Published:Updated:

`அடுத்த வேரியன்ட் ஒமிக்ரானைவிட வீரியமாக இருக்கலாம்!' - எச்சரிக்கும் இங்கிலாந்து நிபுணர்

corona virus ( Pixabay )

``மரண அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ், வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வைரஸ் தொற்று தொடர்ந்து கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் இன்னும் நீண்ட தூரம் நாம் செல்ல வேண்டி உள்ளது."

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒமிக்ரானைவிட மோசமான புதிய கோவிட் வேரியன்ட் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியும், தொற்றுநோயியல் நிபுணருமான கிறிஸ் விட்டி எச்சரித்துள்ளார்.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``காய்ச்சல் போன்ற மரண அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ், வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வைரஸ் தொற்று தொடர்ந்து கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் இன்னும் நீண்ட தூரம் நாம் செல்ல வேண்டி உள்ளது. மேலும் வரவிருக்கும் புதிய திரிபு, ஒமிக்ரானைவிட மோசமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்" என தெரிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகம் முழுவதும் வைரஸ் இறுதி நிலையை அடைந்து விட்டதாகக் கருதி, பல நாடுகள் கோவிட் தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது தவறானது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய திரிபு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்தத் தொற்று ஏற்படுத்தும் பிரச்னைகள் ஒமிக்ரானை விட மோசமானதாக இருக்கும்.

Laborers queue up to register for COVID-19 test in New Delhi
Laborers queue up to register for COVID-19 test in New Delhi
AP Photo / Manish Swarup

எனவே அடுத்த திரிபு ஒமிக்ரானை போலவே வீரியமற்றதாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எப்போதும்போல கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மட்டுமே நம்மை நாம் காத்துக்கொள்ள ஒரே வழி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism