Published:Updated:

`நாங்க மொபைல் ஆப் வைத்தே கொரோனாவைக் கண்டு பிடிப்போம்!' - ஜெர்மனி நிறுவனத்தின் புது முயற்சி

ஜெர்மன் நிறுவனம் 95% துல்லியத்துடன்கூடிய கொரோனா வைரஸ் கண் ஸ்கேன் சோதனை செயலியை உருவாக்கி இருக்கிறது. இதற்கு ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட கண்ணின் புகைப்படமே போதும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெர்மன் நிறுவனம் 95% துல்லியத்துடன்கூடிய கொரோனா வைரஸ் கண் ஸ்கேன் சோதனை செயலியை உருவாக்கி இருக்கிறது. இதற்கு ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட கண்ணின் புகைப்படமே போதும். இந்த ஆப் மூலம் செய்யப்படும் கண் ஸ்கேனைப் பயன்படுத்தி வைரஸை அடையாளம் காண மூன்று நிமிடங்களே ஆகும் என்று கூறுகின்றனர். செய்முறை இவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் இருக்கும் காரணத்தால், இது கோவிட் பரிசோதனை முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில் உள்ள மியூனிச் நகரத்தைச் சார்ந்த செமிக் ஆர்.எஃப் நிறுவனம் கொரோனா வைரஸை சோதிக்க மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் ஒரு புதிய வழியை அறிமுகப் படுத்தியுள்ளது. கண் ஸ்கேன் மூலம் செய்யப்படும் இந்தச் சோதனையில் கொரோனா தொற்றை அடையாளம் காண மூன்று நிமிடங்களே ஆகும்.

corona virus
corona virus
Pixabay

`பிங்க் கண்' எனப்படும் அறிகுறி அழற்சியின் மூலம் வைரஸை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தில் இந்த ஸ்கேன் செயல்படுகிறது. கொரோனா கண்களைப் பாதிப்பால் ஏற்படும் அறிகுறி இது. இதை அடிப்படையாகக் கொண்டே இந்த ஸ்கேனர் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 95 சதவிகித வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செமிக் ஆர்.எஃப் தனது ஸ்கேனிங் பயன்பாட்டை அமெரிக்காவில் உள்ள சக தொழில்நுட்ப நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இப்போது இதற்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் அமெரிக்காவில் இந்தச் சோதனைகளைத் தொடங்க முடியும் என்று இந்த நிறுவனம் நம்புவதாக நிர்வாக இயக்குனர் வொல்ப்காங் க்ரூபர் கூறியுள்ளார்.

``நாங்கள் 20 லட்சத்துக்கும் அதிகமான வெவ்வேறு இளஞ்சிவப்பு நிற நிழல்களிலிருந்து தனிமைப்படுத்தி கோவிட்டைக் கண்டறியும் இந்த ஆராய்ச்சியை உறுதி செய்தோம். இதன் மூலம் 70,000-க்கும் மேற்பட்ட நபர்களைச் சோதித்திருக்கிறோம்'' என்றும் க்ரூபர் கூறியுள்ளார்.

இந்த ஸ்கேன் மூலம் என்ன பயன்?

நோய்த்தொற்றை அடையாளம் காண இது ஓர் எளிய வழி. அதோடு, இந்தத் தொழில்நுட்பத்தை இன்னும் விரிவாகப் பல்வேறு விதங்களில் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்ற வெகுஜன வருகை அதிகமுள்ள நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களைச் சோதித்து அனுமதிக்க இது எளிதான வழி. இதனால் `நியூ நார்மல்' நிகழ்ச்சிகள் தங்குதடையின்றி நடத்த முடியும்.

corona
corona

நாம் மொபைல் ஆப் மூலமாக இரு கண்களின் படத்தையும் எடுத்து, மதிப்பீட்டுக்கு அனுப்பலாம். மதிப்பீட்டுக்குப் பின் (சில நொடிகளில்) கிடைக்கப் பெறும் முடிவை, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் ஸ்மார்ட்போனில் QR குறியீடாகச் சேமிக்க முடியும்.

இந்த ஆப் விற்பனை ஆரம்பத்தில் நிறுவனங்கள் மற்றும் வணிகப் பயனர்களையே இலக்காகக் கொண்டுள்ளது, மாதத்துக்கு 480 யூரோக்கள் (ரூ.43,500) கட்டணம். பின்னர் தனிநபர்களுக்கும் இதன் இன்னொரு மாடலை உருவாக்கி விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

- எஸ்.சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு