Published:Updated:

வாழ்வதற்கான சண்டை இது; போரைவிடப் பெரியது’ – 99 வயதில் கொரோனாவை வென்ற இரண்டாம் உலகப்போர் வீரர்

எர்மண்டோ
News
எர்மண்டோ

கொரோனாவிலிருந்து மீண்டும் வரும் ஒவ்வொருவரும்தான் இந்த உலகுக்கான நம்பிக்கை விதைகள்.

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு பெயர். உலகப்பொருளாதாரமே தலைகீழாக மாறியுள்ளது. ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவதா நீட்டிப்பதா என்ன செய்வது எனத் தெரியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது ஆபத்தில்தான் முடியும் என எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா.. சீனாவில் இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைப் பார்க்க முடிகிறது என உலக நாடுகள் வருத்தம் தெரிவிக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில் கொரோனாவிலிருந்து மீண்டும் வரும் ஒவ்வொருவரும்தான் இந்த உலகுக்கான நம்பிக்கை விதைகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டாம் உலகப்போரின் கோரத்தை நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கும் பிரேசில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இந்தக் கொரோனாவுக்கு எதிரான போரிலும் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார். 99 வயதிலும் அசராத நம்பிக்கையுடன் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி மகுடம் சூடி வீடு திரும்பியுள்ளார் Ermando piveta. சக்கர நாற்காலியில் வீடு திரும்பிய எர்மண்டோ தலையில் பச்சை நிற தொப்பி அணிந்து கைகளை அசைத்தவாறு சென்றார். வரிசையாக நின்ற மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு கைதட்டி விடைகொடுத்தனர்.

எர்மண்டோ
எர்மண்டோ

கொரோனாவுக்கு எதிரான இந்தச் சண்டை உலகப்போரைவிட மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. போரில் ஒன்று நீங்கள் சாகடிப்படலாம் அல்லது உயிர்வாழலாம். இதில் ஏதோ ஒன்று நிச்சயம் என போர்க்களத்துக்கு செல்வீர்கள். ஆனால், இங்கு அப்படி இல்லை. நீங்கள் வாழ வேண்டும் என்பதற்காக இந்தப் போர் நடக்கிறது. இதில் நீங்கள் வெற்றியுடன் திரும்பி வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

எர்மண்டோ கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டது குறித்து பிரேசில் ராணுவம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. எர்மண்டோ மற்றொரு போரில் வெற்றி பெற்றுவிட்டார். இந்த முறை புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வென்றுள்ளார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.