நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே வேளையில், புறாக்களின் எச்சம் பரவிய காற்றை சுவாசித்ததால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மருத்துவரும் வனவிலங்குகள் ஆர்வலருமான மகேஷ்வரனிடம் இது குறித்துப் பேசினோம். ``சிட்டகோசிஸ் (Psittacosis) எனப்படும், மனிதர்களின் நுரையீரலை பாதிக்கும் நோய் பறவைகளின் எச்சத்தில் இருந்து பரவுகிறது. அதிக அளவிலான பறவைகளின் எச்சங்கள் வறண்ட பின் காற்றில் பரவும். அதை நாம் தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் தொற்று ஏற்படும். நுரையீரலில் வறட்சி ஏற்படத் தொடங்கி உயிரிழப்பு வரை இட்டுச் செல்லும். ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் இருக்கும்.
புறாக்கள் மட்டுமல்ல, அனைத்து பறவைகளின் எச்சத்தில் இருந்தும் மனிதர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். வீடுகளில் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்போர் மற்றும் வணிக நோக்கில் பண்ணைகளில் அதிக எண்ணிக்கையில் பறவைகளை வளர்ப்போர் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பறவைகளின் எச்சங்கள் காய்வதற்குள் அகற்ற வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்" என்றார்.