Published:Updated:

`எபோலாவை எதிர்த்த `ரெம்டெஸ்விர்' கொரோனாவை குணப்படுத்துமா..’ -என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ரெம்டெஸிவிர் எனும் மருந்து கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும் என்று பல தரப்பிலும் பேச ஆரம்பித்திருப்பதை அடுத்து, அந்த மருந்தைப் பற்றியும், அதன் பயன்பாடு குறித்தும் அறிந்துகொள்ள மருத்துவர்களிடம் பேசினோம்.

மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிக்ளோராகுயின் மருந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடியது என்று கடந்த சில நாள்களாகப் பேசப்பட்ட நிலையில், இப்போது இன்னொரு மருந்து கவனம் ஈர்த்திருக்கிறது.

 HYDROXY CHLOROQUINE
HYDROXY CHLOROQUINE

ரெம்டெஸிவிர் (Remdesivir) எனும் மருந்து கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும் என்று பல தரப்பிலும் பேச ஆரம்பித்திருப்பதை அடுத்து, அந்த மருந்தைப் பற்றியும், அதன் பயன்பாடு குறித்தும் அறிந்துகொள்ள மருத்துவர்களிடம் பேசினோம்.

பொது மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் பூபதி ஜானிடம் பேசியதிலிருந்து...

களமாடிய அதிகாரிகள்... காணாமல்போன கொரோனா!

``அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் நிபுணர் ஒருவர் கொரோனா சிகிச்சையில் ரெம்டெஸிவிர் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார். சீனாவில் இந்த மருந்து ஜனவரி மாதத்திலேயே பயன்பாட்டுக்கு வந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை இதயத்துடிப்பு விகிதம் சுவாச எண்ணிக்கை, ஆக்ஸிஜன் செறிவடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கின்றனர். இதில் மிதமான (Moderate) மற்றும் தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு ரெம்டெஸிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை.

பொது மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் பூபதி ஜான்
பொது மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் பூபதி ஜான்

எய்ட்ஸ் நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் ரிட்டோனாவிர், லோபினாவிர் ஆகிய மருந்துகளுடன் ரெம்டெஸிவிர் மருந்தும் சேர்த்து அளிக்கப்படுகிறது. வைரஸை எதிர்ப்பதில் மற்ற மருந்துகளைவிட இது சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. உடலில் வைரஸின் பெருக்கத்தைத் தடுப்பதே இம் மருந்தின் வேலை. வைரஸுக்கு எதிரான மற்ற மருந்துகளைப் போல இதுவும் ஜீரண மண்டல பாதிப்பை ஏற்படுத்தலாம்'' என்று கூறினார் மருத்துவர் பூபதி ஜான்

`இரண்டாவது இடம் டு ஒற்றை இலக்கம்!' -கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீளும் கோவை

தொற்று நோயியல் மருத்துவர் டாக்டர் சுரேஷ்குமாரிடம் பேசியதிலிருந்து...: ``ரெம்டெஸிவிரின் ஆற்றல் குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது பயன்படுத்தப்பட்ட மருந்து ரெம்டெஸிவர். சமீபத்திய ஆராய்ச்சி முடிவின்படி இம்மருந்தை எடுத்துக்கொள்பவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கும் நாள்கள் குறைவதாகத் தெரிகிறது. அமெரிக்க மருத்துவ நிபுணர் ஆண்டனி ஃபாசி, இம்மருந்தால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்
தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்

வைரஸ் உடலுக்குள் நுழைந்தவுடன், அது பெருகுவதைத் தடுக்கும். இம்மருந்தை நரம்பு (IV) வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். வாய்வழியாக எடுத்துக்கொள்ள இயலாது. கொரோனா தொற்றுள்ளவர்கள், இதை எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன.. இந்தியாவில் இம்மருந்து தயாரிக்கப்படவில்லை. விரைவிலேயே இந்தியாவிலும் அதன் தயாரிப்பு தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார் மருத்துவர் சுரேஷ் குமார்.

அடுத்த கட்டுரைக்கு