அறிவு, மற்றும் ஓரிடத்தில் அமைதியாக உட்கார முடிவது ஆகியவற்றை வாழத் தேவையான அடிப்படை திறன்களில் முக்கியமானவை எனலாம். சொல்வதற்கு எளிது. பெற்றோராகப் பள்ளிப் படிப்பை விட அடிப்படை வாழ்க்கைத் திறன்தான் அவசியம் என உணர்வது மிகவும் கடினம்.

பயிற்சிகள்!
பயிற்சிகள்!

இதில் கொடுமை என்னவென்றால் இந்த நோயைக் கட்டுப்படுத்த மற்றும் குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை!

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் இந்தக் குழந்தைகளுக்குத் தேவையில்லாத மருந்துகளைக் கொடுத்துச் சம்பாதிக்கும் நிலையும் இங்குள்ளது.

சரி... அப்படி என்றால் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? பயிற்சிகள் மூலம் மட்டுமே இவர்களை முன்னேற்ற முடியும். ஆட்டிசம் வருவதற்கான காரணங்கள் என்ன? அந்தக் குழந்தைகளுக்கு எப்படிப் பயிற்சி அளிப்பது? ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாதனை படைக்க என்ன காரணம்?அது எப்படி சாத்தியமாகும்... என்பதை விரிவாக அடுத்த கட்டுரைகளில் காண்போம்.