Published:Updated:

அப்பா மாதிரியே கண்ணு; அம்மா மாதிரியே மூக்கு... மரபணு மேஜிக்!

மரபணு  மேஜிக்
பிரீமியம் ஸ்டோரி
மரபணு மேஜிக்

#Health

அப்பா மாதிரியே கண்ணு; அம்மா மாதிரியே மூக்கு... மரபணு மேஜிக்!

#Health

Published:Updated:
மரபணு  மேஜிக்
பிரீமியம் ஸ்டோரி
மரபணு மேஜிக்

‘அம்மா மாதிரியே கண்ணு; அப்பா மாதிரியே சுருட்டை முடி’ என்று நம் குழந்தைகளைப் பற்றி அடுத்தவர்கள் சொல்கிறபோது, சந்தோஷமாக இருக்குமில்லையா? மரபணுக்கள் செய்கிற அந்த மாயாஜாலங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்கிறார் பச்சிளம் குழந்தைகள்நலத் துறையின் பேராசிரியரும் மரபணு மற்றும் வளர்சிதை மாற்றப் பிரிவின் மூத்த ஆலோசகருமான டாக்டர் உமா மகேஸ்வரி.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

உலகத்தின் மிகப்பெரிய அதிசயம்!

``பெண்ணின் கருமுட்டையும் ஆணின் விந்தணுவும் ஒண்ணு சேர்ந்துதான் ஒரு குழந்தைக்கான முதல் செல் உருவாகுது.

அந்த முதல் செல்லிலேயே அந்தக் குழந்தையோட கண் கருவிழியின் நிறம், முடியின் தன்மை, சரும நிறம்னு எல்லாமே தீர்மானிக்கப் பட்டுடும். இதை நாங்க ‘ஜெனிட்டிக் மேக்கப்’னு சொல்வோம்.

இந்த முதல் செல்தான் ரெண்டாகி, நான்காகி, பன்மடங்காகி, இதயம், மூளை, கைகால், நகங்கள்னு குழந் தைக்கு எந்தெந்த உறுப்பு எங்கெங்கு இருக்கணுமோ அங்கு உருவாகி வளரும். உலகத்தோட மிகப்பெரிய அதிசயம் இது. குழந்தைக்கு பெற்றோர்கிட்ட இருந்து மிகச்சிறந்த `ஜெனிட்டிக் மேக்கப்’ கிடைச்சாலும் அந்தக் குழந்தையின் இயல்பை அது வளர்கிற சூழ்நிலையும் சேர்ந்தே தீர்மானிக்கும். இதை நாங்க மல்ட்டி ஃபேக்டோரியல்னு சொல் வோம்.

முதல் 22 ஜோடி!

அம்மாவிடமிருந்து 23, அப்பா விடமிருந்து 23-னு மனிதர்களைப் பொறுத்தவரை 46 குரோமோ சோம்கள் இருக்கும். கருவோட முதல் செல் உருவாகுறப்போ இந்த 46-ம் 23 ஜோடியாகிடும்.

இதுல முதல் 22 ஜோடிதான் குழந்தைகளோட உருவம், இயல்பு, மேனரிசம் போன்றவற்றைத் தீர்மானிக்கும். ஆனா, இவற்றுல எந்த ஜோடி உருவத்தைத் தீர்மானிக்கும், எந்த ஜோடி இயல் பைத் தீர்மானிக்கும்னு சொல்ல முடியாது. 23-வது ஜோடி பாலினத் தைத் தீர்மானிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பா மாதிரியே கண்ணு; அம்மா மாதிரியே மூக்கு... மரபணு  மேஜிக்!
brightstars

சைலன்ட் மரபணுக்கள்!

இந்த குரோமோசோம்களுக்குள்ள ஆயிரக்கணக்குல மரபணுக்கள் இருக்கும். இவை கருவாகி, குழந்தையா பிறக்கிறப்போ அம்மா, அப்பா ரெண்டு பேர் சாயலும் இருக்கும். அதே நேரம், சில குழந்தை களோட முகத்துல அம்மாவோட சாயல் அதிகமா இருக்கும். அதுக்கு காரணம், முகச் சாயலுக்கான அப்பாவோட மரபணுக்கள் சைலன்ட்டா இருக்குன்னு அர்த்தம். அப்பாவோட மேனரிசம் அதிகமா இருக்குன்னா, இந்த விஷயத்துல அம்மாவோட மரபணு சைலன்ட்டா இருக்குன்னு அர்த்தம்.

‘அந்தத் தாடை மட்டும் தாய் மாமாவை உரிச்சு வெச்சிருக்கு’ன்னு சொல்றதைக் கேட்டிருக்கீங்களா? அம்மாவோட பரம்பரையில இருக்கிற அந்தத் தாடை, அம்மா வோட உடம்புல சைலன்ட்டா இருந்துட்டு அடுத்த தலைமுறையான குழந்தைகிட்ட வெளிப்படுறதுதான் காரணம்.

சில குடும்பங்கள்ல இருக்கிற உடல்நலக் கோளாறுகள் பெற்றோரின் உடலில் மறைஞ்சிருந்து பிள்ளைகளுக்கு வந்துடும். இதை ‘கேரியர் ஸ்டேட்டஸ்’னு சொல்வோம். சொந்தத்துக்குள்ள திருமணம் செய்யுறப்போ இந்தப் பிரச்னை வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்.

இரண்டு புத்தகங்கள்... 46 அத்தியாயங்கள்!

தாய்வழி தாத்தா - பாட்டி, தந்தைவழி தாத்தா - பாட்டி குணங்கள் ஒரு குழந்தைகிட்ட வர்றதும் கிட்டத்தட்ட இப்படித்தான்.

அம்மா ஒரு புத்தகம், அப்பா ஒரு புத்தகம்னு எடுத்துக்கிட்டா அதுல மொத்தம் 46 அத்தியாயங்கள் இருக்கும். அந்த 46 அத்தி யாயங்களும் அப்படியே குழந்தைகிட்ட வந்துடாது. அதுல சில பக்கங்கள் வரும்; சில பக்கங்கள் வராது.

காணாமல் போகும் பக்கங்களும் எழுத்துப் பிழைகளும்!

குரோமோசோம்களுக்குள்ள ஆயிரக் கணக்கான மரபணுக்கள் இருக்குங்கிறதால, குரோமோசோம்கள்ல சின்ன பகுதி கூட காணாம போகக் கூடாது. ஒருவேளை அதுல சில பகுதி காணாமல் போனா, அதை நாங்க `மைக்ரோ டெலீஷன்’னு சொல்வோம். புரிகிற மாதிரி சொல்லணும்னா, 46 அத்தியாயங்களும் இருக்கும். ஆனா, அதுல சில பக்கங்கள் காணாமல் போயிருக்கும்.

இதுல மரபணுக் குறைபாடுகள், அந்தப் புத்தகத்திலிருக்கிற எழுத்துப் பிழைகள் போன்றவை. ‘முதுகெலும்பு தசைச் சிதைவு’ மாதிரி அரிதான பிரச்னைகள் வர்றதுக்கு மேலே சொன்ன பிரச்னைகள்தான் காரணம்’’ என்கிறார் டாக்டர் உமா மகேஸ்வரி.

****

உங்களுடைய ‘ஹாஃப் சிப்லிங்’ சாயல்கூட உங்கள் குழந்தைக்கு வரலாம்!

பெற்றோர்களின் பெற்றோர்களிட மிருந்தும், உடன்பிறந்தவர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு 25 சதவிகித மரபணுக்கள் வருவதைப்போலவே, ‘ஹாஃப் சிப்லிங்’கிடமிருந்தும் இதே அளவு மரபணுக்கள் வருகின்றன.

யாரிந்த ஹாஃப் சிப்லிங்?

குழந்தை பிறந்த பிறகு, ஒரு தம்பதி விவாகரத்து செய்கிறார்கள். பிறகு, இருவரும் மறுமணம் செய்து மறுபடியும் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை யும் மறுமணத்தில் பிறந்த குழந்தையும் உறவின்படி ‘ஹாஃப் சிப்லிங். இந்த ‘ஹாஃப் சிப்லிங்’ குகளுக்கு குழந்தைகள் பிறக்கிறபோது, அந்தக் குழந்தைகள் அவர்கள் பார்த்தே யிராத தன்னுடைய அம்மா அல்லது அப்பாவின் ஹாஃப் சிப்லிங் சாயலிலும் பிறக்கலாம்.

அப்பா மாதிரியே கண்ணு; அம்மா மாதிரியே மூக்கு... மரபணு  மேஜிக்!

தாத்தாவின் தாத்தா சாயலும் வரலாம்!

பெற்றோரின் உடன்பிறந்தவர்களுடைய பிள்ளைகளிடமிருந்தும், பெற்றோரின் உடன்பிறவா சகோதர, சகோதரிகளிடமிருந்தும் 12.5 சதவிகித மரபணுக்கள் வரை குழந்தை களின் உடலில் இருக்கும் என்பதால், எங்கோ கிராமத்தில் வசிக்கிற அம்மாவின் உடன்பிறவா சகோதரனின் சாயலும் குழந்தைக்கு வரலாம்.

பெற்றோரின் உடன்பிறவா சகோதர, சகோதரிகளின் பிள்ளைகளிடமிருந்து 6.25 சதவிகிதம் மரபணுக்கள் வருவதால், குழந்தைகளிடம் அவர்கள் சாயல்கூட வெளிப் படலாம். தாத்தாவின் அப்பாவிடமிருந்து 3.13 சதவிகிதமும், தாத்தாவின் தாத்தாவிடமிருந்து 1.5.சதவிகித மரபணுக்களும் குழந்தைகளுக்கு வருவதால், நீங்கள் புகைப்படத்தில்கூட பார்த்திராத உங்கள் முன்னோர்களின் சாயல்கூட உங்கள் குழந்தையிடம் தென்படலாம்.

சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படம் பார்த்திருப்பீர்களே... ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த போதிதர்மரின் வாரிசைக் கண்டறிந்து, அந்த வாரிசின் டி.என்.ஏ-வைத் தூண்டிவிட்டு, போதிதர்மர் போலவே உருவெடுக்க வைப்பார்கள். இதனுடன் கொஞ்சம் நம்மையும் சேர்த்துக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுதான் நிஜம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism