Published:Updated:

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கண்டறியப்பட்ட டெல்டா ப்ளஸ் வகைத் தொற்று!

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தற்போது குறைந்துவிட்டது. ஆனால், உருமாறிய வகை கொரோனாவான டெல்டா ப்ளஸ் வகை தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி பகுதியில் 22 பேருக்கு டெல்டா ப்ளஸ் உருமாறிய வகை கொரோனா தொற்று பரவியிருக்கிறது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். ஆனாலும், மகாராஷ்டிரா முழுவதும் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று தொடர்பான முழுமையான தரவு தங்களிடம் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், டெல்டா ப்ளஸ் தொடர்பாக விழிப்புடன் இருக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 மாதிரிகள் எடுக்கவும் உத்தரவிட்டார். மக்கள் முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

corona virus
corona virus
Pixabay
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்?

மும்பையில் 78 வயது மூதாட்டி ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் உருமாறிய வகை கொரோனா தொற்று பரவியிருக்கிறது. மும்பையின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் அந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் டெல்டா ப்ளஸ் உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இணை நோய்கள் எதுவும் இல்லாத அவர், தற்போது டெல்டா ப்ளஸ் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் மங்களா தெரிவித்தார்.

மும்பை மட்டுமல்லாது அருகில் உள்ள தானேயிலும் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 80 நாடுகளில் காணப்படும் டெல்டா ப்ளஸ் உருமாறிய கொரோனா தொற்று, இந்தியாவில் ஏற்கெனவே மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

A health worker takes a nasal swab sample
A health worker takes a nasal swab sample
AP Photo/Aijaz Rahi
Covid Questions: கோவிட் சிகிச்சையில் ஆன்டிபாடி காக்டெயில் மருந்து யாருக்கு பரிந்துரைக்கப்படுகிறது?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ``இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை, வைரஸ் ஏற்கெனவே மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், சோதனைகளை அதிகரிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தில் போபால், சிவ்புரி மாவட்டங்களிலும் டெல்டா ப்ளஸ் உருமாறிய தொற்று காணப்படுகிறது. கொரோனாவின் உருமாறிய வகையான டெல்டா ப்ளஸ், இந்தியா உட்பட 10 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு