Published:Updated:

ஸ்டாலின் முதல் விஜய் வரை... கொரோனாவுக்கு எதிரான வியூகங்கள்!

ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் - விஜய்

தமிழகத்தின் தலைமைச் செயலகம் தொடங்கி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை கொரோனாவுக்கு பேதம் இல்லை. ஸ்டாலின் முதல் விஜய் வரை... கொரோனாவை விரட்டியடிப்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆயுதத்துடன் சுழலவும் தவறுவதில்லை

'சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்', 'மாஸ்க் போடுங்கள்' என்றெல்லாம் பொது மக்களுக்குச் சொல்லும் வி.ஐ.பி-க்களில் பலரும் களத்தில் சுழலத் தவறுவதில்லை. அதேபோல, மிரட்டும் கொரோனவைத் தங்களை அண்டவிடாமல் தினம் தினம் விரட்டியடிப்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆயுதத்துடன் சுழலவும் தவறுவதில்லை.

மகனுடன் உடற்பயிற்சி... உடலினை உறுதிசெய்யும் ஸ்டாலின்!

ஊரடங்கு காலம் முழுவதும் ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை இல்லத்தில் இருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். ஆனால், ஜெ.அன்பழகன் மறைவு ஸ்டாலின் குடும்பத்தினரை அதிர்ச்சி யடைய வைத்துவிட்டது. 'படிதாண்டக் கூடாது' என்பது கிச்சன் கேபினெட்டின் கண்டிப்பான உத்தரவாம். தவிர்க்க முடியாத சிறு வேலைகளுக்கு வெளியே போகத் தயாரானால்கூட மகன் உதயநிதி குறுக்கே வந்துவிடுகிறாராம்.

வழக்கமாக தினமும் அதிகாலை 5:30 மணிக்கு எழும் ஸ்டாலின் 6 மணிக்கு அடையாறில் பிரபல ஹோட்டலுக்குச் சென்று ஃபில்டர் காபி அருந்துவார். அதன் பிறகு ஐ.ஐ.டி-யில் நடைப் பயிற்சி. இப்போது இந்த இரண்டுமே மிஸ்ஸிங். வீட்டில் என்னதான் காபியைச் சுவையாக போட்டுத் தந்தாலும் ''என்னத்த காபியோ... அங்கே மாதிரி இல்லை!" என்று கிச்சன் தலைவியைக் கலாய்ப்பதில் தொடங்குகிறதாம் ஸ்டாலினின் அன்றைய தினம். பிறகு வீட்டிலேயே இருக்கும் ஜிம்மில் உதயநிதியுடன் சேர்ந்தே உடற்பயிற்சி செய்கிறார். ட்ரெட் மில்லில் அரை மணி நேரம் ஓட்டம். இப்போது உதயநிதி அட்வைஸில் தம்புல்ஸும் எடுக்கத் தொடங்கியிருக்கிறாராம். அதன் பிறகு மேலும் அரை மணி நேரம் யோகா, மூச்சுப்பயிற்சி.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் கபசுரக் குடிநீர் குடிக்கிறார். 'ஆர்சனிகம் ஆல்பம்' ஆயுர்வேத மருந்தை இரண்டு கோர்ஸ் முடித்திருக்கிறாராம். உணவுகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. எப்போதும்போல காலை இட்லி, தோசை. மதியம் பெரும்பாலும் கொஞ்சமேனும் மட்டன் அல்லது மீன் எடுத்துக்கொள்கிறார். மதியம் ஒரு மணி நேரம் தூக்கம் உண்டு. மாலை மீண்டும் குளியல். பிறகே உறக்கம்.

'கொரோனா'வுக்கு எதிராக வகுக்கும் வியூகங்களும், ஏந்தும் ஆயுதங்களும்... > ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க > மிரட்டும் கொரோனா... விரட்டும் வி.ஐ.பி-க்கள்! https://bit.ly/37AWwwk

வரலாறு படிக்கும் டி.டி.வி!

