Published:Updated:

சென்னைவாசிகளுக்கு அதிகரிக்கும் சர்க்கரை அளவு... அதிரவைக்கும் காரணம்!

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் ( Pixabay )

கட்டுப்படுத்த இயலாத ரத்தச் சர்க்கரையின் அளவு, இதய நோய்களுக்கான வாய்ப்பை மூன்று மடங்கு அதிகரிக்கும்.

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தொற்றாநோய் என்றால், அது சர்க்கரை நோய்தான். கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்கள், ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் மனிதர்களிடையே பரவி, சிறிது காலத்துக்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால், வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் தொற்றா நோய்கள், எல்லா நேரத்திலும் மனிதர்கள்மீது தாக்குதலைத் தொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 7.3 கோடி பேர் சர்க்கரைநோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.

Carbohydrate rich foods
Carbohydrate rich foods
Freepik

சென்னையில் நடைபெற்ற ஓர் ஆய்வில், சென்னையில் வசிக்கும் சர்க்கரை நோயாளிகளின் ஒட்டுமொத்த சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

'இந்தியா டயாபடீஸ் கேர் இண்டெக்ஸ்' என்ற அமைப்பு, சென்னையிலுள்ள 1000 சர்க்கரை நோயாளிகளின் மூன்று மாத ரத்தச்சர்க்கரையின் அளவை (HbA1c level) ஆய்வு செய்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் சராசரி வயது 53. பங்கேற்றவர்களில் 47 சதவிகிதம் பேர் பெண்கள், 53 சதவிகிதம் பேர் ஆண்கள். ஆய்வின் முடிவில், உணவுக்குப் பிறகான ரத்தச் சர்க்கரை அளவின் சராசரி 251.51 mg/dL என்று அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு, உணவுக்குப் பிறகான ரத்தச்சர்க்கரை 200 mg/dL என்ற அளவோ அதற்கு சற்று அதிகமாகவோ இருக்கக்கூடும்.

Diabetes
Diabetes
Pixabay

(உணவுக்குப் பிறகான ரத்தச்சர்க்கரையின் அளவு, சாதாரண நபர்களுக்கு 140 mg/dL என்ற அளவுக்குக் குறைவாகவும், சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு 140 - 200 mg/dL என்ற அளவும் இருந்தால், அது இயல்பான அளவாகும்)

``சென்னை வாசிகள், கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளைகூட கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்கின்றனர். உணவுக்குப் பிறகு ரத்தச் சக்கரையின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். இது தவிர, சிறுநீரகம், கண்கள் எனப் பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

healthy life
healthy life
Pixabay

கட்டுப்படுத்த இயலாத ரத்தச் சர்க்கரையின் அளவு, இதய நோய்களுக்கான வாய்ப்பை மூன்று மடங்கு அதிகரிக்கும். உணவுக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கும், இதய ரத்தநாள நோய்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. HbA1c-யின் அளவை ஒரு சதவிகிதம் குறைத்தாலே, இதயச் செயலிழப்புக்கான வாய்ப்பை 16 சதவிகிதமும் மாரடைப்புக்கான வாய்ப்பை 14 சதவிகிதமும் குறைக்க முடியும்.

Lifestyle changes
Lifestyle changes
Pixabay
Vikatan

ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, சரியான சிகிச்சை ஆகிய மூன்றையும் பின்பற்றினால், இந்தப் பிரச்னைக்கு முழுவதுமாகத் தீர்வு காண முடியும்" என்கின்றனர் மருத்துவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு