Published:Updated:

கோவிட்: ``முகக்கவசத்தை அகற்ற இது சரியான தருணமா?'' ~ நிபுணர்கள் சொல்வதென்ன?

Mask ( Pixabay )

இந்தியாவில் கோவிட் தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. ஆனால் அது ஒரு பருவகால நோயைப் போல குறிப்பிட்ட பகுதியில் அல்லது மக்களுக்கு நீடித்துக் கொண்டே இருக்கும் (Endemic).

கோவிட்: ``முகக்கவசத்தை அகற்ற இது சரியான தருணமா?'' ~ நிபுணர்கள் சொல்வதென்ன?

இந்தியாவில் கோவிட் தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. ஆனால் அது ஒரு பருவகால நோயைப் போல குறிப்பிட்ட பகுதியில் அல்லது மக்களுக்கு நீடித்துக் கொண்டே இருக்கும் (Endemic).

Published:Updated:
Mask ( Pixabay )

கோவிட் தொற்றின் பரவலின்போது அதிகரிக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தொற்றுப் பரவலின் வேகம் குறையும்போது தளர்த்தப்படுகின்றன. அத்தகைய கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் முகக்கவசம் அணிவது. திடீரென முகக்கவசம் கட்டாயம் என்றும், சில நேரங்களில் கட்டாயமில்லை என்றும் அவ்வப்போது அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

கோவிட்: ``முகக்கவசத்தை அகற்ற இது சரியான தருணமா?'' ~ நிபுணர்கள் சொல்வதென்ன?
pixabay

இந்நிலையில், ``இந்தியாவில் கோவிட் தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. ஆனால் அது ஒரு பருவகால நோயைப் போல குறிப்பிட்ட பகுதியில் அல்லது மக்களுக்கு நீடித்துக்கொண்டே இருக்கும் (Endemic). எனவே முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற ஆணையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இது சரியான நேரமல்ல’’ என பொதுச் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு தொற்றைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர் அணுகுமுறையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் கூறுகையில், ``இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதமும் 0.1 - க்கு நெருக்கமாகவும் அல்லது பெரும்பாலான பகுதிகளில் அதற்கும் குறைவாக உள்ளது.

vaccine
vaccine
pixabay

மக்கள் அதிகளவு தடுப்பூசி செலுத்திக் கொண்டது, முன்பே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது அல்லது இவை இரண்டுமே எதிர்ப்புசக்தியை அதிகரித்திருக்கலாம். இது தொற்று எண்ணிக்கை குறைவதற்கான காரணமாகக் கருதப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.