புதுச்சேரி ஆரோவில் அருகேயுள்ள பண்ணை வீட்டிலிருக்கிறார் அ.ம.மு.க-வின் டி.டி.வி.தினகரன். வீட்டுக்குள் கட்சி ஆட்கள் உட்பட வெளியாட்கள் வர அனுமதி இல்லை. காய்கறி, கீரை உட்பட எந்தவொரு பொருளையும் வராண்டாவிலேயே வைத்து மஞ்சள் தண்ணீரில் அலசி, வெயிலில் அரை மணி நேரம் உலர்த்திய பிறகே வீட்டுக்குள் கொண்டுவருகிறார்களாம். வரலாற்றுப் புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறார். மகள் ஜெயஹரிணியுடன் அதிக நேரம் செலவழிக்கிறார்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

வீட்டுக்குள் முடங்கிய ரஜினி!

லாக்டெளனின் ஆரம்ப கட்டத்தில் சகஜமாக இருந்தார் ரஜினி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என நெருங்கிய நண்பர்களை போயஸ் கார்டனுக்கு வரவைத்துச் சந்தித்தார். நோய்த் தொற்று தீவிரமானதும், வீட்டைவிட்டு வெளியேவருவது, வீட்டுக்குள் மற்றவர்களை அனுமதிப்பது என இரண்டையுமே முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார் ரஜினி. ஏற்கெனவே உடலில் அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் மிகவும் கவனமாக இருக்கும்படி ரஜினியை டாக்டர்கள் அறிவுறுத்தியிருக் கிறார்கள். 'அண்ணாத்தே' தயாரிப்பாளர்களான சன் டி.வி தரப்பிடமும் ஜனவரிக்கு மேல்தான் ஷூட்டிங் வர முடியும் என்று சொல்லிவிட்டாராம் ரஜினி.

மிரட்டும் கொரோனா... விரட்டும் வி.ஐ.பி-க்கள்!
மிரட்டும் கொரோனா... விரட்டும் வி.ஐ.பி-க்கள்!

'தள்ளிப்போன' மாஸ்டர்!

நடிகர் விஜய் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள காணத்தூர் வீட்டில் இருக்கிறார். மகன் ஜேசன் சஞ்சயும் கனடாவி லிருந்து சென்னை வந்துவிட்டார் என்கிறார்கள். வீட்டுக்குள் வெளியாட்கள் நுழையத் தடை. 'மாஸ்டர்' படத்தின் தயாரிப் பாளரும் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவை மட்டுமே லாக்டெளன் நேரத்தில் சந்தித்திருக்கிறார் விஜய். தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட 'மாஸ்டர்' ரிலீஸ் பொங்கலுக்குத் தள்ளிப் போயிருக்கிறாதாம்!

இவர்களுடன்...

மூலிகை சூப்... மூலிகைக் குளியல் - அசத்தும் எடப்பாடி | "கனிமொழி அக்கா ரொம்பவே ஆக்டிவ்!" | பாக்கெட்டில் சானிடைஸர்...

தலைமைச் செயலாளர் சண்முகம்... | வைகோ... காலை எழுந்ததும் இஞ்சிச் சாறு | பண்ணை வீட்டில் ப.சிதம்பரம் | ஷூ, பெல்ட், தொப்பிக்கும் சானிடைஸர்... சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்... | ஹோட்டல் அறையில் முடங்கிய கமல் | 'எஸ்கேப்' நயன்தாரா | 'தலை' காட்டாத தல!

இதோ... முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி நடிகர்கள் வரை தமிழகத்தின் வி.ஐ.பி-க்களில் பலரும் 'கொரோனா'வுக்கு எதிராக வகுக்கும் வியூகங்களும், ஏந்தும் ஆயுதங்களும்... > ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க > மிரட்டும் கொரோனா... விரட்டும் வி.ஐ.பி-க்கள்! https://bit.ly/37AWwwk

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு