Published:Updated:

`முதியோர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்; ஆனால்..!' - அரசின் புதிய வழிகாட்டல் கூறுவது என்ன?

Old age (Representational image) ( Pixabay )

`தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த குடிமக்கள், தங்களின் இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்பலாம்’ என்றும், மூத்த குடிமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சில தகவல்களையும் அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

`முதியோர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்; ஆனால்..!' - அரசின் புதிய வழிகாட்டல் கூறுவது என்ன?

`தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த குடிமக்கள், தங்களின் இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்பலாம்’ என்றும், மூத்த குடிமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சில தகவல்களையும் அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Published:Updated:
Old age (Representational image) ( Pixabay )

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் புதிய தொற்றாளர்களின் தினசரி எண்ணிக்கை சில லட்சம் என்றிருந்த நிலையில், படிப்படியாகப் பாதிப்பின் வேகம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகின்றன.

தடுப்பூசி
தடுப்பூசி

அந்த வகையில், `தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த குடிமக்கள், தங்களின் இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்பலாம்' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், மூத்த குடிமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சில தகவல்களையும் அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், ``முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட மூத்த குடிமக்கள், இணை நோய்கள் எதுவும் இல்லாத பட்சத்தில், வெளியிடங்களுக்குச் செல்லலாம். ஆனால், அதுபோன்ற நேரங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்றின் பரவல் குறைந்திருந்தாலும், எப்போதும்போல முறையான பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

Old age - Representational Image
Old age - Representational Image
Pixabay

தொடர்ந்து பேசியவர், ``கடந்த திங்கள்கிழமையில் நாடு முழுக்க 8.8 மில்லியனுக்கும் (88 லட்சம் நபர்களுக்கு) அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டு, வரலாற்று மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளோம். இதற்குப் பின்னால் கிராமப்புற மக்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது. இந்தச் சாதனை அளவில், நாடு முழுக்க 63 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் பரவல் வெகுவாகக் குறைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இதுவே சரியான தருணம்” என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism