Published:Updated:

Fact Check: `கொரோனா பருவகால நோய்தான்; தனிமைப்படுத்தல் தேவையில்லை!' - பரவும் வாட்ஸ்அப்; உண்மை என்ன?

Factcheck
Factcheck

``கொரோனா வைரஸ் ஒரு பருவகால நோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதனால், கோவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது

வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டாக்டர்கள் குழு ஒன்று, `கொரோனா வைரஸ் ஒரு பருவகால நோய் தான் அதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை' என்று சொல்கிறது. கடந்த ஆண்டு வெளியான இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

corona virus
corona virus
Pixabay

அந்த வீடியோவில், ``கொரோனா வைரஸ் ஒரு பருவகால நோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதனால், கோவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தேவையில்லை. கொரோனா வைரஸ் ஒரு நோயாளியிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது.

உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய தவற்றை ஒப்புக்கொண்டுள்ளது. பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வரக்கூடிய இருமல், சளி, தொண்டை வலி போன்றவற்றைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. கோவிட் நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதையோ, பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையோ இனி பின்பற்ற வேண்டியதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது" என்று சில மருத்துவர்கள் பேசுகிறார்கள்.

இந்தக் காணொளி கடந்த ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் சொல்லப்படும் செய்திகள் உண்மையில்லை, இதை நம்பவேண்டாம் என்று Press Information Bureau (PIB) தெரிவித்துள்ளது. மேலும், உலக சுகாதார நிறுவனம் இப்படிப்பட்ட அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும் உறுதி செய்துள்ளது. அதுகுறித்த அவர்களுடைய ட்விட்டர் பதிவில், ``கோவிட்-19 பரவக்கூடிய ஆபத்தான தொற்றுநோய்தான். அதனால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு