Published:Updated:

`மண்ணின் மருத்துவத்தை மறத்தல் தகுமோ?' - முதல்வர் ஸ்டாலினுக்கு `கொரோனா’ கோரிக்கை!

சென்னையிலுள்ள சித்த மருத்துவ கோவிட்-19 மையம். ( வி.சதீஷ்குமார் )

``கொரோனா இப்போதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வைரஸ் உள்ளிட்ட நுண்ணியிரிகளால் பரவும் நோய்கள் பற்றி அறிந்து, அதற்கான மருந்துகளை சித்தமருத்துவம் வகுத்து வைத்துள்ளது".

`மண்ணின் மருத்துவத்தை மறத்தல் தகுமோ?' - முதல்வர் ஸ்டாலினுக்கு `கொரோனா’ கோரிக்கை!

``கொரோனா இப்போதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வைரஸ் உள்ளிட்ட நுண்ணியிரிகளால் பரவும் நோய்கள் பற்றி அறிந்து, அதற்கான மருந்துகளை சித்தமருத்துவம் வகுத்து வைத்துள்ளது".

Published:Updated:
சென்னையிலுள்ள சித்த மருத்துவ கோவிட்-19 மையம். ( வி.சதீஷ்குமார் )

டெங்கு வேகமாக பரவிய காலகட்டத்தில், நிலவேம்பு கஷாயம்... கொரோனா வேகமெடுத்தபோது, கபசுர குடிநீர்... போன்ற சித்த மருத்துவ மருந்துகள் மக்களிடையே வேகமெடுத்தன. அப்போதுதான், அரசாங்கத்தின் பார்வையும் இவற்றின் மீது திரும்பி, இந்த இரண்டையும் அரசாங்கமே கையில் எடுத்து, பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தது. ஆனால், இவை இரண்டும் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கே வழக்கத்தில் இருக்கும் சித்த மருந்துகள்தான். இத்தனைக்கும் தமிழக அரசே சித்த மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்துள்ளது.

குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சித்தமருத்துவப் பிரிவுகளையும் நடத்தி வருகிறது. ஆனாலும்கூட, சித்தமருத்துவத்தைவிட, அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறைக்குத்தான் தமிழக அரசும் அதிமுக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இத்தகையசூழலில், `கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளில் சித்த மருத்துவத்துக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்கிற கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

கி.வெங்கட்ராமன்
கி.வெங்கட்ராமன்

``கொரோனா இப்போதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வைரஸ் உள்ளிட்ட நுண்ணியிரிகளால் பரவும் நோய்கள் பற்றி அறிந்து, அதற்கான மருந்துகளை சித்தமருத்துவம் வகுத்து வைத்துள்ளது. இப்படி இன்னும் பற்பல கொடிய நோய்களுக்கும் மருந்துகளைக் கண்டறிந்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆங்கில மருத்துவம் உள்ளிட்ட பிற மருத்துவமுறைகள் இங்கே பரவாத காலகட்டத்திலிருந்தே நம் முன்னோர்களை வாழவைத்து, தலைமுறை தலைமுறையாக தழைக்க வைத்துக் கொண்டிருப்பதும் சித்த மருத்துவமே. இதன் பலன் கண்கூடு என்பதை மக்களின் பட்டறிவுகளும், அறிவியலாளர்களின் ஆய்வுகளும் உணர்த்துகின்றன'' என்று சொல்லும் தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளருமான கி.வெங்கட்ராமன், இது தொடர்பாக சில முக்கிய ஆலோசனைகளையும் தமிழக அரசை நோக்கி முன்வைக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சென்ற ஆண்டு பரவிய முதல் அலையின்போதே சித்தமருத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்தார்கள். தற்போதைய இரண்டாம் அலையும் சித்த மருத்துவம் மட்டுமல்லாது... இயற்கை மருத்துவம், ஓமியோபதி போன்ற மாற்றுமருத்துவ முறைகளின் முதன்மையான தேவையை வலியுறுத்தவே செய்கின்றன. தமிழ்நாடு அரசு ஓரளவு இதை உணர்ந்திருந்தாலும், இத்திசையில் அதன் செயல்பாடுகள் இன்னும் வேகம் பெறவேண்டியிருக்கிறது என்பதுதான் உண்மை. அலோபதி மருத்துவமுறை பற்றி மட்டுமே அனைவரும் பேசிக் கொண்டிருப்பதால், மாற்றுமுறை மருத்துவத்தின் மீது கவனம் திரும்புவதில்லை. ஆங்காங்கே தன்னார்வமாக சொந்த முயற்சியில் கொரோனா நோய்த் தடுப்பிலும், சிகிச்சையிலும் பணியாற்றி வரும் சித்த மருத்துவர்களுக்கு போதிய ஊக்கம் தரப்படவில்லை. உடனடியாக கோவிட் 19 சிகிச்சையில் சித்தமருத்துவத்தின் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

அரசு துறைகளின் வழியாகவும், தொண்டு அமைப்புகளின் துணை கொண்டும் வீடுதோறும் கபசுர குடிநீர் சூரணம், நிலவேம்பு பொடி, ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட கோவிட் 19-க்கான மருந்துகளை விரிவான அளவில் வழங்குவதற்கு போர்க்கால முனைப்போடு பணிகள் முடிக்கிவிடப் படவேண்டும். சித்தமருந்துகள் என்றதும் மருந்துகளாக மட்டுமே பார்க்கத் தேவையில்லை. உணவே மருந்து, மருந்தே உணவு என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிநாதம். அந்த வகையில், உணவுப் பழக்கம், உணவுகள், உணவு முறைகள் மூலமாகவும் நோய்களுக்கு எதிரான போரை நடத்தும் வகையில் விழிப்பு உணர்வு பரப்புரைகளும் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று சொன்ன வெங்கட்ராமன்,

சித்த மருத்துவமனை``எதிர்காலத்தில் எந்தவிதமான மருத்துவ பேரிடர்கள் வந்தாலும், சித்தமருத்துவத்தின் துணையோடு போராடும் அளவுக்கு அந்தத் துறையைப் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் மிகமிக முக்கியம்'' என்று சொல்லி அதற்கான காரணங்களையும் அடுக்கினார்.
``கொரோனா மட்டுமல்ல, எதிர்காலத்தில் இன்னும் பல நோய்களும் தாக்கக்கூடும். அதேபோல, ஆயிரம் ஆண்டுகளாக பற்பல நோய்களும் இங்கே பரவித்தான் கிடக்கின்றன. அவற்றுக்கெல்லாம் சித்த மருந்துகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். அதாவது, இப்போது உள்ளதைவிட பல மடங்குக்கு சித்தமருந்துகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். மாவட்டம்தோறும் சித்த மருத்துவமனைகளை அரசு நிறுவ வேண்டும். இப்போது உடனடியாக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவை, குறைந்தது 100 படுக்கை வசதி உள்ள பிரிவுகளாக வலுப்படுத்த வேண்டும். அரசு முதன்மைச் சுகாரதார மையங்களில் சித்த மருத்துவர்கள் அன்றாடம் வருகை புரிவதை உறுதி செய்ய வேண்டும்.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் குறைந்தது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு சித்த மருத்துவக் கல்லூரி 100 மாணவர்கள் சேர்க்கைக்கான இடத்தோடு உருவாக்கப்பட வேண்டும். சித்த மருத்துவத்துக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகமும் நிறுவப்பட வேண்டும். இந்த விஷயங்களில் தமிழக அரசு தன் கவனத்தைப் பதிப்பதுதான் தமிழகத்துக்கு நல்லது. காரணம், சித்தமருத்துவம் என்பது நம் மண்ணின் மருத்துவம். இந்த மண்ணில் வாழும் மக்களுக்கு ஏற்ற மருத்துவம். இதை மட்டும் உணர்ந்துகொண்டால் போதும், நான் சொல்வதிலிருக்கும் உண்மைகள் புரிந்துவிடும்’’ என்று கைகூப்பி முடித்தார் வெங்கட்ராமன்.